திருக்குறள்

அகிலேஷ் யாதவ்... பி.இ. to சி.எம். சீட்!

ந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். இம்மாநில சட்டசபைக்கு மொத்தம் 403 இடங்கள். இதற்கான தேர்தல் ஆறு  கட்டங்களாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்தது.

இந்தத் தேர்தல் அரசியல் பார்வையாளர்களின் மத்தியில் மினி பொது தேர்தல் என வர்ணிக்கப்பட்டது. அதிலும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வரவிருக்கும் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகவும் இருந்தது. 

காங்கிரஸ் கட்சியில் 'யுவராஜா' என வருணிக்கப்படும் ராகுல் காந்தி கிராமம் கிராமமாக, குடிசை வீடுகளுக்குச் சென்று, அவர்களுடன் சாப்பிட்டு, டீ குடித்து, பஸ்சில் பயணம் செய்து என பல 'கிரவுண்ட் ஒர்க்'குகளைச் செய்தார். ஆனால், இதெல்லாம் மீடியாக்களுக்கு நியூஸ் கவரேஜ் செய்ய மட்டுமே பயன்பட்டது என அப்போது அவருக்கு தெரியவில்லை.

சத்தமே இல்லாமல் முலாயம் சிங் யாதவ்வின் மகன் அகிலேஷ் யாதவ் அம்மாநில முதல்வர் பதவி எனும் நாற்காலியில் அமர்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை!

ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் உ.பி. மாநிலத்தின் மீது விழ காரணமாக இருக்கும் இந்த அகிலேஷ் யாதவ் யார்?

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையும், அம்மாநிலத்தின் முப்பத்தி  மூன்றாவது முதல்வராக பதவி ஏற்க இருக்கும் அகிலேஷ் யாதவின் சுயபக்கங்கள் இதோ :

38 வயதாகும் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ்வின் ஒரே மகன். ராஜஸ்தான் மாநிலம் தால்பூரில் பள்ளிப் படிப்பை படித்த அகிலேஷ், கர்நாடகாவின் யுனிவர்சிட்டி ஆஃப் மைசூரில் எம்.இ.சிவில் என்வைரான்மென்டல் என்ஜினியரிங் படித்தார். அதன்பிறகு ஆஸ்திரிலேயாவில் சிட்னி பல்கலைகழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியலில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளின் தந்தை இவர். 

2000-ல் கன்னவுஜ் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதியை 2004 மற்றும் 2009 ஆகிய பொதுத் தேர்தல்களிலும் தக்கவைத்துக் கொண்ட அகிலேஷ், கட்சியின் மாநிலத் தலைவரானார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். "சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் குண்டர்களிடமிருந்து மக்கள் காப்பாற்றப்படுவார்கள்" என உறுதியளித்தார்.

2007 தேர்தலில் மாயாவதியின் கட்சி 203 தொகுதிகளை வென்று தனிப் பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க, தோல்வியைத் தழுவிய சமாஜ்வாடி கட்சியை தூக்கி நிறுத்தும் பொறுப்பு அகிலேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இளைய சமுதாயத்தினருடன் இணைந்து, புதிய சிந்தனைகள், புதிய திட்டங்களுடன் கட்சிக்கு புத்துயிரூட்டினார் அகிலேஷ்.

ஐ பேட், ஐ போன்,  பிளாக்பெர்ரி என கட்சி ஆபிஸ் களைகட்டியது. நாட்டில் நடக்கும் விஷயங்களை புள்ளிவிவரக் கணக்குடன் பேச ஆரம்பித்தனர் அகிலேஷ் குழுவினர்.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் ஆங்கில மொழிக்கும், கணினிக்கும் எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி, இப்போது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டேப்லட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அணுகுமுறையின் பின்னணியில் இருப்பவரும் அகிலேஷ்தான்!

அகிலேஷ் யாதவ் தனது கட்சியிலும் பல மாற்றங்களை செய்து வருகிறார். நன்கு படித்த இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். லக்னோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபிஷேக் மிஸ்ரா ஐ.ஐ.எம். மாணவர் ஆவார்.

மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு சூறாவளிச் சுற்றுப்பயணமாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார் அகிலேஷ்.

இந்த தேர்தலுக்காக அகிலேஷ் கடந்த ஆறு மாதங்களாக ஓயாமல் பிரசாரம் செய்ததன் பலனாக 224 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது சமாஜ்வாடி கட்சி. வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்து நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வர் என்ற பதவியில் அமர்கிறார் அகிலேஷ்.

சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.கள் அகிலேஷ் யாதவை முதலவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இளம்தலைமுறைக்கு வழிவிட்டிருக்கும் முலாயம்சிங் யாதவின் முடிவும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இதே ஃபார்முலாவை மற்ற மூத்த அரசியல் தலைவர்களும் பின்பற்றுவார்களா?

- பானுமதி அருணாசலம்
யூத்புல் விகடன் 

ஒரு காதல் மன்னனின் கட்டுரை ..... 

முதலில் ஒரு பெண்ணை காதலித்தேன்
அவள் முகம் சரி இல்லை என்று முழுதாக
விட்டுவிட்டேன்..

இரண்டாமவளை காதலித்தேன்

அவள் இதயத்தை என்னோடு சேர்த்து இருவருக்கு
பகிர்ந்தவளாதலால் இவளும் வேண்டாமென இறுமாப்பாய் விட்டுவிட்டேன் ...

மூன்றாமவள் காதலை முழுதாக நம்புகிறாள்

பின்னால் பிரச்சனை என்று பிடிவாதமாய் விட்டுவிட்டேன்...

நான்காமவள் காதலை நான் விடவில்லை

என் நடவடிக்கை கண்டு அவளே விட்டுவிட்டாள்...

ஐந்தாமவள் காதலில் பல ஐநூறு நோட்டுகள்

அநியாயமாக செலவு ஆதலால் ஆபத்து என
அவளையும் விட்டுவிட்டேன் ...

எனக்கேற்ற பெண்ணவள் எப்பொழுது தான்

கிடைப்பாளோ என நண்பனிடம் கேட்டால் ,
நறுக்கென்று சில வார்த்தை நாசுக்காய் சொல்லிவிட்டான் ,

காதால் என்ற வார்த்தை கூட கண்ணீர்வடிக்கும்

உன் கலப்படமான காதலை கண்டு , காதலின் அர்த்தம் எதுவென்று அறியாத நீ காதல் என்று சொல்லி ஏன் காதலை கேவல படுத்துகிறாய் ,

என்று அடுக்கடுக்காய் வார்த்தைகள் அடுக்கிகொண்டே போகிறான்,

ஏதோ காதல் என்றால் கடவுள் என்று கடகடவென
கருத்துக்களும் சொல்கிறான்..

யார் என்ன சொன்னால் என்ன ?

என் காதல் பயணம் எத்தனை காதலை சந்தித்தாலும் புதுக்காதலை தேடி என்றும்
புத்துணர்ச்சியுடன் பயணிக்கும்.......

நான் தான் நவயுக காதல் மன்னன்...



எழுதியவர்:ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...