திருக்குறள்

நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!

நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!
அக்.23,2010
துரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.
சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.
இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.
கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...
****
நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்! 
நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.
"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.
அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன். 
இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.
"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.
இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.
சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!
- குள.சண்முகசுந்தரம் படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
***
ரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.
அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.
கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...
உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.
"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்."
- இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய...http://heroes.cnn.com/vote.aspx
நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/
இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி

ஒழுகுது குடிசை... உட்கார இடமில்லை

இப்படியும் ஒரு எம்.பி.!
சைக்கிள் செயின் நீளத்தில் தொங்கும் தங்கச் சங்கிலி, பளபளா நிறத்தில் முரட்டுபிரேஸ்லெட், கார், பங்களா... 'மக்கள் பணி' ஆற்றிவரும் இன்றைய கவுன்சிலர்களே இப்படிப்பட்ட அடையாளங் களோடுதான் வலம் வருகிறார்கள். ஆனால், மருத்துவராகவும், நாடாளுமன்ற உறுப்பி னராகவும் இருக்கும் ஒருவர் ஒழுகும் குடிசை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா!

சென்னையை ஒட்டிய திருவள்ளூர் நாடாளு மன்றத் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. எம்.பி-யான டாக்டர் வேணுகோபால்தான் அந்த எளிமையான மனிதர். பெரம்பூர் லோகோ ஜி.கே.எம். காலனியில் இருக்கிறது எம்.பி-யின் குடிசைக் குடியிருப்பு. வீட்டின் முன்புறத்தில் இருக்கும் வெட்டவெளியிலேயே தகரக் கொட்டகை அமைத்து தினமும் பொது மக்களை சந்திக்கிறார். நாம் சென்றிருந்த நேரம், நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் வீடு இழந்த நெமிலிச்சேரி மக்கள் தங்கள் குறைகளை எம்.பி-யிடம் சொல்லி கதறிக் கொண்டிருந்தனர்.
''எம்.பி-யாகிறதுக்கு முன்னாலேயே முழுநேர டாக்டரா இந்தத் தொகுதி முழுக்க அறிமுகமானவர்தான் வேணுகோபால். கொடுங்கையூரில் இருக்கிறது அவரோட கிளினிக். அதிகபட்ச ஃபீஸே 25-தான்... ஏழைப்பட்ட சனங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் தன்னோட செலவிலேயே மருந்து மாத்திரையையும் வாங்கிக் கொடுப்பார். இப்பவும் இங்கே வந்திருக்கிற மக்கள்ல பாதிப்பேர் தங்களோட சொந்தப் பிரச்னைகளைச் சொல்ல வந்திருக்காங்கன்னா, மீதிப்பேர் தங்களோட வியாதிகளுக்காகத்தான் வந்திருக்காங்க...'' என்று எம்.பி-யின் இன்னொரு முகத்தைக் காட்டி புளகாங்கிதம் அடைகிறார்கள் ஏரியாவாசிகள்.

மகளின் இதய ஆபரேஷன் செலவுக்கு வழி கேட்டு வந்தவருக்கு பிரதமர் நிவாரண உதவித் தொகையின் கீழ் நிதி வழங்குவதற்கான ஏற்பாடு, பட்டா கேட்டு முறையிட்ட திருமுல்லைவாயல் நரிக்குறவர்களுடன் ஆலோசனை.... என்று அடுத்தடுத்து
படுபிஸியாக இருந்தார் எம்.பி.! அவரது குடிசை வீட்டிலோ வந்திருப்பவர்களுக்கு சுடச்சுட காபி தயாராகிக்கொண்டு இருந்தது.

''நந்தனம் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போதே அ.தி.மு.க-வின் மாணவர் அணித் தொண்டராகக் கட்சி வாழ்க்கையை ஆரம்பித்தவர். மிகுந்த பொருளாதாரச் சிக்கலுக்கிடையே பகுதி நேர வேலைகள் பார்த்துக் கொண்டே எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் பொறுப்பு அதிகம். உடன் பிறந்த மூன்று தம்பிகள், மூன்று தங்கைகளையும் படிக்க வைத்துக் கல்யாணமும் செய்துவைத்தார்.
வேலை காரணமாக இரண்டு தம்பிகளும் வேறு ஏரியாவில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட... இப்போது எம்.பி. குடும்பமும் அவரது தம்பி குடும்ப மும் இந்த ஓட்டு வீடு, குடிசை வீடு இரண்டிலும் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். 2004-லேயே புது வீடு கட்டுவதற்காக கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தார் டாக்டர். ஆனால், அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென்று கட்சி இவருக்கு ஸீட் ஒதுக்கவே பணத்தை எல்லாம் செலவழித்து தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அதன் பின்பு பழையபடி கட்சிப் பணி, மருத்துவத் தொழில் என்று இருந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 2008 தேர்தலில் அம்மா ஸீட் ஒதுக்கினார்கள். தொகுதி முழுக்க இலவச மருத்துவ முகாம் நடத்துவது, கட்சிக்காகக் கடுமையாக உழைப்பது என்று எளிமையும் நேர்மையுமாக சுற்றிச் சுழன்ற டாக்டரை மக்களும் எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்!'' என்று ஒரு டாக்டர், எம்.பி.யான கதையை உணர்ச்சிபூர்வமாக விளக்கினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

''எங்கே போறதா இருந்தாலும் ரயில்லதான் போவார். டெல்லிக்கு மட்டும்தான் ஃப்ளைட்டுல போவார். ரயில் வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வசதியாக இப்போதுதான் பேங்க் கடனில் ஒரு கார் வாங்கி இருக்கிறார். எவ்வளவோ பேருக்கு வீடு, மனை, பட்டா... வாங்க உதவிகள் செய்கிறார். ஆனாலும் தனக்குன்னு ஒரு வீடு கட்ட இதுவரையிலும் யோசிக்கவே இல்லை. கேட்டா.... 'பேங்க்ல லோன் கேட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்'னு சொல்றார்!'' என்கிறார்கள் அக்கம்பக்கக் குடும்பத்தினர்.

வேணுகோபாலின் வீட்டை வலம் வந்தோம். சின்னஞ்சிறிய அந்தக் குடிசை வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சமையலறை, அருகிலேயே தங்கி ஓய்வெடுக்க வசதியாக ஒரு கட்டில்... எதிரில் அமைந்திருக்கும் சிறிய ஓட்டு வீட்டின் ஒரு பகுதியில் எம்.பி-யின் தாயாருக்கு ஒரு கட்டில். மொத்தக் குடும்பத் தினரும் பயன்படுத்த ஒரேயரு பழைய பீரோ.

பொதுமக்கள் சந்திப்பை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த வேணுகோபால்,
''என்ன சார் என் வீட்டை இவ்வளவு ஆச்சர்யமா பார்த்துட்டு இருக்கீங்க...?'' என்றபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

''ஒரு மருத்துவரா நோயாளிகளை மட்டுமே திருப்திப்படுத்திக்கிட்டு இருந்த என்னை, எம்.பி-யாக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புத் தந்தாங்க அம்மா. இதுவே எனக்குப் போதும். மற்றபடி இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? இந்த வீட்டுலயிருந்துதானே நான் டாக்டருக்குப் படிச்சு இன்றைக்கு எம்.பி-யாகவும் ஆகியிருக்கேன்! என்ன... இந்த மழையில ஓட்டு வீடு மட்டும் அங்கங்கே கொஞ்சம் ஒழுகிச்சு. கெயிட்டி தியேட்டர் பக்கத்துல  300 கொடுத்து பழைய விளம்பர ஃப்ளெக்ஸ் ஒண்ணை வாங்கிட்டு வந்து ஓட்டு மேல போர்த்திவிட்டேன். இப்ப பிரச்னை எதுவும் இல்லை!'' என அவர் பேசிக்கொண்டே போக... நாம் இருப்பது தமிழ்நாட்டில்தானா எனக் கிறுகிறுத்துப் போனோம்.

''எப்படி சார்... இவ்வளவு எளிமையா வாழுறீங்க..?'' என அடக்கமுடியாத ஆச்சர்யத்தோடு நாம் கேட்க... ''இருக்க இடம் இல்லாம எத்தனையோ பேருங்க ரோட்டோரம் ஒண்டிக் கிடக்கிறாங்க... அவங்களோட ஒப்பிட்டா நான் பெரிய பணக்காரனாச்சே சார்! வசிக்கிற இடம் எப்படி இருந்தால் என்ன... வாழுற முறை நல்லா இருந்தா சரிதானே சார்...'' என்றார் வெகு இயல்பாக.

இந்த வார்த்தைகளை இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் அச்சடித்துக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது நமக்கு!
Source:JV - த.கதிரவன்  

இதுவும் ஆயுத பூஜை தான் ....

இன்று ஒவ்வொரு தனி மனித உழைப்புக்கும் காரணமான வயிற்றுப்பிழைப்பு நாள் . அது தான் ஐ நாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவு தினம் இன்று .  ஆனால் எம் கண்களுக்கு தெரிவது நாம் முக்கியத்துவம் கொடுப்பது எந்தவித பயனுமற்ற ஒரு விழா ஆயுத பூஜை . 

இதுவும் ஆயுத பூஜை தான் .ஆனால் சாவிக்கொத்துகளை அடுக்கி மிதமிஞ்சிய உணவினால் நடைபெறும் பூஜை அல்ல .. உணவு இல்லாததால் ஆயுதத்தின் மூலம் உணவு தேவையை பூர்த்தி செய்யும் முறை . வேறு எங்குமில்ல ..நம் ஆசியா , இந்தியாவில் தான் .இது 




Mirgitand எனும் இந்திய கிராமத்தில் பசியை போக்குவதற்காக இரும்பு ஆயுதத்தால் வயிற்றில் சூடு வைக்கும் முறை . இன்னமும் தொடர்கிறது  ........

இந்தியாவில் மட்டும் மொத்தமாக இரண்டு மில்லியன் சிறுவர்கள் பட்டினியால் இறக்கின்றனர் . ஒரு நாளைக்கு 6 ,000  சிறுவர்கள் வீதம் . 


அதுவும் இந்தியாவில் மட்டும் 43 வீதமான சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் . சீனாவில் வெறும் ஏழு சதவீதமே .... உலகத்தில் முதலாவது இடத்தில் இந்தியா...


கார்டியன் பத்திரிக்கை ஆசிரியர் குழாம்  சென்ற போது அவர்களுக்கு கிராமத்தவர்கள் கூறியது  "இவ்வாறு வயிறு பெருத்து வந்தால் வாழை இலை  வைத்து சூடு போடுவோம் , வழியால் கத்தினால் கிருமிகள் இறக்கின்றன என்று அர்த்தம் " ஆனால் இந்த முறைகள் கிருமி தொற்று ஏற்ப்பட்டு அந்த கிராமத்தில் பல சிறுவர்கள் இறந்துவிட்டனர் .

ஆசியா மிகப்பெரும் சவாலை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரும் . காரணம் அறிவின்மை ,விழிப்புணர்வு இன்மை ,அரசின் திட்டமில்லாத நடவடிக்கை போன்றன .

அண்மையில் கூட  இந்தியாவில் 67 ,௦௦௦ தொன் தானியங்கள் பழுதடைந்தன  . இதனால் மாதத்திற்கு 190 ,௦௦௦ பேருக்கு உணவு வழங்கலாம் என உயர்நீதிமன்றத்தால் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது .

பட்டினியால் 13 .5 மில்லியன் சிறுவர்களும் கல்வியை இழக்க வேண்டி நேர்ந்துள்ளது  . சிறுவர் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்துவதை எதிர்ப்பதை விட அவர்கள் உருவாகும் இடத்தை தடுப்பது எவளவோ மேலானது .

நாம் சற்று சிந்திக்கவும் வெட்கம் கொள்ளவும் வேண்டிய நிலை ................. இல்லாவிட்டால் மேலே உள்ள ஆயுதத்திற்கான ஆயுத பூஜை பதிவு போலவும் எடுத்துக்கொள்ளலாம் ....

படங்கள்,தகவல்,புள்ளி விபரம்  நன்றி - இணையம் 

ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்


enthiran___the-robot
வெளியான மூன்று வாரங்களில் ரூ 318 கோடியை வசூலித்து, அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன்.
ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் எந்திரன். இந்தியா விலேயே அதிக பட்ஜெட்டில் ரூ 162 கோடி செலவில் உருவானது இந்தப் படம்.
கடந்த அக்டோபர் முதல் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஜப்பான் போன்ற சில நாடுகளில் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.
படம் வெளியாகி 15 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் சன் பிக்ஸர்ஸ் அமைதி காத்தது. கடந்த வாரம் எந்திரனின் உலகளாவிய வசூல் ரூ 225 கோடி என முதல்முறையாக அறிவித்தது சன் பிக்ஸர்ஸ்.
அமெரிக்காவில் மட்டும் ரூ 24 கோடி வரை (எந்திரன் / ரோபோ) இந்தப் படம் வசூலித்துள்ளளது. பிரிட்டனில் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. எந்த இந்தியப் படமாக இருந்தாலும் ஒரு காட்சிக்கே அரங்கு நிறையாத ஸ்கான்டினேவியன் நாடுகளான நார்வே மற்றும் ஸ்வீடனில் ஒரு வாரம் ஓடிய ஒரே படம் எந்திரன்தான் என்கிறார்கள்.
வட இந்தியாவில் எந்திரன் / ரோபோ பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்ட எந்திரன் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரூ 30 கோடியை வசூலித்துள்ளது.
தெலுங்கில் முன்னெப்போதும் கண்டிராத வெற்றி ரோபோவுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் இதுவரை சாதனை என்று கருதப்பட்ட மகாதீரா வசூலை முதல் வாரத்திலேயே தாண்டிவிட்டது ரோபோ. இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான மகேஷ்பாபுவின் கலேஜா கூட சுமாராகத்தான் போகிறது. ஆனால் எந்திரனுக்கு இன்றுவரை கூட்டம் குறையவில்லை ஆந்திராவில்.
தெலுங்கு ரோபோவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழில் இந்தப் படம் ரூ 170 கோடியைக் குவித்து மிரள வைத்துள்ளது. இதுவரை தமிழ்ப் பட உலகம் கண்டும் கேட்டுமிராத பெரும் சாதனை இது.
இந்தியா உள்பட உலகளவில் இதுவரை ரூ 318 கோடியை எந்திரன் / ரோபோ குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சத்யம் சினிப்ளெக்ஸின் ஜெயேந்திரா பானர்ஜி கூறுகையில், “இந்த சாதனையை இன்னொரு படம் தொட ரொம்ப நாளாகும் என்று நினைக்கிறேன். ஒரு வேளை மீண்டும் ரஜினியே கூட இதை முறியடிக்கலாம்” என்றார். சத்யம் சினிப்ளெக்ஸில் 80 சதவீத பார்வையாளர்கள் ரோபோவுக்கு வருவதாகவும், எந்திரனுக்கு இன்றும் 100 சதவீத பார்வையாளர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய அளவில் வசூலில் சாதனை புரிந்த படமாக 3 இடியட்ஸை கூறிவந்தனர். ஆனால் அந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி, இதுவரை வசூலித்த தொகைக்கும் அதிகமாக மூன்றே வாரத்தில் வசூலித்துள்ளது எந்திரன். இப்போதும் அகமதாபாத், சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் ரோபோ ஓடுவது சாதாரண விஷயமல்ல என்கிறார்கள்.
அஸ்ஸாமில் வெளியான முதல் தமிழ்ப் படம் எந்திரன் / ரோபோவாகத்தான் இருக்கும் என்கி்றார் பிரபல விநியோகஸ்தர் வினோத் மெஹ்ரா. அதேநேரம், முன்பு ரஜினியின் சிவாஜிக்கு கிடைத்த அளவு வரவேற்பு கொல்கத்தாவில் எந்திரனுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.
கேரளத்தில் இன்னும் 120 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை (15 நாளில்) ரூ 6.12 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பவர் 7 ஆர்ட்ஸ் விஜயகுமார். இவர்தான் குசேலனை எடுத்தவர். அந்தப் படத்தில் விட்டதை, எந்திரனில் பிடித்த தெம்பிலிருக்கிறார். இந்தப்படம் ஒட்டுமொத்தமாக தமக்கு ரூ 9 கோடி வரை வசூலித்துத் தரும் என நம்புகிறார் விஜயகுமார். தீபாவளிக்கும் பல திரையரங்குகள் புதிய மலையாளப் படங்களை விட எந்திரனே இருக்கட்டும் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இப்போதும் 40 திரையரங்குகளில் ஓடும் எந்திரன், புறநகர்ப் பகுதிகளில் மட்டும் சில திரையரங்குகளில் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விநியோகஸ்தர், “இங்கெல்லாம் மூன்று அல்லது நான்கு அரங்குகளில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருந்தனர். எனவேதான் பூந்தமல்லி, ஆதம்பாக்கம் போன்ற இடங்களில் ஒரு திரையரங்கில் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். மற்றபடி வார இறுதி நாட்களில் இப்போதும் டிக்கெட் கிடைக்காத நிலைதான் உள்ளது,” என்றார்.
Source> Iniya Tamil

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா...


இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு
"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!' 

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது
source:dinamalar

மருத்துவ ஆராய்ச்சிக்கு இந்திய குழந்தைகள்...

உலகமயம் சரியா, தவறா என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். உலகமயம் என்கிற பெயரில் நாம் இந்தியாவுக்குள் எல்லாவற்றையும் அனுமதிப்பதுபோல, ஏனைய நாடுகளும் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறதா என்றால் இல்லை. சாதாரண நுழைவு அனுமதி (விசா) விஷயத்தில் தொடங்கி, நமது தயாரிப்புகளை ஏனைய நாடுகளில் விற்பது வரை, சமநீதி பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை.

அதுகூடப் பரவாயில்லை. உலகமயம், தாராளமயம் என்கிற பெயரில் நாம் நமக்குத் தேவையே இல்லாத, இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கும், கலாசார நல்வாழ்வுக்கும் குந்தகம் விளைவிக்கும் பல விஷயங்களையும், பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம் என்பதுதான் வேதனையளிக்கிறது. உலகமயத்தின் காரணமாக நம்மால் மற்றவர்களும், மற்றவர்களால் நாமும் இதன்மூலம் மனித இனமும் வளம் பெறும் என்றால் அதற்காக நாம் சிலவற்றை இழந்தால் பரவாயில்லை. இது என்னவோ, "நான் உமி கொண்டு வருகிறேன், நீ அரிசி கொண்டுவா, இரண்டுபேரும் ஊதி ஊதிச் சாப்பிடுவோம்' என்பதுபோன்ற கதையாக இருக்கிறது.

தாராளமயத்தின் பயனாக நுகர்வுக் கலாசாரம் பல மாயத்தோற்றங்களை நம் முன் விரிக்கிறது. நியூயார்க்கிலும், லண்டனிலும், டோக்கியோவிலும், சிங்கப்பூரிலும் இருப்பதுபோலப் பொருள்களும், கடைத்தெருவும், மினுமினுப்பும் பளபளப்பும் நமது கண்களைக் கூச வைக்கின்றன. இதற்குப் பின்னே அரங்கேறும் பல ஆபத்துகள் நம் பார்வையில் படுவதில்லை. அப்படிப்பட்ட ஆபத்துகளில் ஒன்று இந்தியாவைப் பயன்படுத்தக் காத்திருக்கிறது.

குழந்தைகளுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி அண்மையில் வழங்கப்பட்டது.

இந்தச் சட்டம் மருந்து நிறுவனங்களுக்கு பல பிரத்யேகமான சலுகைகளை வழங்குகிறது. அரசின் நிதியுதவி, மானியங்கள், சில வரிவிலக்குகள் தவிர மருந்துகள் மீதான காப்புரிமைக்கான காலக்கெடு நீட்டிப்பையும் வழங்குகிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு அளித்துள்ள இந்த அனுமதி, மருந்து ஆராய்ச்சித் துறையில் மிக முக்கியமான ஒரு நகர்வாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு பன்னாட்டு மருந்து நிறுவனமும் ஆண்டுக்கு சுமார் | 50 ஆயிரம் கோடி வரை மருந்துப் பரிசோதனைக்காகச் செலவிடுகின்றன. ஒரு புதிய மருந்து சந்தையை வந்தடைய சராசரியாக | 3,600 கோடி செலவாகிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம் மனிதர்கள் மீதான மருந்துப் பரிசோதனையேயாகும். ஆராய்ச்சியில் பெரும் செலவு வகிப்பதும் இதுவே.

மூன்றாம் உலக நாடுகளில் அயல் பணி ஒப்படைப்பு முறையில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, இந்தச் செலவில் 60 சதம் வரை குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும், ஏழை நாடுகளில் மக்களிடையே நிலவும் அறியாமை, எளிதில் வளைக்கக்கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பின்மை ஆகியவற்றின் காரணமாக நேரடியான சட்டச் சிக்கல்களையும் மருந்து நிறுவனங்கள் தவிர்க்க முடியும்.

தவிர, கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை இந்தப் பரிசோதனைகளை நடத்தும் நாடுகளில் விற்க வேண்டிய கட்டாயமும் மருந்து நிறுவனங்களுக்கு இல்லை. இந்தப் பின்னணியிலேயே மருந்து நிறுவனங்கள் நீண்ட காலமாகக் கோரிவந்த அனுமதியை அமெரிக்க அரசு அளித்தது.

அமெரிக்க அரசு அளித்துள்ள இந்த அனுமதியின் நேரடியான விளைவு என்ன? இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் மனிதர்கள் மீதான - குறிப்பாக - குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் களம் இறங்கிவிட்டன பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.

சரி, நாம் என்ன செய்யப்போகிறோம்?

ஏற்கெனவே தாராளமயமாக்கலுக்குப் பின்னர், ஒப்பந்த மருந்துப் பரிசோதனை முறை இந்தியாவில் மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிரித் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் உதவியுடன் 2001-ல் ரூ. 129 கோடி புரளும் தொழிலாக இருந்த இந்தத் தொழில், இப்போது ரூ. 7,200 கோடி புரளும் தொழிலாக உருவெடுத்துள்ளது. குறைந்தபட்சம் இந்தியாவில் இப்போது 400 பரிசோதனைகள் ஆய்வில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரிசோதனைகள் நம் நாட்டில் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் குறைந்தபட்சம் 49 குழந்தைகள் உயிரிழந்தது 2008}ம் ஆண்டு தெரியவந்தது. எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும் ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.


இந்த மருந்துகள் குழந்தைகளுக்குத் தரப்படுவது குறித்து, பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும், இக்குழந்தைகள் இந்த மருந்து ஆய்வு (கிளீனிக்கல் டிரையல்) முடியும் வரை மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதும் இத்தகைய ஆய்வுகளை அயல்பணியாக ஒப்படைக்கும்போது நிபந்தனையாக சொல்லப்படுகிறது.

ஆனால், நம் இந்திய ஆய்வுக் கூடங்களோ அமெரிக்காவின் நிதியுதவிக்குத் தரும் ஆர்வத்தை இந்த நிபந்தனையை கடைப்பிடிப்பதில் காட்டுவதில்லை.

அண்மையில், பெண்களுக்கான கருவாய் புற்றுநோய்க்கான பரிசோதனை ஆய்வுகளிலும் இதேபோல் சில பிரச்னைகள் ஏற்பட்டன. இப்போது இந்தியக் குழந்தைகளிடம் புதிய மருந்துக்கான சோதனைகள்! இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? 

நன்றி - தினமணி.

சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்

சிலி சுரங்க மீட்புலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.
கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.
“ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.
“சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான். இது வரை வாயடைத்து போய் அங்கு நிகழ்பவற்றை பார்த்து கொண்டிருந்த ஓர் ஏழு வயது சிறுவன் ஓடி போய் அந்த மனிதனை, தனது தந்தையை அணைத்து கொள்கிறான்.
அவர்களை காப்பாற்றி விட்டோம்,” என முழங்குகிறார்கள் குழுமியிருந்த தொழிலாளர்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கேமராக்கள் எல்லாவற்றையும் படம் பிடித்து கொண்டிருக்கின்றன.
சிலி நாடு
சிலி நாடு
இடம்
தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் நீண்ட கடற்கரையை கொண்ட நாடு தான் சிலி. 1990-ம் ஆண்டு முடிவுற்ற ராணுவ சர்வதிகார ஆட்சிக்கு பிறகு இன்று பொருளாதாரத்திலும் அரசியலிலும் நிலையான நிலைக்கு உயர்ந்திருக்கிறது இந்நாடு. உலக சந்தைக்கு கதவை திறந்து விட்டதும் அரசாங்க நிறுவனங்களை படிப்படியாக தனியார்மயமாக்குதலும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார்கள் வலதுசாரிகள். ஆனால் இடதுசாரிகளோ உலகமயமாக்கலின் தாக்கத்தால் சிலியில் வறுமை அதிகரித்து விட்டது, அதை அரசாங்கம் மறைத்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
சிலியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அங்கு இருக்கும் சுரங்கங்கள். செம்பும் தங்கமும் நாட்டை செழிப்புற வைத்து கொண்டிருக்கின்றன. நாடெங்கும் 500, 700 மீட்டர்களுக்கு கூட ஆழமாய் சுரங்கங்கள் உருவாகி இருக்கின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிலியை தாக்கியது ஒரு உக்கிரமான நிலநடுக்கம். ஐநூறு பேர் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தார்கள். மோசமானதை பார்த்து விட்டோம் என சமாதானமான சிலி நாட்டு மக்களை ஏழு மாதங்களில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் பரபரப்படைய வைத்தது. அது அட்டகாமா பாலைவனத்தில் இருந்த சான் ஜோஸ் சுரங்கத்தில் நடந்த விபத்து. விபத்து நடந்த போது முப்பத்தி மூன்று சுரங்க தொழிலாளர்கள் உள்ளே இருந்தார்கள்.
செம்பு மற்றும் தங்கத்திற்கான சான் ஜோஸ் சுரங்கம் நிலத்தில் இருந்து 720 மீட்டர் ஆழமானது. அதன் அடிமட்டத்திற்கு செல்ல ஒன்பது கிலோமீட்டர் வட்ட சறுக்கு பாதை அமைக்கபட்டிருந்தது.
சிலி சுரங்கத்தின் உட்புறம்
சிலி சுரங்கத்தின் உட்புறம்
நாள் – ஒன்று – ஆகஸ்ட் ஐந்தாம் தேதி
மதியம் இரண்டு மணிக்கு சுரங்கத்தினுள் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. விபத்தின் போது தூசி படலம் எங்கும் படர்ந்தது. தொழிலாளர்களில் பலர் கண் எரிச்சலில் அவதிபட்டார்கள். அவர்களால் ஆறு மணி நேரத்திற்கு எதையுமே பார்க்க முடியவில்லை.
நிலச்சரிவு நடந்த போது சுரங்கத்தினுள் இரண்டு பிரிவாக தொழிலாளர்கள் இருந்தார்கள். முதல் பிரிவினர் சுரங்கத்தின் வாயிலில் அதாவது நிலத்தின் மேற்புறத்திலே இருந்த காரணத்தினால் அவர்கள் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க முடிந்தது. ஆனால் சுரங்கத்தின் கீழ் மட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் வெளிவர முடியாமல் மாட்டி கொண்டார்கள்.
சான் ஜோஸ் சுரங்கத்தின் உரிமையாளர்களான எம்பரசா மின்னரா நிறுவனம் அரசாங்கத்தின் உதவியை நாடியது. சுரங்கத்தினுள் இருந்த முப்பத்து மூன்று பேரும் என்ன ஆனார்கள் என யாருக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கூட மறைமுகமாக தொடங்கி விட்டன.
சிலி சுரங்க விபத்து
சிலி சுரங்க விபத்து
தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?
விபத்து நடந்த அடுத்த நாள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது.
சிலி நாட்டில் சுரங்கம் என்பது நூற்றாண்டு தாண்டிய ஒரு தொழிலாகும். உலகிலே அதிகமாய் செம்பு தயாரிப்பது சிலி நாடு தான். தென் அமெரிக்காவிலே சுரங்க தொழிலாளர்களுக்கு அதிக கூலி கிடைப்பது சிலி நாட்டில் தான். இருந்தாலும் சுரங்கங்களில் நடக்கும் விபத்து என்பது அங்கு அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. 2000-ம் ஆண்டில் இருந்து வருடத்திற்கு சராசரியாக 34 பேர் சுரங்கங்களில் விபத்திற்கு உள்ளாகி இறக்கிறார்கள் என சொல்கிறது அரசுதரப்பு புள்ளி விவரம்.
விபத்து நடந்த சான் ஜோஸ் சுரங்கத்திலே ஏற்கெனவே விபத்துகள் நடந்திருக்கின்றன. 2004-ம் ஆண்டில் இருந்து 2010 வரை 42 முறை இந்த சுரங்கத்தின் மீது பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் காட்டி அபராதம் வசூலிக்கபட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்திற்கு பிறகு இந்த சுரங்கம் மூடப்பட்டது. எனினும் 2008-ம் ஆண்டு மீண்டும் சுரங்கம் திறக்கபட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்ற சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை விட 20 சதவீதம் அதிக ஊதியம் வாங்கி கொண்டிருந்தார்கள்.
சுரங்கத்தினுள் மாட்டி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி மிக கடினமானதாக இருந்தது. மீட்பு குழுவினர் சுரங்கத்தில் உள்ள அத்தனை பாதைகளும் மூடப்பட்டதை கண்டுபிடித்தனர். அதோடு உள்ளே கற்கள் ஆபத்தான வகையில் இன்னும் நகர்ந்து கொண்டிருந்தன. விபத்து நடந்து இரண்டாம் நாள், ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று மீட்பு குழுவினர் அதிக சக்தி வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் இதன் காரணமாக மீண்டும் சுரங்கத்தினுள் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நிறுத்தபட்டன. சுரங்கத்தினுள் உள்ள பாதைகள், ஏற்கெனவே உருவாக்கபட்ட தடங்கள் எதையும் பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய மார்க்கத்தில் தான் மீட்பு பணி இனி நடந்தாக வேண்டும்.
பதினைந்து சென்டிமீட்டர் அகலமான துளைகள் நிலத்தில் ஏற்படுத்தபட்டு சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் எங்கு சிக்கி இருக்கிறார்கள் என அறியும் பணி தொடங்கியது. முதல் சிக்கல் அந்த சுரங்கம் தொடர்பான அனைத்து வலைப்படங்களும் தவறானவையாக அல்லது பழையவையாக இருந்தன. இரண்டாவது சிக்கல் நிலத்திற்கு கீழே இருந்த பாறைகள் வலுவானவையாக இருந்தன. இதன் காரணமாக துளைகள் போடும் பணி சரியான வகையில் அமையாமல் போனது.
ஊடங்கள் அனைத்தும் சுரங்கத்தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட தொடங்கி விட்டன. தொழிலாளர்களின் குடும்பங்களின் நெஞ்சை உருக்கும் சோகம் சிலி நாடு முழுவதும் பரிதாபத்தை உருவாக்கியது.
ஏற்கெனவே நிலநடுக்கமும் சுனாமியும் நிகழ்ந்து அதன்பிறகான மீட்பு பணிகளும் சரியான முறையில் செயல்படுத்தபடவில்லை என்கிற குற்றச்சாட்டு சிலி நாட்டு அதிபர் பினேரா குறித்து சொல்லபட்ட வந்தது. இச்சுழலில் கொலம்பியா நாட்டில் இருந்த அதிபர் பினேரா உடனே நாடு திரும்பினார். தலையில் ஹலிமெட்டும் சுரங்க தொழிலாளர்களுக்கான ஜாக்கெட்டும் அணிந்து அவரே முன் நின்று மீட்பு பணியை கவனிக்க தொடங்கினார்.
விபத்து நடந்து பதினான்கு நாட்கள் கழித்து 19 ஆகஸ்ட் அன்று சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் இருப்பதாக நம்பப்பட்ட இடம் வரை துளைகள் அமைக்கபட்டு விட்டன. ஆனால் அங்கு யாரும் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மீட்பு பணியை சிலி நாடே உற்று கவனித்து கொண்டிருந்த சூழலில் எங்கும் இறுக்கமான அமைதி நிலவியது.
மூன்று நாட்கள் கழித்து 21 ஆகஸ்ட் அன்று நிலத்தில் இருந்து 688 மீட்டர் கீழே சென்று வந்த ஒரு போர் பம்ப் மீது ஒரு துண்டு காகிதம் ஒட்டபட்டிருப்பதை மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.
மதியம் 3:17-க்கு அதிபர் பினாரா ஊடகங்களுக்கு முன்பு தோன்றினார். மகிழ்ச்சியில் பூரித்திருந்த முகத்தோடு அவர் ஒரு துண்டு காகிதத்தினை உலகத்திற்கு காட்டினார். அது ஒரு சிறு காகித துண்டு.
பாதுகாப்பு அறையில் நாங்கள் 33 பேரும் பாதுகாப்பாக இருக்கிறோம்,” என்று சிறிய தகவல் அதில் எழுதபட்டிருந்தது. பதினேழு நாட்கள் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் வெளியுலக உதவியின்றி அதிசயமாக உயிர் தப்பி விட்டார்கள்.
கண்டெடுக்கபட்ட காகிதம்
கண்டெடுக்கபட்ட காகிதம்
பாதாளத்தில் நரக நாட்கள்
விபத்து நடந்தால் ஓடி பதுங்கி கொள்ள பாதுகாப்பு அறை ஒன்று சுரங்கத்தின் கீழே உருவாக்கபட்டிருந்தது. அங்கு தான் 33 பேரும் தஞ்சமடைந்து இருந்தார்கள்.
ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று விபத்து நடந்தவுடன் சுரங்கத்தின் கீழ்மட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் ஏணிகள் மூலமாக வேறு பாதையில் தப்பிக்க முயன்றார்கள். ஆனால் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக ஏணிகள் அங்கு காணோம். அதோடு தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக விரைவிலே அந்த பாதையும் மூடப்பட்டு விட்டது.
லூயிஸ் உர்சூவா என்பவர் தான் விபத்து நடந்த போது கீழ்மட்டத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து கொண்டிருந்தார். விபத்து நடந்தவுடன் நிலைமையின் தீவிரத்தினை முதன்முதலில் உணர்ந்தவர் அவர் தான். சுரங்கத்தின் பாதுகாப்பு அறையில் தங்கியிருந்த 33 பேரில் அனுபவமுள்ள சில தொழிலாளர்கள் மட்டும் சுரங்கத்தின் ஏதேனும் ஒரு பாதை திறந்து இருக்காதா, பாதாளத்தில் இருந்து நாம் தப்பி விட மாட்டோமா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வெளியுலகத்திலிருந்து எல்லா தொடர்பும் பாதைகளும் மூடப்பட்டு விட்டன.
சுரங்கத்திற்கு உள்ளே வெப்பமும் வெக்கையும் மிக அதிகமாக இருந்தது. தொழிலாளர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு அறை ஐம்பது சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதோடு சுரங்கத்தின் துண்டிக்கபட்ட இரண்டு கிலோமீட்டர் சுரங்கப்பாதை அவர்கள் வசமிருந்தது. அங்கே சிறு சிறு குழிகள் தோண்டி நீர் எடுத்தார்கள். அதோடு சுரங்கத்தினுள் இருந்த வாகனங்களின் ரேடியேட்டர்களில் இருந்தும் தண்ணீர் கிடைத்தது. வாகனங்களில் இருந்த பாட்டரிகள் மூலம் தங்களது ஹலிமெட்டுகளின் விளக்குகளுக்கு சார்ஜ் செய்து கொண்டார்கள். பாதுகாப்பு அறையில் உணவு மிக குறைவாக தான் இருந்தது. சாதாரண பயன்பாட்டில் மூன்று நாட்களுக்கு மேல் காலியாகி இருக்க கூடிய உணவினை தொழிலாளர்கள் மிக சிக்கனமாக பயன்படுத்தி கொண்டிருந்தனர். இதன் காரணமாக சில நாட்களிலே ஒவ்வொருவரும் பத்து கிலோ எடை குறைந்து போய் விட்டார்கள்.
மீட்பு குழுவினர் துளைகளை ஏற்படுத்தி போர் பம்புகளை நிலத்திற்கு கீழே அனுப்பி கொண்டிருந்த போது அந்த சத்தத்தினை சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களும் கேட்டார்கள். ஆனால் அந்த சத்தம் அவர்கள் இருக்கும் பக்கம் நெருங்கி வர நாட்கள் ஆயின. தங்கள் பகுதிக்குள் அந்த பம்புகள் நுழைந்தவுடன் அதில் காகிதத்தினை ஒட்டுவதற்கு ஆயுத்தமாக இருந்தனர். அது நிலத்தின் மேற்பரப்பு செல்லும் வரை கிழியாமல் இருக்க அதன் மேல் ஒட்டுவதற்கு டேப்புகளையும் கைவசம் தயார் செய்து வைத்திருந்தனர்.
உலகம் பார்த்த முதல் காட்சி இது தான்
முதல் குரல்
காகிதம் கண்டெடுக்கபட்ட சில மணி நேரங்களில் அதே துளை வழியாக ஒரு கேமரா அனுப்பபட்டது. சுரங்கத்தில் இருந்த 33 பேரும் உயிரோடு இருப்பதை வெளியுலகம் அறிந்து கொண்டது இப்படி தான்.
அடுத்த நாள் தொலைபேசி இணைப்பு கீழ்பகுதியோடு ஏற்படுத்தபட்டது. தொழிலாளர்களின் குடும்பங்கள் அவர்களோடு உரையாட முடிந்தது.
மீட்பு பணிகளில் ஒரு சிக்கலும் நேர்ந்து விடக்கூடாது என்பதால் மிக கவனமாக அடுத்தடுத்த நகர்வுகள் திட்டமிடபட்டன. ஆனால் மீட்பு பணி முழுமையடைய பல மாதங்கள் ஆகலாம் என சொல்லபட்டது. டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் வரை ஆகலாம் என்கிற தகவல் உறுதி செய்யபட்டது.
சூரிய வெளிச்சம் இல்லாத வாழ்க்கை
மனித வரலாற்றில் நிலத்தின் இவ்வளவு ஆழத்தில் தனியே சிக்கி கொண்ட மனிதர்கள் இவ்வளவு நீண்ட காலம் உயிரோடு வாழ்தல் என்பது இது முதல் முறை.
தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் உலகம் முழுவதும் இருந்து கொட்ட துவங்கின. அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தனி குழு ஒன்று மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டது. விண்வெளியில் உள்ள விண்கலனில் மாதக்கணக்கில் தனியே தங்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை போல நிலத்திற்கு கீழே சிக்கியுள்ள தொழிலாளர்களும் சிக்கனமாக லாவகமாக தங்களுக்கான வசதிகளை உருவாக்கி கொள்ள திட்டங்கள் வகுக்கபட்டன.
உளவியல் மருத்துவர்கள் தொழிலாளர்களுக்கு இடையே மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து 33 பேர்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு மீட்பு பணிகளுக்கு உதவும். மற்றொன்று பாறைகள் மீண்டும் நகரும் ஆபத்தினை கண்காணித்து பாதுகாப்பினை உறுதி செய்யும். மூன்றாவது பிரிவு 33 பேரின் உடல்நலத்தினை மேற்பார்வையிடும். இவர்கள் எல்லாருக்கும் கண்காணிப்பாளர் லூயிஸ் உர்சூவா தலைமை தாங்குவார். இருப்பதிலே வயது முதிர்ந்தவரான மரியோ கோமஸ் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கு மன உறுதி ஏற்படுத்துவார் என முடிவெடுக்கபட்டது. வெளியுலகில் இரவு பகல் என ஏற்படும் மாற்றத்தை போலவே சுரங்கத்திற்குள்ளும் வெளிச்சத்தை கூட்டியும் குறைத்தும் காட்டும் விளக்குகள் அமைக்கபட்டன.
33 பேரில் பலருக்கு கடுமையான தோல் வியாதிகள் உண்டாயின. அவர்களுக்கு தேவையான மருந்துகளும் தடுப்பு ஊசிகளும் அனுப்பப்பட்டன. மருத்துவர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொழிலாளர்களோடு உரையாடினார்கள். உறவினர்கள் தொழிலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்ப அனுமதிக்கபட்டனர். ஆனால் கடிதங்கள் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தபட்டது.
சுரங்கத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங்
சுரங்கத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங்
மீட்பது எப்படி?
உலக ஊடங்களின் பார்வை சான் ஜோஸ் சுரங்கத்தின் மீது படிந்து விட்ட நிலையில், மீட்பு பணிகள் மிக துரிதமாக நடக்க துவங்கின.
1955-ம் ஆண்டு ஜெர்மனியில் சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தபட்ட டாக்ல்பஸ்ச் பாம் என்கிற லிப்ட் போன்ற கூண்டினை அடிப்படையாக கொண்டு ஒரு கூண்டு தயாரிக்கபட்டது. அந்த கூண்டிற்கு பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்டது. பீனிக்ஸ் என்கிற பறவை தான் இறந்த பிறகும் தன் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் என்பது மேற்கத்திய பழங்கால நம்பிக்கை.
லிப்ட் போன்று பீனிக்ஸ் சுரங்கத்திற்குள் போய் வர 66 சென்டிமீட்டர் அகலமுள்ள துளை உருவாக்கபட்டது. முதலில் முழு நீளத்திற்கும் சிறிய அளவிலான துளை உருவாக்கபட்டது. பிறகு துளையின் அகலம் விரிவாக்கும் பணி நடந்தது. துளையிடும் பணி நடக்கும் போது மிக பெரிய அளவு தூசியும் கற்துண்டுகளும் சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் நிரம்பின. ஒவ்வொரு நாளும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஷிப்ட் போட்டு சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்கள் அந்த குப்பைகளை அகற்றியபடி இருந்தார்கள். மூன்று இடங்களில் மூன்று துளைகள் இப்படி போடப்பட்டன.
பீனிக்ஸ் இயந்திரத்தில் பயணிப்பவர் வயிற்றுபகுதி 35 சென்டிமீட்டருக்கு மேல் இருக்க கூடாது. இதனால் துளையிடும் பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் கீழே தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டாய உடற்பயிற்சிகளும் சொல்லி கொடுக்கபட்டன.
சிலி நாட்டில் கால்பந்து போட்டி மீது மக்களுக்கு மிக பெரிய காதலுண்டு. முக்கிய கால்பந்து போட்டிகள் நடந்த சமயம் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் தங்களுக்காக அனுப்பப்பட்ட தொலைக்காட்சி பெட்டியில் அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போட்டியினை பார்த்து கொண்டிருக்கும் புகைப்படம் அடுத்த நாள் செய்தித்தாள்களில் முதற்பக்கத்தில் இடம் பெற்றன.
33 தொழிலாளர் குடும்பங்களின் சோகம் உலக அளவில் பேசு பொருளானது. ஒரு தொழிலாளரின் மனைவிக்கு இச்சமயத்தில் குழந்தை பிறந்தது. மற்றொரு தொழிலாளரின் மனைவி தன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி அனுப்பினார். தொழிலாளர்கள் எழுதிய கடிதங்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தன.
மீட்பு பணிகள் துரித வேகத்தில் நடந்தாலும் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி 68 நாட்கள் கடந்து போயின. மூன்று இடங்களில் துளையிடும் பணியில் ஓரிடத்தில் மட்டும் வேலை முழுமையாக முடிவடைந்தது. அந்த துளையினுள் பீனிக்ஸ் கூண்டினை இறக்கி தொழிலாளர்களை உடனே மீட்பது என முடிவெடுக்கபட்டது.
மீட்கும் திட்டம்
மீட்கபட்டது எப்படி?
அக்டோபர் 12-ம் தேதி, அறுபத்தி எட்டாவது நாள் சுரங்கத்தில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் இயந்திரத்தில் நிலத்திற்கு மேலே கொண்டு வரபடுவார்கள் என அறிவிக்கபட்டது. பல நாடுகளில் இருந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த மீட்பு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப துவங்கின.
33 பேரில் யார் முதலில் செல்வது என போட்டி ஏற்படவில்லை. ஆனால் அதற்கு பதில் யார் இறுதியில் செல்வது என்று தான் போட்டி ஏற்பட்டது. 33 பேருக்கும் தலைமை தாங்கிய லூயிஸ் உர்சூவா கடைசி நபராக வெளியேறுவார் என முடிவெடுக்கபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேறும் முதல் நான்கு மனிதர்கள் இருப்பவர்களிலே நல்ல ஆரோக்கியத்தில் இருப்பவர்களாக தேர்ந்தெடுக்கபட்டார்கள். ஐந்தாம் நபர் தொடங்கி இருப்பதிலே மோசமான உடல்நிலையில் இருப்பவர்கள் முதலில் அனுப்பப்படுவார்கள் என்றும் முடிவானது.
இரவு ஏழு மணிக்கு மீட்பு குழுவை சேர்ந்த மேனுவல் என்பவர் பீனிக்ஸில் ஏறி கீழ் நோக்கி பயணித்தார். சிலி நாட்டின் அதிபர் பினேரா அவரை வழியனுப்பி வைத்து விட்டு அங்கேயே காத்திருந்தார். சிலி நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களில் பலரும் நடந்து கொண்டிருப்பவற்றை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலி நாட்டில் பள்ளிக்கூடங்கள் அன்றைய தினம் விடுமுறை விடபட்டன.
திட்டமிட்டதை விட மிக தாமதமாக பீனிக்ஸ் இரவு பதினொரு மணி முப்பத்தி ஆறு நிமிடத்திற்கு தொழிலாளர்கள் இருக்குமிடத்திற்கு வந்தடைந்தது. 68 நாட்கள் கழித்து 33 பேரும் புதிய மனிதரை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரும் மேனுவலை கட்டி அணைப்பதும் உணர்ச்சிவசப்படுவதும் சுரங்கத்தினுள் நடப்பது அனைத்தும் அங்கிருந்த கேமரா மூலம் வெளியுலகிற்கு நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பீனிக்ஸ் இயந்திரத்தின் மேற்கூரையில் இருந்த கேமராவும் மீட்பு பணியை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.
மேனுவல் கீழே சென்று சேர்ந்தவுடன் பீனிக்ஸ் காலியாக மேலே வரும் அதற்கடுத்து மற்றொரு மீட்பு பணியாளர் கீழே போவார். அதற்கு பிறகே தொழிலாளர்களை மேலே அனுப்புவது என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டம் மேனுவல் சுரங்கத்திற்கு சென்று சேர்ந்தவுடனே கைவிடப்பட்டது. உடனே 33 தொழிலாளர்களில் ஒருவரான பிளாரன்சியோ அவலோஸ் பீனிக்ஸில் ஏறி மேல் நோக்கி பயணிக்க தொடங்கினார். ஏறத்தாழ பதினேழு நிமிடங்கள் பாதாளத்தில் பயமுறுத்தும் பயணத்திற்கு பிறகு பிளாரன்சியோ நில மேற்பரப்பை வந்தடைந்தார். அவருக்காக அங்கே அவரது மனைவி மோனிகாவும் ஏழு வயது மகனும் காத்திருந்தார்கள். கூடவே சிலி நாட்டு அதிபரும் மீட்பு குழுவினரும் மருத்துவர்களும் இருந்தார்கள். பிளாரன்சியோ தனது மகனை தழுவிய போது அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் இதனை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த நூறு கோடி மக்களில் பலரும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.
68 நாட்கள் கழித்து குடும்பத்தாருடன்
68 நாட்கள் கழித்து குடும்பத்தாருடன்
இப்படியாக மீட்பு படலம் தொடங்கியது. ஒவ்வொரு தொழிலாளியும் வெளியே வருவதும் அவரது குடும்பம் கண்ணீரோடு அவரை அணைத்து கொள்வதும் அதனை நாட்டு அதிபர் அருகில் இருந்து பார்ப்பதுமாக உணர்ச்சிபூர்வமான சந்திப்பு காட்சிகள் அரங்கேறின.
33 பேரில் ஒருவர் மட்டும் அருகில் இருக்கும் பொலிவியா நாட்டினை சேர்ந்தவர். அவரை அழைத்து செல்ல பொலிவியா நாட்டு அதிபரே சான் ஜோஸ் சுரங்கத்திற்கு வருகை தந்திருந்தார்.
மீட்பும் கண்ணீரும்
மீட்பும் கண்ணீரும்
பீனிக்ஸ் முதல் ஆறு கீழ் நோக்கிய பயணத்தில் ஆறு மீட்பு குழு உறுப்பினர்கள் சுரங்கத்தின் கீழ்பகுதிக்கு பயணித்தனர். 33 தொழிலாளர்களும் மீட்கபட்ட பிறகு ஆறு பேரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் மூலம் மேலே வந்தனர். முதலில் பயணித்த மேனுவல் கடைசி நபராக வெளியே வந்தார். எல்லாரும் நிலத்தின் மேற்புறத்திற்கு சென்று விட்ட பிறகு தனி நபராய் அந்த பாதாள அறையில் தான் இருந்ததை மேனுவல் பிறகு பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுக்க கூடும். மேனுவல் மேலே நிலபரப்பிற்கு திரும்பிய பிறகு அதிபர் பினேரா இரும்பு மூடி கொண்டு அந்த பாதாளத்தடத்தினை அடைத்தார். இனி இந்த சுரங்கம் சிலி நாட்டு மக்களின் ஒற்றுமையையும் மன உறுதியையும் குறிக்கும் வகையில் நினைவு இடமாக பாதுகாக்கப்படும் எனவும் அதிபர் அறிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக சுரங்கத்தினுள்ளே இருந்து விட்ட காரணத்தினால் மீட்கபடும் தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு கண்ணாடி அணிந்தே இருக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருந்தது. ஏனெனில் திடீர் வெளிச்சம் அவர்களது கண்களை பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினார்கள்.
திட்டமிட்டதை விட மீட்பு பணிகள் விரைந்து முடிந்தன. ஒவ்வொரு ஆளாக மேலே வருவதும் தனது குடும்பத்தை கட்டி அணைப்பதும் தொலைக்காட்சிகளுக்கு நல்ல தீனியாக இருந்தது. நாள் முழுக்க கூடவே இருந்த அதிபர் பினேராவிற்கு பல நாட்டு அதிபர்களிடம் இருந்து பாராட்டு போன்கால்கள் வந்தவண்ணமிருந்தன. அவருக்கு சிலியில் மக்களிடையேயான செல்வாக்கு வெகுவாக உயர்ந்து விட்டதாக உள்ளூர் பத்திரிக்கைகள் சொல்கின்றன. போப் ஆண்டவர் மீட்பு பணி நடக்கும் போது அது வெற்றி பெறுவதற்காக பிராத்தனை செய்யும் வீடியோவும் ஒளிபரப்பானது.
கிடைக்கும் பணம் பகிர்ந்து கொள்ளபடும்
சுரங்கத்தில் இருந்து மீட்கபடுவதற்கு முன்னரே உள்ளே இருந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க போகும் மிக பெரிய புகழ் வெளிச்சத்தை அறிந்தே இருந்தனர். தொலைக்காட்சிகளில் பங்கேற்பதற்கு கொடுக்கபடும் பணம், புத்தகம் எழுத கொடுக்கபடும் பணம், பத்திரிக்கை பேட்டிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை யார் சம்பாதித்தாலும் அது 33 பேருக்கும் சரி சமமாக பங்கிட்டு கொள்ளபட வேண்டுமென அனைவரும் ஒருமனதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.
சுரங்கங்களுக்கு பேர் போன சிலி நாட்டில் இனி விபத்து நடக்காமல் தவிர்க்க எல்லாவித பாதுகாப்பு விதிமுறைகளும் உறுதி செய்யபடும் என அதிபர் அறிவித்து இருக்கிறார். 33 தொழிலாளர்களும் அதிபரோடு கால்பந்து விளையாடுவதற்காக அழைக்கபட்டு இருக்கிறார்கள்.
பார்த்தவர்கள் அனைவரையும் உணர்ச்சிவசப்பட செய்த இரண்டு மாத கால மீட்பு சம்பவம் ஒரு வழியாக சுபமாக முடிந்தது. மனித வரலாற்றில் மறக்க முடியாத கணங்களில் ஒன்றாக இதுவும் இருக்க போகிறது.
- Thanks - sairams.com