ஆனால் இந்த உணவு எல்லாருக்கும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி???? ஏன் உணவு அனைவருக்கும் கிடைக்க படுவதில்லை.ஒரு சிலருக்கு உணவுகள் கிடைக்க ஒரு சிலருக்கு உணவுகள் கிடைப்பதில்லை. குறிப்பாக ஐந்து நட்சத்திர ஹோடேலில் வேஸ்ட் செய்யப்படும்
உணவுகளில் தெரிவது பணத்திமிர். உலகிலேயே அருவருப்பான செயல் என்றால் உணவை பாதியிலேயே தூக்கி எறிவது என்பேன். உலகில் பாதிக்கு பாதி மக்கள் உணவு பஞ்சத்தில் இருக்கும் பொழுது பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக உணவுகளை தூக்கி போடலாமா???
ஐந்து நட்சத்திர ஹோடேலில் ஒரு உணவின் விலை பல ஆயிரங்களை தொடும். பப்பே சிஸ்டம் என்று கொழுத்து போய் உணவிலே விதவிதமாய் சாப்பிடுகின்றனர். பாதி உணவுகள் குப்பையில் போகின்றன. அதுவும் பார்ட்டி என்றால் நிறைய உணவுகள் மிச்சம் இருக்கும் அனைத்தும் குப்பை தொட்டிக்கே . ஒரு ஆய்வு சொல்கிறது உலகில் இரண்டு அல்லது மூன்று சதவிகித குடி தண்ணீர் அமெரிக்காவில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோடேல்களுக்கு பயன்படுத்த படுகிறதாம்.
தண்ணீருக்கு இப்படி என்றால் உணவிற்கு என்ன சொல்ல??? உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்றாலே தரமான உணவு தான் இருக்கும். மனிதம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. காசு இருப்பவன் சாப்பாடு வாங்கி கூட கொட்டலாம்
ஆனால் உணவில்லாதவனுக்கு தரக்கூடாது இது என்ன வன்முறை . இந்த பார்ட்டி கேளிக்கைகள் என்றாலே எனக்கு வாந்தி தான் வருகிறது . அடுத்தவனுக்கு உணவு இல்லாத பொழுது எப்படி குப்பையில் போடுகின்றனர் இந்த உணவுகளை .உணவுகளை குப்பையில் போடுபவன் குப்பை .ஐந்து நட்சத்திர ஹோடேலிலே சாப்பிடலாம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசலாம் ஆனால் குப்பை குப்பையே.
ஐந்து நட்சத்திர பாரிலே தண்ணி அடித்து இலக்கியம் பேசாதீர்கள் முடித்தால் எவனோ ஒருவனுக்கு ஒரு இருபது ரூபாயில் நான்கு இட்லி வாங்கி கொடுங்கள் . உணவுகளை வீணாக்காதீர்கள் அந்த உணவு ஒருவனுக்கு இருக்கட்டும் பகிர்ந்து உண்ணுங்கள். உணவு வியாபார பொருள் அல்ல ஐந்து நட்சத்திர ஹோடேல்களை தவிருங்கள் . என்னை உலுக்கிய மினஞ்சலில் இருந்த படங்கள். நான் சரியாக எழுதினேனா என்று எனக்கு தெரியாது , ஆனால் கலங்கித்தான் போனேன் .
என்ன பணத்திமிர்
ஐநூறு பேர் சாப்பிடலாம் வெறும் பத்து பேருக்கு உணவு
கீழே கொட்டப்பட்ட உணவு
பால் வற்றி போன தாய்
அவள் பார்த்த பின்பு
என் கண்ணீர் வற்றவில்லை
மனித சடலங்கள் ஒரு
பக்கம் குப்பையாய் உணவில்லாமல்
இன்னொரு பக்கம் உணவு
குப்பையாய் .....
குப்பையாய் போய்விட்டான் மனிதன்
மண்ணோடு மண்ணை மக்கி போய்விட்டேன்
என்னை தோண்டி எடுக்க வேண்டாம்
மானிடனை பார்த்தாலே அருவருப்பாய்
இருக்கிறது ....!
பசி அனைவருக்கும்
தெரிந்த மொழி .............................
பசி என்று ஒருவன் பேசினால்
உணவால் உணர்வால் பதில் அளிப்போம்
- நன்றி - வெண்ணிற இரவுகள்