- பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
- பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
- பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
- பக்கச் சொல் பதினாயிரம்.
- பசியுள்ளவன் ருசி அறியான்.
- பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
- பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
- பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
- பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
- படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
- படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
- படையிருந்தால் அரணில்லை.
- படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
- பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
- பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
- பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
- பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
- பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
- பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
- பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
- பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
- பணம் உண்டானால் மணம் உண்டு.
- பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
- பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
- பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
- பதறாத காரியம் சிதறாது.
- பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
- பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
- பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
- பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
- பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
- பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
- பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
- பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
- பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
- பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
- பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
- பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
- பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
- பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
- பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
- பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
- பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
- பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
- பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற