திருக்குறள்

தயவுசெய்து அறிக்கை எழுதித்தருபவரை மாற்றுங்கள் – அம்மாவுக்கு மனம் திறந்த கோரிக்கை




அம்மையார் கொசுக்கடிப்பதற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பதும், அறிக்கை விட்டுக் கழகத்தினரைத் தட்டியெழுப்புவதும், பின்னர் மீண்டும் உறங்கி ஓய்வெடுக்க மலையேறுவதும், அங்கிருந்தே தமிழக மக்களுக்காக உழைக்கிறேன் என சவடால் அறிக்கை விடுவதும் வாடிக்கையானதே…
அம்மையார், தனிப்பட்ட ஜெயலலிதாவாக இருந்து இத்தகைய காமெடி அறிக்கைகள் விட்டால் கவலைப் படப் போவதில்லை.ஆனால் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்னும் கேபினட் அந்தஸ்து பதவியில் இருந்து கொண்டு வெள்ளந்தியாக அறிக்கை விடுவதும், அதற்கு விவரமாக முதல்வரோ, துணை முதல்வரோ, அமைச்சர்களோ கேள்வியெழுப்பினால், பதில் சொல்லாமல் அடுத்த அறிக்கை விடுவதும் மக்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும் வருத்தமளிக்கத்தான் செய்கிறது.
அம்மையார் பன்மொழிப் புலமை பெற்றவராயினும், தமிழில் எந்த ஒரு மேடையிலும், ஒரு பொதுக்கூட்டத்திலும், ஒரு தேர்தல் பிரச்சாரத்திலும் எழுதியதை (யாரோ?) வாசிக்காமல், தானாகவே பேசியதை நான் இதுவரை பார்த்ததில்லை..
இரண்டு நாட்கள் இடைவெளியில் “கருணாநிதி காங்கிரசை பிளாக் மெயில் செய்கிறார்” என்றும், “கருணாநிதி காங்கிரசைக் கண்டு பயப்படுகிறார்” என்றும் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டு சாதனை படைத்த அம்மையார்,
கிருஷ்ணகிரியில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காத தி.மு.க. அரசைக் கண்டித்து, ஜனவரி 10ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
10 ஆண்டுகள் முதல்வராக இருந்தவருக்கு, தேசிய நெடுஞ்சாலைப் பராமரிப்புக்கும் தி.மு.க அரசுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியாதா? அல்லது இன்னமும் டி.ஆர்.பாலு தான் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் என நினைத்துக்கொண்டிருக்கிறாரா?
அல்லது எழுதிக்கொடுத்தவருக்கு செலெக்டிவ் அம்னீசியாவா?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற