திருக்குறள்

தலிபான் அறுத்த முஸ்லிம் பெண்ணின் மூக்கை திருப்பி கொடுத்த அமரிக்கா

19  வயதுடைய அப்கானிஸ்தான் பெண் ஆயிசா வின்  மூக்கு அறுபட்ட நிலையில் உள்ள முகத்தின் படம் Time Magazine  இன் அட்டைபக்கத்திலும் அவரின் இந்த நிலைமைக்கு காரணமான சம்பவம் அச்சஞ்சிகையிலும் வெளியான போது முழு உலகமே அதிர்ச்சி அடைந்தது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் இடம் பெற்றது.

இதன் பின்னணி சம்பவத்தை பார்ப்போமானால் ஆயிசா 12 வயதாக இருந்த போது அவரின் தந்தை ஒரு தலிபான் போராளிக்கு செலுத்த வேண்டியிருந்த கடன் தொகைக்கு பதிலாக ஆயிசாவை அப்போராளிக்கு மணம் முடித்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்படி ஆயிசாவும் அப்போராளியின் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டார். அங்கே தான் அவரின் சோக கதை ஆரம்பமாகியது. மிக மோசமான முறையில் பாலியல் துன்புறத்தல்களுக்கு ஆளானார்ர். கடினமான வேலைகள் இரவு பகலாக செய்ய பணிக்கப்பட்டார். அத்துடன் வீட்டு விலங்குகள் தங்கும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டார்.

இந்த கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தப்ப முற்பட்ட ஆயிசா அவரது கணவனால் ( போராளி) பிடிக்கப்பட்டார்.  தண்டிக்கும் முறையில் அவரது காதுகளையும் மூக்கையும் வெட்டி எறிந்தான் கணவன்.  ஆயிசா அது பற்றி CNN  இக்கு கூறும் போது அந்த நிமிடம் இறந்து விட்டது போல உணர்தேன். நள்ளிரவு போல நினைவு திரும்பிய போது உடம்பு முழுது குளிர்ந்த நீரால் குளிப்பாட்டியது போல இருந்த்தது.  அவ்விடம்  முழுவதுமே இரத்த வெள்ளமாக இருத்தது.

அந்த ஆப்கான் மலைப்பகுத்தில் குற்றியுராக விடப்பட்ட ஆயிசா அவரின் தந்தையின் அப்பா வீட்டிலிருந்து அமரிக்க ராணுவ வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.  ஆப்கானில் முகாமுக்கு முகாமாக மாற்றப்பட்டு கொண்டிரிந்த ஆயிசா இறுதியாக ஆவணி மாதம் "Grossman Burn Foundation" என்ற நிறுவனம் மூலம் அமரிக்காவுக்கு கொண்டு செல்லப் பட்டு ஒரு அமரிக்க குடும்பத்துடன் தங்க வைக்கபட்டார். இந்த மாதம் West Hills Hospital  என்ற வைத்தியசாலையில்  Dr Peter H  என்ற வைத்தியரால் ஆயிசாவுக்கு மூக்கில் ஒரு அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது .
இதற்கான வைத்திய செலவை ஏற்றுக்கொண்ட "Grossman Burn Foundation" அமைப்பு கூறுகையில் ஆயிசாவுக்கு நிரந்த்தர்மான ஒரு தீர்வை வழங்க எண்ணி உள்ளதாக. இதற்காக அவரின் உடலின் ஏனைய பகுதிகளில் உள்ள எலும்பு, தசை என்பவற்றை எடுத்து அவரின் காதுகள், மூக்கு என்பவற்றை சீர் செயயபட்டு அவரின் பழைய தோற்றத்தை  கொண்டுவர ஏற்பாடாகியுள்ளது. புறத்தோற்ற காயங்களை குணப்படுத்த முடியும். ஆனால் அவரின் மனதின் ரணங்களை அல்லாவால்  மட்டுமே குணப்படுத்த முடியும்  .....

ஒரு இன விடுதலைக்காக வந்த ரட்சகர்கள் , கலாச்சார காவலர்கள் என்று சொல்லி சொந்த இன மக்களையே கொடுமைபடுத்துபவர்கள்  எந்த இனத்துக்காக போராடுகிறார்களோ அந்த இனத்தாலேயே வெறுக்கப் பட்டு எந்த நாடுகளால் உருவாக்கப்பட்டார்களோ அந்த நாடுகளாலேயே பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு இல்லா தொளிககப்படுவது வரலாறு . பாவம் அப்பாவி ஜனங்கள் தான் . இறைவன் தான் எல்லோரையும் ரட்சிக்க வேண்ட்டும்..
- நன்றி - ravana

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற