- சுக துக்கம் சுழல் சக்கரம்.
- சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
- சுட்ட சட்டி அறியுமா சுவை.
- சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
- சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
- சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
- சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
- சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
- சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
- சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
- சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
- சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
- சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
- சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற