திருக்குறள்

2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம் என்ன?

டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மவுனமாகவே இருந்து, ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர் தமிழக மக்கள்.

எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.

ஒரு ரூபாய் அரிசி, 
50 ரூபாய் மளிகைப் பொருட்கள், 
பொங்கல் பை, 
இரண்டு ஏக்கர் நிலம், 
மகளிர் சுய உதவிக் குழுக்கள், 
இலவச கான்கீரிட் வீடு, 
அவசர சிகிச்சைக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை, 
வாரத்திற்கு ஐந்து முட்டைகள், 
இலவச "டிவி' 

போன்ற எதுவுமே, ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சியை கரை சேர்க்கவில்லை.


விலைவாசி உயர்வும், நிரந்தர மின்வெட்டும், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும், விவசாயிகளின் கண்ணீரும், தேர்தல் என்ற ஒரே சுனாமியில், ஆளும் கட்சி சுழற்றி வீசப்பட்டு விட்டது.

அந்த சுனாமியில், கூட்டணியும், ஜாதி ஆதிக்கமும், பணப்பட்டுவாடாவும், அதிகார துஷ்பிரயோகங்களும், உடன்பிறப்புகளின் அராஜகங்களும், இலவச லேப் டாப்புகளும் கூட காணாமல் போனதென்பது தான் உண்மை.

பணத்தைக் கொட்டி, காலேஜ் சீட்டோ, அரசு வேலையோ வேண்டுமானால் வாங்கிவிடலாம்; ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமையை வாங்கி விட முடியாது என்பதை, அரசியல் கட்சிகள் இனிமேலாவது உணர்ந்து செயல்பட்டால், அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.



- Source.Vedanthngal

தண்டனை......

தண்டனை...... 

எங்கே 
கோவத்தை காட்ட முடிகிறதோ .... 
அங்கே 
அழுகையும் மறைக்க முடியாது .... 
இது உண்மையான அன்புக்கு 
விதிக்கபட்ட தண்டனை........!!!


- ரங்கா

கோடிஸ்வர பிச்சைகாரர்கள் ?

கேரளாவில் மலப்புறம் அருகே பள்ளி வாசல் முன்பு பிச்சையெடுத்து கொண்டிருந்த சென்னை முதியவரிடம் ரூ.1.25 லட்சம் பணம், வெள்ளி மோதிரங்கள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வங்கியில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்திருந்தது தெரிய வந்தது. கேரளாவில் மலப்புறம் மாவட்டம் தேஞ்சிபாலம் அருகே உள்ள பாணாம்புறா வில் ஜிம்மா மஜித் பள்ளிவாசல் உள்ளது. இங்கு நேற்று ஒரு முதியவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் வந்து அவரிடம் இருந்த பை யை பரிசோதித்தனர். அதில் ரூ.1.25 லட்சம் இருந்தது. 8 விலை உயர்ந்த வாட்சுகள், 10 வெள்ளி மோதிரங்கள், மதபிரசங்க சி.டி.கள் மற்றும் பல வங்கி பாஸ் புத்தகங்கள் இருந்தன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. 

விசாரணையில், அவரது பெயர் அப்துல்கனி(70) என்றும், சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்ததால், அவர் திருடனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், முதியவர் அதை மறுத்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.

அரசியல்வாதிகளே.! அப்ப நீங்க எதுக்கு?

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் எதுவும் எங்களிடம் இல்லை.

யங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு, மாநிலங்களுக்கே அதிகம்.

ணவீக்கம் குறைய, பொது வினியோக முறையை, மாநிலங்கள் தான் பலப்படுத்த வேண்டும்.

திநீர் இணைப்பு, சாத்தியமில்லாத ஒன்று! - இவை, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் கூறியவை.

ல்லா பிரச்னைகளையும் மாநில அரசே தீர்க்க வேண்டுமென்றால், மத்திய அரசின் பணி என்ன? எல்லா அதிகாரங்களையும் டில்லியில் குவித்து வைத்து, எல்லா வருமானம், வளங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொண்ட பின், விவகாரங்களை மட்டும், எப்படி, எந்த வகையில் தீர்க்க சொல்கிறது?

விவசாயத்துறை அமைச்சரோ, விவசாயப் பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, கிரிக்கெட் துறையில் மூழ்கி, முத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், ஸ்பெக்ட்ரம் போன்றவைகள் நடந்து கொண்டிருப்பதை, பிரதமர் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார். நன்றி  தினமலர்.

னால், பிரச்னைகளை மட்டும், மாநிலங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். மோசமான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, ஒரு நல்ல தலைமை ஆசிரியரால், நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
ல்ல தலைமை ஆசிரியரான மன்மோகன் சிங் தான், இதற்கு வழி காண வேண்டும்.


Source - வேடந்தாங்கல்

ஆண்களின் உலகம்!


ண்மைக் காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப்போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை நண்பர்களுக்காகச் செல விடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்க இயலாமல் போனதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிர வில் கண்ணீர்விட்ட தோழனுமாக... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப் பேரைக் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டு இருக்கிறது. இது முழுப் பொய் இல்லை. ஆனால், முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ-யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, 27பி-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையோ பேர்! படித்தவர்கள்தான் என்றாலும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. முதல் தலைமுறையில் கல்வி பெற்ற நடுத்தர வர்க்க இளைஞர்கள், நகரங்களில் தடுமாறித்தான் போகின்றனர். 21 வயதில் டிகிரி முடித்து வேலை தேடி வருபவர்கள், டெலி மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப், பி.பி.ஓ., என மெதுவாக மேலே ஏறி ஒரு நிலையை எட்டுவதற்குள் முன் நெற்றியில் முடி கொட்டிவிடுகிறது. இளமையின் எந்த சுகங்களையும் அனுபவித்திடாத முதல் தலைமுறை இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்!  ''காலேஜ் முடிச்சதும் கஷ்டமோ, நஷ்டமோ... எல்லாப் பசங்களையும்போல ரெண்டு வருஷம் ஜாலியா சுத்திரணும்டா, அந்தந்த வயசுல அப்படி அப்படி இருந்திரணும். குடும்ப நிலைமைன்னு வேலைக்கு வந்தோம். எட்டு வருஷமாச்சு. நிமிர்ந்து பார்த்தா, நம்ம வயசு இருக்கும்னு நினைக்குற பசங்க சட்டுனு நம்மளை 'அண்ணா’ன்னு கூப்பிடுறானுங்க. தூக்கி வாரிப் போடுது. அவன் அந்தண்டை நகர்ந்த பிறகு, கண்ணாடி முன் கவலையா நிக்கச் சொல்லுது. என்னிக்காச்சும் ஒரு பொண்ணு, 'அங்கிள்’னு கூப்பிட்டுருமோன்னு பயமா இருக்கு!'' எனச் சிரிப்பவனின் பெயர் பிரவீன். தி.நகர் முருகன் இட்லிக் கடை வாசலிலோ, சரவணபவன் வாசலிலோ அவனை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். தடித் தடியாக டிக்ஷனரி விற்றுக்கொண்டு இருப்பான். மாதம் பிறந்தால் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. மூன்று இருக்கிறது பிரவீனுக்கு! இப்படிப்பட்ட பெரும்பாலானோருக்குப் பின்னால் ஒரு காதல் தோல்விக் கதை இருக்கும். அதற்குக் காரணம், குடும்பமாக இருக்கும். 'குடும்பம் எதிர்த்ததால் காதல் தோல்வி’ என்பது அல்ல... குடும்பத்தின் நிலை அறிந்து, அவர்களே தான் விரும்பிய பெண்ணிடம் காதலைச் சொல்வதுகூட இல்லை. இந்தக் காரணத்தையும் ஆண்கள் வெளிப்படையாகச் சொல்வது இல்லை. காரணம், 'ஆண்’ என்ற கெத்து அவர்களைத் தடுக்கிறது. இணை, இணையாகச் சுற்றுபவர்களைக் காட்டிலும், இப்படி மனதுக்குள் கருகிப் போன காதல்களோடு, வேலை முடிந்த பின்னிரவில் முகம் அறியாப் பெண்களுடன் காதலும் காமமுமாகப் பேசித் திரியும் ஆண்கள்தான் எத்தனை, எத்தனை பேர்?! ஆண்கள் குடும்பத்தைப்பற்றி நினைப்பது இல்லை எனவும், எப்போதும் நண்பர்களுடனேயே சுற்றுகிறார்கள் எனவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நண்பர் களுடன் சுற்றுகிறார்கள்தான். ஏனெனில், ஆண்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் கொண்டது. அதிகபட்சம், இரண்டாவது பியரில் 'ஒரு மேட்டர் மச்சான்...’ என மனசைத் திறந்து சொல்லத் துவங்கிவிடுவார்கள். நட்பு என்றால் நட்பு, பகை என்றால் பகை. இரண்டிலும் 100 விழுக்காடு நேர்மையே ஆண்கள் உலகின் அடிப்படை. உண்மையில் ஆண்களுக்கான பெரிய ஆசுவாசம் ஆண் களேதான். சினிமாவில் சித்திரிப்பதுபோல, பெண்கள் அல்ல!

ஆனால், குடும்பம் என்பது வேறு. அங்கு ஆண் பொறுப்புள்ள நபராக இருக்கவோ, நடிக்கவோ வேண்டியிருக்கிறது. தினம் தினம் குடும்பம் உற்பத்தி செய்யும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை ஆண்கள் தங்கள் நண்பர்களிடமே பகிர்கின்றனர்.
மேன்ஷன் போன்ற இடங்களில் ஆண்களின் உலகத்தை மேலும் நெருக்கமாக அறியலாம். ஏதேதோ திசையில் இருந்து ஓர் அறையில் அறிமுகம் இன்றி வந்து தங்கும் இளைஞர்களுக்கு இடையேயான நட்பின் அடர்த்தி, கூடக் குறைய இருக்கலாம். ஆனால், யார் ஒருவரும் மற்றவர்களைச் சாப் பிடாமல் தூங்கவிடுவது இல்லை. மாசக் கடைசியில்கூட, 'உனக்கு இதே வேலையாப் போச்சுடா!’ எனத் திட்டிக்கொண்டேயாவது ஒரு முட்டை பரோட்டா பார்சல் வாங்கி வந்துவிடுவார்கள்.
இப்போது நிறைய ஐ.டி. இளைஞர்கள் இரவையும் பகலையும் கடந்து வேலை பார்க் கின்றனர். அதிக சம்பளம், அதை அவர்கள் செலவழிக்கும் விதத்தால் வீட்டு வாடகை உயர்வு போன்ற பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம். ஆனால், அவர்களை வீடும் உறவும் உண்மையில் பணம் காய்க்கும் எந்திரமாக அல்லவா பார்க்கின்றன. ஐ.டி. இளைஞர்களின் புதிய வாழ்க்கை முறை, வீட்டுக்கும் உறவு களுக்கும் கலாசாரரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், அவர்கள் ஈட்டும் அதிகப் பணமே அதற்கான அங்கீகாரமாக மாறுகிறது.
ஆனால், ஐ.டி. வேலை எல்லோருக்கும் கிடைப்பது இல்லையே?! தமிழ்நாடு முழுவதும் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாகப் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை யாராலும் இன்னும் பேசப்படவில்லை. அவர்கள் என்ன சரக்கு விற்கவா கல்லூரியில் படித்துவிட்டு வந்தார்கள்? 'இதுவும் ஒரு வேலையே’ என அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பொதுச் சூழல் அவ்வாறு இல்லை. திருமணத்துக்குப் பெண் அமைவது முதல் மணமான வாழ்வின் தின வாழ்க்கை வரை எல்லாமே சங்கடங்கள். 'உன் வீட்டுக்காரர் எங்கே வேலை பாக்குறார்?’ எனக் கேட்டால், அவர்களின் மனைவிகள் என்ன பதில் சொல்வார்கள்? நிச்சயம் அவர் கள் ஏதேனும் ஒரு பொய் சொல்லவும், அது அம்பலப்படும்போது சங்கடமாகத் தலை அசைக்கவும் இந்நேரம் பழகியிருப்பார்கள்.
கிருஷ்ணகுமார் என்ற நண்பருக்கு 35 தாண்டிய வயது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தில் இருந்து தினமும் சென்னை வடபழனிக்கு வேலைக்கு வருகிறார். வீட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள், அங்கே இருந்து கிண்டி வரை மின்சார ரயில், கிண்டி டு வடபழனி நகரப் பேருந்து... மாலை வீடு திரும்புகையில் இதே சுற்று பஸ்-டிரெயின்-சைக்கிள் என்பதாக முடியும். காலை 6 மணிக் குக் கிளம்பினால், இரவு வீடு திரும்ப 10 மணி ஆகும். உழைக்கும் எந்திரமாக மாறிவிட்டார். இரண்டு ரூபாய் அதிகம் என்பதனால், இஞ்சி டீ கூடக் குடிக்க மாட்டார்! டிராஃபிக் அதிக மாகி இருந்த நாள் ஒன்றில், என் வண்டியில் கிண்டி வரை வந்தார்.
தனக்கு ஒரே ஒரு தங்கை எனவும், அவளைத் திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கடுமை யான பிரச்னை எனவும் சொன்னார். நான் அதிகம் கேட்கவில்லை.
''ரொம்பப் பிரச்னை ஆயிடுச்சு சார். வேற வழி இல்லாம டைவர்ஸ் வாங்கினோம். ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு இப்போ தான் இன்னொரு பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சேன்!'' என்றவரிடம் பெரிய ஆசுவாசம் தெரிந்தது.
இந்த வயதில்தான் அவர் குடும்பப் பொறுப்புகளில் இருந்து விடுதலை ஆகியிருக் கிறார். ''நீங்க எதுவாச்சும் ஆகணும்னு ஆசைப்பட்டீங்களா?'' என்றேன். சிரித்தார். ''ஆசைக்கு என்ன சார், இப்போகூட ஆசைப்பட்டுக்க வேண்டியதுதான். ஆசைதானே?!''
உண்மையில் வரதட்சணை, வீண் ஆடம்பரம், நகைகளை வாங்கிச் சேர்ப்பது போன்றவை ஆண்களை நசுக்கிப் பிழிகிறது. அதற்கேற்ற வகையில் சம்பாதிக்க முடியாமல் போனால், வாழவே தகுதி இல்லையோ என அவர்களைக் குற்றவுணர்வு அடையவைக்கும் அளவில்தான் இருக்கிறது சூழல். நமது மோசமான குடும்ப அமைப்பு, உறவுகளாலும், அதைவிட அதிகமாக பணத்தாலும் பின்னப்பட்டு இருக்கிறது. அந்த பாரத்தை ஆண்கள் விருப்பப்பட்டு அல்ல, வருத்தப்பட்டே சுமக்கின்றனர்.
நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், ஊர் மெச்சும் வாழ்வு... இவை எல்லாம் தர முடியாத ஆண், தரக்குறைவானவன் என பொதுப் புத்தி நினைக்கிறது. கிடைக்கும் வேலையைச் சரியாகச் செய்து, வரும் வருமானத்தில் திருப்தியுடன் வாழ்வதை யாரும் விரும்புவதும் இல்லை, பரிந்துரைப்பதும் இல்லை!
ஊரில் நிலத்தை, நகைகளை அடகுவைத்து ஏஜென்ட்டிடம் பணம் கட்டி சிங்கப்பூரிலும், வளைகுடா நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வேலை பார்ப்பவர்கள் லட்சங்களைத் தாண்டுவார்கள். முதல் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து, வெளிநாடு செல்வதற்கு வாங்கிய கடனை அடைப்பார்கள். ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து கோடாலித் தைலமும், சென்ட் பாட்டிலும் பரிசளித்துவிட்டு, மறுபடியும் ஃப்ளைட் பிடித்தால், அடுத்த இரண்டு வருட வருமானம் வீடு கட்டவே போதாது. அப்புறம் தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம் என முடித்து நிமிரும்போது, அப்போதுதான் உள்ளூரில் நல்ல விலைக்கு நிலம் விலைக்கு வரும். கடன் வாங்கி அதை வாங்கிவிட்டு, கடல் கடந்தால், அதற்கு இரண்டு வருடங்கள். இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து திருமணம் முடித்து, தாம்பத்தியம் நடத்தி வெளிநாடு போனால், சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கையில் முகத் தோல் தடித்து, கன்னக்கதுப்புகளில் முதிர்ச்சி படிந்து இருக்கும்!
இவை எவற்றையும் பாரமாகவும் துக்கமாகவும் எந்த ஆணும் நினைப்பது இல்லை. ஆனால், இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, ஆணை விமர்சிக்கவும், ஒதுக்கித்தள்ளவுமான கருவியாக எல்லோரும் கைக்கொள்வது, அவனது ஒழுக்கத்தை. குறிப்பாக, 'சாராயம் குடிக்கின்றனர், சிகரெட் பிடிக்கின்றனர்’ என்பது. உண்மையில், இவை உடல்நலம் கெடுக்கும் தவறான பழக்கங்களே.
ஆனால், சமூகத்தில் ஓர் ஆணின் நல்மதிப்பை அளவிட இவற்றை மட்டுமே அளவுகோல்களாகக் கருத முடியாது. காஞ்சிபுரத்தில் இறைவன் சந்நிதியில் பெண்களுடன் சல்லாபம் நடத்திய தேவநாதனுக்கு சாராயம், சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. ஊரே சிரிக்கும் நித்யானந்தாவுக்கு டீ குடிக்கும் பழக்கம்கூட இல்லையாம். இந்த ஆண்களின் சமூக மதிப்பை எப்படி வரையறுப்பது?
ஆண்களை Victim-களாகச் சித்திரித்து அவர்களின் ஆதிக்கத்தன்மையை நியாயப்படுத்துவது அல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். மேற்சொன்ன ஆண் துயரங்கள் போன்றவை இன்னும் அதிக விழுக்காட்டில் பெண்களுக்கும் உண்டு. ஆணின் உலகை இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் புரிந்துகொள்வோம் என்பதே இந்தக் குரலின் அடிநாதம்!

Source - Vikatan

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?


சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?


மானமிகு கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து 
பிராண்டுகிறார்? 

மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?


ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்? 

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?


ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்? 

ராமன்தான் பெரியவன் - மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்? 

சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்? 

ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா? 

இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்? 

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியதில்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.


மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? 
இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் 
இவ்வளவுப் பெரிய தடபுடல்! 

ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் 
பெரிய விளம்பரம்.


அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் 
என்பதைப் புரிந்துகொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான
காரணம் சாங் கோபாங்கோமாக பஷ்டமாக பளிச்சென்று 
புரிந்து விடும். 

இதோ ஓர் எடுத்துக்காட்டு: 

கேள்வி: எனக்கு முன்னாள் இருந்த அமைச்சர்கள் என்ன ஃபார்முலாவைக் 
கடைப்பிடித் தார்களோ, அதையேதான் நான் கடைப்பிடித்தேன். நான் 
குற்றமற்றவன் என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?

சு.சாமி: ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் என்ன 
செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு 
செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன். 

--------------(குமுதம் ரிப்போட்டர் 5.12.2010 பக்கம் 43) 

இராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க., அமைச்சர்கள் என்ன செய்தார்கள்
 என்பது அவருக்குத் தேவையில்லையாம், ஏன் தேவையில்லை? 
விளக்கம் அளித்தாரா? 

விவாதம் புரிந்தாரா? 

அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது. 

பா.ஜ.க. அமைச்சர் தவறு செய்தால் அதைப்பற்றி அவருக்குக் 
கவலையில்லையாம்!


இராசா தவறு செய்தாராம், அதைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம். 

பா.ஜ.க. வைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் 
அவர்களைப் பற்றிப் பேசுவார்களா? 

பாரதீய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனீயத்தைப் பதியம் போட்டு 
வளர்க்கும் கட்சியாயிற்றே. அதன்மீது தூசு விழலாமா? அப்படி 
விழுந்தால் அதனைப்பொறுத்துக்கொள்ளத்தான் இவர்களால் 
முடியுமா? 

அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ். காரர் இவர் என்று எழுதுவது 
ஏனோ தானோ என்ற முறையில் அல்ல. அவரே வாக்கு மூலம் 
கொடுத்திருக்கிறார். அதுவும் எந்த இதழில்? அவாளின் 
ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதத்தில்
 (ஏப்ரல் 14, 2006) 

ஈரோட்டில் நடந்த வி.இ.பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே 
அரசியல்வாதி நீங்கள்? 

அரசியல்வாதியாக நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. 
ஒரு இந்து என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் 
கலந்துகொண் டேன். நான் வி.இ.பரிஷத் மேடைகளில் பேசுவது 
புதிது அல்ல. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு கடந்த 
2ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான வி.இ.பரிஷத் மேடைகளில் 
நான் பேசியிருக்கின்றேன். 

ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்கள் அபிப்ராயம்? 

நான் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக 
இருந்திருக்கிறேன். ஆர்கனைசர் வார இதழில் பல கட்டுரைகளை 
எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். 
இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னால் நன்கு அறிந்துகொள்ள 
முடிந்தது. நாட்டில் இந்து மனப்பான்மையை ஏற்படுத்துவதில் 
ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது.

-------------------------(விஜயபாரதம், 14.4.2006) 

இந்தப் பேட்டி பற்றி விளக்கவா வேண்டும்-விளக்கம் தேவையா 
இந்த பேட்டிக்கு? 

பெயர் - ஜனதா கட்சியின் தலைவர்- ஆனால் அவர் அடிப்படை 
உணர்வு என்பதோ ஆர்.எஸ்.எஸ். விசுவ ஹிந்து பரிசத் உள்ளிட்ட 
சங்பரிவார் பக்கம். 

இப்படிப்பட்டவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்து கொள்வார்? 
அப்படியே பேசுகிறார்- 
அப்படியே நடந்து கொள்கிறார். 

காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு அவர் மீது ஆர்வம் 
பீறிட்டுக் கிளம்பிவிட்டதாம். 2 ஆண்டுகளில் 20 விசுவஹிந்து 
பரிஷத் கூட்டங்களில் கலந்துகொண்டு முழங்கி இருக்கிறார். 

ஜெயேந்திரர் கைதுக்குக் காரணம் சோனியாவாம்-ஜெயலலிதா 
இல்லையாம். சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக ஜெயேந்திரரைக் 
கைது செய்தாராம் ஜெயலலிதா (ஜெயலலிதாவுக்கே உபயம்!). 

சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக எதற்காக ஜெயேந்திரரைக் 
கைது செய்ய வேண்டுமாம்? அப்படி எல்லாம் அவரைப் பார்த்துக் 
கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால் நான் யார் தெரியுமா, ஹார்வேடு 
பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துபவன் என்று தலைக்கனத்துடன் 
பேசுவார். 

அமர்த்தியா சென்னுக்கும் நோபல் பரிசு கிடைத்ததே, கிறிஸ்துவ 
சதி என்று சொன்ன கூட்டம் அல்லவா. அதே ஆர்.எஸ்.எஸ். பாணியில் 
ஜெயேந்திரரைக் கைது செய்ததற்கும் காரணம் சோனியா காந்தியாம். 

அப்படி யென்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் 
கொலையேசெய்யப்பட வில்லை - கொலை செய்யப்பட்டதாக சொல்வது 
எல்லாம் சோனியாவின்பிரச்சாரத் தந்திரம் என்று சொல்லுவதற்குக் கூட 
கூச்சப்படாத ஜென்மம் இது! இவ்வளவுக்கும் காஞ்சி சங்கராச்சாரி 
ஜெயேந்திர சரஸ்வதி மீதான குற்றம் சாதாரணமானதா? 

இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, 
பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-
இவையெல்லாம் குற்றம் இல்லையாம்! 

இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து 
வாங்குவாராம்;
20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் 
ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் 
பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது! 

கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் 
சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் 
தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு 
முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், 
பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து 
கிடைத்தன என்னும் விவரங்கள் 
விவரமாகவே தெரியும். 

முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது.


----------------மின்சாரம் "10-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை 

கடவுளாக ரோட்டோர எல்லை கல்:பெயர் தெரியாமலே வழிபாடு

ராமநாதபுரம்:ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர்.சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.
வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர். நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர். சத்திரக்குடியை சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது. இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும், என்றார்.
பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை கற்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குள் அதை கடவுளாக்கி வழிபாட்டு முறையையும் கொண்டு வந்ததை அப்பகுதி பகுத்தறிவாளர்கள் ஏற்கவில்லை. "விளையாட்டாக யாரோ செய்த செயல், தற்போது கடவுள் நம்பிக்கையாக மாறிவருவதாக,' சிலர் கூறினர். ""கடவுளாக பாவித்தாலும் இதுவரை அதற்கு பெயர் வைக்காமல் விட்டு வைத்ததே,''ஆறுதல்பட வேண்டிய விசயம்.

நன்றி-தினமலர்

"வாருங்கள் ஸ்டாலின்.... பதவி ஏற்க!!!

தமிழக அரசியலை, ஆட்சி பீடத்தை அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆக்கிரமிக்கப் போகும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளை இனம் காணும் ஒரு நேர்மையான அலசல் தான் இந்தப் பதிவு.  வேறு எந்த விதமான சார்பு நிலையோ, உள்குத்தோ. நுண்ணரசியலோ இதில் இல்லை என்று அடித்துக் கூவு(று)கிறேன்.

இந்தியா குடியரசு ஆன பிறகு, கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், வெறும் ஐந்து பேர் மட்டுமே (இதில் ஜானகி, ஓ.பி.எஸ் இவர்களை சேர்க்கவில்லை)  'முதல்வர்' பதவியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப் போனால் அடுத்த ஐந்து ஆண்டுக்கான போட்டியில் கூட இந்தப் பட்டியலில் இருந்து தான் இருவர், முதல் இரண்டு ரேங்க்கில் இருக்கிறார்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், சூழ்நிலை, இன்னபிற எல்லாம் உயர்ந்திருக்கிறதா அல்லது தாழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால், இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது உடனடியாக மோசம் என்றும் கூறிவிட முடியாது, அதே சமயம் நற்சான்றிதழும் அளித்து விட முடியாது என்பது தான் நிதர்சனம்.

ஆக தமிழக மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அலுப்பு தட்டியிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. கொஞ்சம் இளமையாக, சுறுசுறுப்பாக, நீண்ட ஆட்சி முறை அனுபவம் உள்ளவராக, படிப்படியாக எல்லா நிலைகளையும் கடந்து அந்தந்த நிலைகளில் அனுபவம் பெற்றவராக,  இதுவரை கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாகவும், திறமையாகவும், மக்கள் பாராட்டும் படியாகவும், ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இதுவரை எழாத வகையில் செயல்பட்டிருப்பவராகவும், மக்களோடு மக்களாக கீழிறங்கி.. திட்டங்களை குறித்த காலத்திற்கு முன்னதாகவே நிறைவேற்றும் சாதுர்யம் கொண்டவராகவும், மக்கள் பிரதிநிதிகள் சபையில் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு புள்ளி விபரங்களுடன் உடனுக்குடன் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவும், எதிர்க்கட்சியினரை வார்த்தைகளால் நோகடிக்காமல் தனிநபர் தாக்குதலின்றி பேசும் தன்மை கொண்டவராகவும்.... இப்படியே இதே ரீதியிலான இன்னும் பல 'வும்' முக்கு சொந்தக்காரராக தள்ளாட்டமின்றி சுறுசுறுப்புடன் நடக்ககூடிய, ஓடக்கூடிய ஒருவர் முதல்வரானால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம் தமிழக மக்கள் அனைவருக்குமே வந்திருப்பது உண்மை தான்.

இது தான் சரியான தருணம். நடந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, படிகளில் ஏற்றி மேலே கொண்டுவரும் சக்தி கொண்ட ஒருவரை முதல்வராக அடையாளம் காணவேண்டிய காலகட்டத்தில் தான் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம். சரி இப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கும் போட்டிக் களத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்று இப்பொழுது பார்ப்போம்.

இன்றைய நிலையில் இந்தப் போட்டியில் சில முக்கியமான கட்டங்களை தாண்டி, ஆட்டத்தில் இருப்பதாக மக்களால் உணரப்படுகிறவர்கள் துரதிருஷ்டவசமாக இருவர் மட்டுமே. ஒன்று விஜயகாந்த், மற்றொன்று ஸ்டாலின். இந்த ஆட்டத்தில் மிக முக்கிய போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய வைகோ, ஏதோ ஒரு பிடிவாதத்தில் தன்னைத்தானே புதை குழிக்குள் சிக்கவைத்துக் கொண்டு தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஏன் அடைய விரும்பிய ஒரு லட்ச்சியத்திற்கு கூட விடியலை இன்னும் கானல் நீர் தூரத்திலேயே வைத்திருக்கிறார். பல நாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும், தத்துவங்களையும் கரைத்துக் குடித்திருக்கும் வைகோ, இந்த வலைப்பூவின் தலைப்புக்கு கீழே உள்ள பில் கேட்ஸின் வார்த்தைகளை படித்து நடந்திருந்தால், இன்று வெற்றிக் கோட்டையின் நுழைவாயிலில் முதல் ஆளாக நின்றிருந்திருப்பார்!

மேற்சொன்ன இருவரை தவிர்த்து வருங்கால இளம் தலைமுறை தமிழக முதல்வர் போட்டிக்கு 'நானும் ரௌடி தான்' ஸ்டைலில் சக போட்டியாளராக களத்தில் நிற்பவர்கள் என்று பார்த்தோமானால், டாக்டர் அன்புமணி ராமதாஸ், சீமான், கனிமொழி, நடிகர் விஜய், சரத்குமார், கார்த்திக் சிதம்பரம், யுவராஜ், கார்த்திக், ... இப்படியாக சொல்லும் போதே வாயை மூடிக்கொண்டு சிரிக்கும்படியான பட்டியல் தான் நினைவுக்கு வருகிறது!

எனவே இன்றைய நிலவரத்தை வைத்துப் பார்த்தோமானால், விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் இருவர் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழக முதல்வர் பதவியை ஆக்கிரமிக்கப் போகும் போட்டிக் களத்தில் நிற்கிறார்கள். மேற்சொன்ன பட்டியலில் இருந்தோ அல்லது புதிதாக முளைத்தோ ஓரிருவர் வருங்காலத்தில் (இன்னும் 5 வருடத்தில்) இந்தப் போட்டிக்கு தகுதியானவர்களாக வருவார்களேயானால், அது ஆரோக்கியமான தமிழக அரசியலுக்கு வழிவகுக்கும் என்றே நினைக்கிறேன்.

சரி இப்பொழுது உள்ள போட்டியாளர்களில் முதலாவதாக விஜயகாந்த் ஐ பார்ப்போம். தமிழக வாக்காளர்களில் பெறும்பான்மையானவர்கள், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாக ஒரு பலம் வாய்ந்த தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, சென்ற தேர்தலில் வாராது வந்த மாமணி போல் வந்தவர் தான் விஜயகாந்த். அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அவர் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

அது வரை எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த அடிக்கு அவர் முன்னேறினாரா என்று கேட்டால் அவரே கூட இல்லை என்று தான் சொல்வார். இப்பொழுது கூட சென்ற தேர்தலில் தான் பெற்ற வாக்கு சதவிகிதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, வரும் தேர்தலில் தன் கட்சிக்கு கூடுதலாக இவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று பேசவில்லை. தன் கட்சி சார்பாக தனக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை கொஞ்சம் கூட மதிக்காமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓரிரு முறை மட்டுமே சட்டசபைக்கு சென்றுள்ளார்.

கேட்டால் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் எல்லாம் இதே தவறை செய்யவில்லையா? என்று கேட்பார். உண்மை தான். அவர்கள் யாருமே முதல் முறை எம்.எல்.ஏ ஆன போது இந்த தவறை செய்யவில்லை. மேலும், குறைந்த பட்சம் அவர்கள் கட்சிக்காரர்களாவது ஒத்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஒரு நியாயத்தை கற்பித்துச் சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி என்ன சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டு சட்டசபை செல்வதை தவிர்த்தார்? சரி ஒரு ஒழுங்கான எதிர்க்கட்சி தலைவராகவாவது நடந்து கொண்டாரா? ஜெயலலிதா செய்வதைப் போல் ஒரு எதிரிக் கட்சி தலைவராகத்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கிறார்!

இவர் செய்ததை எல்லாம் தான் ஏற்கனவே ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறாரே. அந்த இருவருக்கும் மாற்றாகத்தானே மக்கள் இவரைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் செய்வதையே இவரும் செய்தால் மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்கனம் மீண்டும் இவரை ஆதரிப்பார்கள்? சரி எம்.ஜி.ஆர். -ன் பிரதிபிம்பமாக தன்னை காட்டிக்கொள்ள விரும்பும் இவர், அவரைப் போன்ற மேடை நாகரீகத்தையோ, கட்சித் தொண்டர்களிடமுமான அணுகுமுறையையோ கடைபிடிக்கிறாரா?

இதே ரீதியில் தனிப் பதிவே போடும் அளவிற்கு, விஜயகாந்த் தனது கட்சியின் வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதை தவிர்த்து வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்ற விஷயங்களைப் பட்டியலிடலாம்.

அடுத்த போட்டியாளரான ஸ்டாலினைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இந்தப் பதிவின் நான்காம் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்தாலே பாதி விஷயங்கள் விளங்கிவிடும். அடுத்த 20 வருடங்களுக்கான தகுதியான தமிழக முதல்வர் போட்டியின் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான் என்று! இதைப் படிக்கும் பொழுது இது ஒரு 'சார்புநிலை' வாதம் என்று எண்ணுபவர்கள், இந்த இடத்திற்கு தற்பொழுதைய நிலையில் வேறு ஒருவரை பொறுத்தி வாதிட்டால் பதில் கூற நானும் தயாராயிருக்கிறேன்.

எமர்ஜென்ஸிக்கு முன்னதாகவே ஆரம்பித்து, சற்றேரக்குறைய 37 வருட கால முழுநேர அரசியல் அனுபவம்; ஒரு புது கட்சியை ஆரம்பித்து நடத்துவது போல தி.மு.க வின் இளைஞர் அணியை ஆரம்பித்து, கட்டமைத்து, அதற்கென்று தனி அலுவலக கட்டிடம், அணிவகுப்பு, மாநாடு, இத்தியாதி, இத்தியாதி என்றெல்லாம் வளர்த்து, அதன் பொருப்பாளர்கள் பலரும் இன்று ஆட்சிப் பொருப்பிலும் பங்கேற்கும் நிலையினை ஏற்படுத்தி, சுதந்திர இந்தியாவில் அறுபது ஆண்டுகால பழமையான பிராந்திய கட்சி இன்றைக்கும் மங்காத பொலிவுடன் செயல்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது ஸ்டாலின் ஈன்றெடுத்து வளர்த்த அந்த இளைஞரணி தான் என்பதை தி.மு.க தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர்வரை எவரும் மறுப்பதற்கில்லை.

கருணாநிதியின் மகன் என்ற காரணத்தால் தான் இப்படி வளர்ந்தார் என்பவர்களுக்கு, கருணாநிதியின் மற்ற பிள்ளைகளுக்கு இப்படியொரு பொறுமையும், நிதானமும் இருந்ததில்லை என்பதோடு இப்பொழுது களத்தில் நிற்பவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதைப் பற்றிய பதிவல்ல இது என்பது தான் என் பதில்.

தான் சென்னை மாநகர மேயராக பொறுப்பிலிருந்த போதாகட்டும், உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆற்றும் பணியாகட்டும், துணை முதல்வராக அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் பாங்காகட்டும், இதில் எங்குமே தாந்தோன்றிதனமாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டோ, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டதாக பேச்சோ அடிபடவில்லை. சென்னையில் கட்டிய மேம்பாலங்களில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்து, கட்டிய பாலங்களை உடைத்து பரிசோதித்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் திருவாளர் பரிசுத்தமாக விடுதலை ஆனார்.

வெளிநாட்டு தொழிற் குழும பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பெரிய பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவர அவர் காட்டும் ஆர்வம், அவர் ஆளுகையின் கீழ் தமிழகம் வந்தால் தொழில் துறையில் தமிழகம் தன்னிறைவடையும் என்பது திண்ணம். 'சிங்காரச் சென்னை' என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரபலமாக்கிய அவர் ஆட்சிப் பொறுப்பேற்றால் கூவம் ஆற்றில் குட்டிக் கப்பல் ஓடலாம், மெட்ரோ ரயில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப் படலாம்,.... இப்படியே இன்னும் பல 'லாம்' கள் சேர்ந்து சென்னை சொர்க்கமாக மாறுமா? மாறாதா? என்பதை... ஸ்டாலின் மனோநிலையை நன்கு அறிந்த சென்னை வாசிகளின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்!

ஏனென்றால் கே.ஏ.கே. மறைவிற்குப் பின் நடந்த ஒரு தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் என்ற முறையில் 'சோ' அவர்களிடம் பேட்டி கண்ட பொழுது, கருணாநிதியை முழுமையாக எதிர்த்தாலும், எங்கள் தொகுதிக்கான சிறந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஸ்டாலினை ஆதரிப்பதாக சொல்லியிருந்தார். அதேப்போல் சுனாமி நிவாரண நிதியை வீண் கௌரவம் பார்க்காமல், நேரில் சென்று, காத்திருந்து ஜெயலலிதாவை சந்தித்து கொடுத்தது... இவை எல்லாமே எதிர்ப்பாளர்களிடமும், எதிரிகளிடமும் தன்னுடைய நிதானமான, தெளிவான செயல்பாடுகளால், தமிழகத்தின் பொது பிரச்சினைகளான இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு, போன்ற இன்னபிற பிரச்சினைகளில், முக்கிய எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சியினருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கோரிக்கைகளை ஒரே குரலாக தமிழகத்திலிருந்து எழுப்பி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் உண்மையான நியாயம் கிடைக்கப் போராடும் தலைவராக திகழ்வார் என்பதை காட்டுகிறது.

கருணாநிதியால் தான் ஸ்டாலின் வளர்ந்தார் என்பது ஒரு கோணத்தில் உண்மை என்றாலும், அதுவே தான் அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை என்பதையும் மறுப்பதற்கில்லை. இப்பொழுது கருணாநிதி அமைச்சரவையில் ஒரு மந்திரி என்ற வகையில் அவர் தன்னுடைய கடமைகளை உள்ளாட்சியில் மிகத்திறமையாகவும், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, கிராமத்துப் பெண்களிடம் பெரிய அளவிற்கு அபிமானத்தையும், ஆதரவையும் பெற்ற நபராகத் திகழும் அளவிற்குமாகவும் செயல்படுகிறார்.

வறுமையில் பிறந்து, வளர்ந்த கருணாநிதிக்கு பணமும், பதவியும் ஒரு லட்சியக் கனவாக இருந்து, அதற்காக பல சமயங்களில் மக்கள் நலனுக்கு எதிராக சமாதானங்களை செய்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் செல்வத்தில் பிறந்து, முழுநேர அரசியலுக்கு வந்தபின்பும், எம்.எல்.ஏ வாக இருந்தும்,  12 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்தும், கடந்த ஐந்து வருடங்களாக மட்டுமே அமைச்சர் பதவியில் இருக்கும் ஸ்டாலின், அதற்கெல்லாம் மசிபவராகத் தெரியவில்லை. அவருக்குத் தேவை பேர், புகழ் அவ்வளவுதான். இதுவரைக்குமான அவரது செயல்பாடுகள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

மேலும் சில தினங்களுக்கு முன் கருணாநிதி, அடுத்த முதல்வராக வர தனக்கு விருப்பமில்லை என்று சற்றுத் தெளிவாகவே அறிவித்து விட்டார். வரும் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று தெரியவில்லை.என்றாலும் 'இது ஒன்று மட்டுமே களம் இல்லை',  நிறையவே இருக்கின்றன, ஆதலால் "வாருங்கள் ஸ்டாலின்..... பதவி ஏற்க!!!
 
- Source - Kokarokoooo

சீமான் – சீரியசா? காமெடியா?


சீமான் – சீரியசா? காமெடியா?

சீமானின் தமிழுணர்வையோ, அவரது ஈழ ஆதரவையோ குறை சொல்வதல்ல என் நோக்கம்..
ஆனால் அவர் செய்வது சொல்வது எல்லாம் அவரை ஒரு சுயநலவாதியாகவே காட்டுகிறது.. சினிமாவில் ஓய்வு பெற்றவர்களும், வெற்றி பெற முடியாதவர்களும் அரசியலை நோக்கிப் பார்வையைத் திருப்புவது இயல்பு.. சீமானும் அதே பாணியில், கலைஞரைத் தாக்கிப் பேசினால் மக்கள் நம்மைத் திரும்பிப்பார்ப்பார்கள், அப்படியாவது 2011ல் இல்லாவிட்டாலும் 2016ல் ஆவது நம் கட்சியை ஒரு சக்தியாக மாற்றிவிடலாம் என நினைக்கிறார்..
கலைஞரைக் குறை சொல்லும் அவர் ஈழத்திற்காகக் கலைஞர் செய்த தியாகங்களை மறைத்துவிட்டு ஏதோ தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என்பதைப் போல் பேசுகிறார்….சீமான் அவர்கள் சினிமாவில் முயன்று கொண்டிருக்கும்போதெல்லாம் ஈழம் பற்றி ஏன் பேசவில்லை… சீமான் ஈழம் பற்றி முதல் அறிக்கை விட்ட நாளன்றுதான் ஈழப் பிரச்சனை உருவானதா?
ஈழம், புலிகள், தமிழ் தேசியம் என மக்கள் முன் வீர வசனம் பேசிவிட்டு, இந்த மூன்றுக்குமே எதிரியான ஜெயலலிதாவை ஆதரிப்பேன் எனக் கூறுவது அரசியல் பித்தலாட்டமா? அல்லது அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டும் தெரிந்த ரகசியங்கள் எதுவும் உள்ளதா?
அப்பாவித் தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறிக் கொண்டே, தமிழகத்தில் சிங்களவன் எங்கே படித்துக் கொண்டிருக்கிறான், எங்கிருக்கிறான் என்று தெரியும், பட்டியல் இருக்கிறது என்றாரே…இது தான் வீரமா? அந்த சிங்கள மாணவர்கள் அப்பாவிகள் இல்லையா? ராஜீவ் படுகொலைக்காக அப்பாவித் தமிழர்களைக் கொல்கிறார்களே எனச் சொல்லிக் கொண்டு, ராஜபக்க்ஷேவின் தவறுக்காக அப்பாவி சிங்கள மாணவர்கள் மீது வன்முறையைத் தூண்டுவது தவறில்லையா?
சாதி அடையாளம் பூசிக் கொள்ளத் தயாரான உங்களை எப்படித் தமிழர்கள் பொதுவானவராக ஏற்றுக் கொள்ள முடியும்…
அரசியலில் ஈடுபடாமல் மக்கள் இயக்கமாக, ஈழ மக்களுக்கு ஆதரவு திரட்டும் அமைப்பாக இயங்கியிருந்தால் உங்கள் பின்னால் மக்கள் அணிதிரண்டிருப்பார்கள்….
அரசியல் ஆதாயம் தேடி, ஈழத்தை வைத்து இங்கு அரசியல் நடத்துபவர்கள் எல்லாம் ஒரு வகையில் சுயநலவாதிகளே…
Source
- தமிழ்குரல்

தயவுசெய்து அறிக்கை எழுதித்தருபவரை மாற்றுங்கள் – அம்மாவுக்கு மனம் திறந்த கோரிக்கை




அம்மையார் கொசுக்கடிப்பதற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பதும், அறிக்கை விட்டுக் கழகத்தினரைத் தட்டியெழுப்புவதும், பின்னர் மீண்டும் உறங்கி ஓய்வெடுக்க மலையேறுவதும், அங்கிருந்தே தமிழக மக்களுக்காக உழைக்கிறேன் என சவடால் அறிக்கை விடுவதும் வாடிக்கையானதே…
அம்மையார், தனிப்பட்ட ஜெயலலிதாவாக இருந்து இத்தகைய காமெடி அறிக்கைகள் விட்டால் கவலைப் படப் போவதில்லை.ஆனால் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்னும் கேபினட் அந்தஸ்து பதவியில் இருந்து கொண்டு வெள்ளந்தியாக அறிக்கை விடுவதும், அதற்கு விவரமாக முதல்வரோ, துணை முதல்வரோ, அமைச்சர்களோ கேள்வியெழுப்பினால், பதில் சொல்லாமல் அடுத்த அறிக்கை விடுவதும் மக்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும் வருத்தமளிக்கத்தான் செய்கிறது.
அம்மையார் பன்மொழிப் புலமை பெற்றவராயினும், தமிழில் எந்த ஒரு மேடையிலும், ஒரு பொதுக்கூட்டத்திலும், ஒரு தேர்தல் பிரச்சாரத்திலும் எழுதியதை (யாரோ?) வாசிக்காமல், தானாகவே பேசியதை நான் இதுவரை பார்த்ததில்லை..
இரண்டு நாட்கள் இடைவெளியில் “கருணாநிதி காங்கிரசை பிளாக் மெயில் செய்கிறார்” என்றும், “கருணாநிதி காங்கிரசைக் கண்டு பயப்படுகிறார்” என்றும் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டு சாதனை படைத்த அம்மையார்,
கிருஷ்ணகிரியில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காத தி.மு.க. அரசைக் கண்டித்து, ஜனவரி 10ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
10 ஆண்டுகள் முதல்வராக இருந்தவருக்கு, தேசிய நெடுஞ்சாலைப் பராமரிப்புக்கும் தி.மு.க அரசுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியாதா? அல்லது இன்னமும் டி.ஆர்.பாலு தான் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் என நினைத்துக்கொண்டிருக்கிறாரா?
அல்லது எழுதிக்கொடுத்தவருக்கு செலெக்டிவ் அம்னீசியாவா?