- வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
- வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
- வடக்கே கருத்தால் மழை வரும்.
- வட்டி ஆசை முதலுக்கு கேடு.
- வணங்கின முள் பிழைக்கும்.
- வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
- வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
- வருந்தினால் வாராதது இல்லை.
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
- வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
- வல்லான் வகுத்ததே வாய்க்கால்
- வளவனாயினும் அளவறிந் தளித்துண்
- வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற