திருக்குறள்

  1. மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
  2. மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
  3. மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  4. மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  5. மண்டையுள்ள வரை சளி போகாது.
  6. மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  7. மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  8. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  9. மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
  10. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  11. மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  12. மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
  13. மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
  14. மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
  15. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  16. மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
  17. மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
  18. மவுனம் கலக நாசம்
  19. மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  20. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  21. மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  22. மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  23. மனம் உண்டானால் இடம் உண்டு.
  24. மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  25. மனம் போல வாழ்வு.
  26. மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
  27. மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற