திருக்குறள்

விளையாட்டில் தொடரும் ஊழல் விளையாட்டு



- ராஜ்ப்ரியன்
லக விளையாட்டு ரசிகர்கள் அக்டோபர் மாதம் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை 11 நாட்கள் டெல்லியில் திருவிழா கொண்டாட தயாராகி வருகிறார்கள்.  திருவிழாவுக்கு காரணம் காமன்வெல்த் விளையாட்டு போட்டி.
உலக அரங்கில் பிரபலமான, பிரபலமாகி வரும் விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வரப் போகிறார்கள்.

போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பதக்கங்களை வாரி சுருட்டிக்கொண்டு வர போகிறார்கள் என்ற நம்பிக்கையில் அதை காண உலகின் பல பகுதிகளில் இருந்து தங்களது வீரர்கள் விளையாட போகும் விளையாட்டை காண இந்தியாவுக்கு படையெடுக்கப் போகிறார்கள்.

அவர்களை வரவேற்க டெல்லியும் தயாராகிவிட்டது. சாலைகள் முதல் பூங்காக்கள் வரை என திரும்பிய பக்கமெல்லாம் வண்ண விளக்குகளால் ஜெலிக்கின்றது.
சாலைகள் கண்ணாடி போல் மின்னுகின்றன, குப்பையில்லா நகராக காட்சியளிக்க வேண்டுமென மெனக்கெடுகிறது டெல்லி மாநகராட்சி. இப்படி ஒரு பக்கம் கோலாகலங்கள் நடைபெற்றாலும் மற்றொரு புறம் இப்போட்டியை மையமாக வைத்து வரும் தகவல்கள் அதிர்ச்சியாகவுள்ளன.
2010 ஆம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கும் என 2006ல் முடிவு செய்யப்பட்ட போது வறுமையில் இந்தியா சிக்கியுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி செலவில் இந்த விளையாட்டு போட்டி நடத்த வேண்டுமா என ஒரு தரப்பும், இது இந்தியாவின் மரியாதைக்குரிய விஷயம் என மற்றொரு தரப்பும் பட்டி மன்றம் நடத்தியது.
தற்போது வெளிவரும் தகவல்கள்,    நடத்த கூடாது என சொன்னவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. தினம் தினம் புதுசு புதுசாக ஊழல் விவகாரங்கள் வெளியே வந்தபடியே உள்ளன.

ஊழல் விவகாரத்துக்கு போவதற்கு முன் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியை பற்றி தெரிந்து கொள்வோம். பிரிட்டிஷ் மன்னராட்சியின் கீழ் பல நாடுகள் காலணி நாடுகளாக அதாவது அடிமையாக இருந்தபோது பொழுது போக்குக்காக விளையாட்டுப்போட்டிகளை நடத்தினார் பிரிட்டிஷ் மகாராணி.
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மற்றும் அதன் அடிமை நாடுகள் இணைந்த விளையாட்டு போட்டிகளை பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விளையாட்டுகள் என்ற பெயரில் நடந்தது. 4 ஆண்டு இடைவெளியில் இந்த போட்டிகள் நடைபெற்று வந்தன. 1940களுக்கு பின் பல நாடுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற்றன.
இதனால் 1954ல் நடைபெற்ற போட்டியை பிரிட்டிஷ் மற்றும் பொது நாடுகள் விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் நடத்தின.

உலக அரசியலுக்கு ஏற்ப 1978 க்கு பின் காமன்வெல்த் என்ற பெயரில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் எந்த நாட்டில் விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் பிரிட்டிஷ் மகாராணி தான் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஜோதியை ஏற்றி வழி அனுப்பிவைப்பார். அந்த ஜோதி காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகளுக்கு சென்று கடைசியாக விளையாட்டு நடைபெறும் நாட்டுக்கு வரும்.

காமன்வெல்த் அமைப்பில் தற்போது 70 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் இரண்டாம் கட்ட வீரர்களே இப்போட்டியில் கலந்து கொள்வர்கள். கிரிக்கெட், புட்பால் போன்ற சில விளையாட்டுகளை தவிர மற்ற விளையாட்டுகள் இதில் இடம் பிடித்துள்ளன. இதில் கிடைக்கும் பணம் சமுக சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
2006ல் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அங்கு எடுக்கப்பட்ட முடிவுப்படி 2010 அக்டோபர் 3 முதல் 11ந்தேதி வரை இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தியரசு விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் பொறுப்பை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் ஒப்படைத்து செலவுக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி தந்தது.
இங்கிருந்து தான் ஊழல்கள் ஆரம்பமாகியுள்ளன. இப்பணத்தை கொண்டு புது விளையாட்டு அரங்கங்கள், விடுதிகள், சொகுசு பங்களாக்கள், புதிய ரக கார்கள், புதிய சாலைகள் என அமைக்கப்படுகின்றன.
உலகின் பார்வையில் இந்தியா தனியாக உயர்ந்து தெரிய வேண்டும். இந்திய மக்கள் குடிப்பது மினரல் வாட்டர், கொப்பளிப்பது பன்னீர், வறுமையென்றால் இந்தியா மக்களுக்கு என்னவென்றெ தெரியாது என காட்ட வேண்டும் என்பதற்காக விளையாட்டுப்போட்டி நடைபெறும் பகுதிகளில் உள்ள குடிசைகளை டெல்லி மாநகராட்சி மூலம் காலி செய்தது அரசு. அப்போது முதல் அதிகமான சர்ச்சைக்கும், குற்றச்சாட்டுக்கும் ஆளாகி வருகிறார் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி.
சுரேஷ்கல்கல்மாடி. மகாராஸ்ட்ரா மாநிலம் பூனோ நகரில் பிறந்தவர். பைலட்க்கு படித்து 1965, 71ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் ராணுவ விமான அதிகாரியாக பணியாற்றிவிட்டு வெளியே வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து இளைஞர் காங்கிரஸ் பிரிவு சார்பில் எம்.பியானவர்.

இராஜிவ்காந்திக்கு நெருக்கமாகயிருந்ததால் மத்திய இணையமைச்சர் வரை பொறுப்புகளை வகித்தவர். தற்போதும் எம்.பியாகவுள்ளார்.

கட்சி பதவிகள் மட்டுமல்ல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 1996 முதல் இருந்து வருகிறார். 2001 முதல் ஆசிய தடகள சங்கத்தின் தலைவராக உள்ளார். 1989 முதல் இந்திய தடகள சங்கத்தின் தலைவராகயிருந்தவர் தற்போது நிரந்தர தலைவராக மாற்றிக்கொண்டுள்ளார்.

இப்படி பல விளையாட்டு கமிட்டியின் முக்கிய பொறுப்பில் இவரேவுள்ளார். காமன்வெல்த் போட்டியை நடத்தும் பொறுப்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் மத்தியரசு ஒப்படைத்தது முதல் சுரேஷ்கல்கல்மாடி பெரிய ஸ்டார் ஆகிவிட்டார்.
அந்த ஸ்டார் மீது தான் கடந்த வாரம் பகிரங்கமாக குற்றசாட்டுகளை வைத்தார் அதே ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பியும், முன்னால் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருமான மணிசங்கர்அய்யர். டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம், இந்தியாவில் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தெருவில் வாழ்கிறார்கள்.

ஆனால் 35 ஆயிரம் கோடி செலவில் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்க்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. மற்ற நாடுகளுக்கு லஞ்சம் தந்து இந்தியாவில் போட்டிகள் நடத்த வாய்ப்பு பெறப்பட்டது இது மோசமான, மனிதாபிமானமற்ற செயல்.

இப்பணத்தை கொண்டு சிறந்த வீரர்களை உருவாக்கினாலே இந்தியாவுக்கு பல பதக்கங்கள் கிடைக்கும், ஊழல் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என போட்டு தாக்கினார்.
இவரின் கருத்துக்கு வலு சேர்ப்பது போல் மத்திய கண்காணிப்பு ஆணையம், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்ட பல கட்டிடங்கள் உறுதியற்றவை,  கட்டம் கட்ட ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் மோசமானவை என்ற அறிக்கையை மத்தியரசிடம் தந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தன் பங்குக்கு சி.பி.ஐக்கு ஒரு பெரிய பைல் அனுப்பியுள்ளது.

அதில் காமன்வெல்த்க்காக கட்டப்பட்டுள்ள கட்டிடம் கட்டுவதற்க்கு விடப்பட்ட டென்டரில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் பெரிய அதிகாரிகள் எல்லாம் தவறு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மென ஆதாரங்களுடன் பெயர் பட்டியல்களை அனுப்பியது.
இதையெல்லாம் சேர்த்து வைத்து யோசித்த அரசியல் கட்சிகள் மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு பின் போர்க்கொடி தூக்கியுள்ளன. 
காமன்வெல்த் போட்டியை வைத்து திட்டமிட்டே ஊழல் செய்துள்ளார்கள் இதை விசாரிக்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ். ஊழல்க்கு ஆதாரம் உள்ளதால் நடவடிக்கை எடு என கம்யூனிஸ்ட், பி.ஜே.பி. விவகாரத்தை பெருசாக்கியதால் தற்போது பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை நடக்கும் என்பதே ஒரு நாடகம் தான். மூன்று மாதத்திற்கு முன்பு வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் பயணம் செய்ய அதாவது ஊர் சுற்ற விலை உயர்ந்த 2 ஆயிரம் கார்கள் வாங்கப்பட்டது.

அதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்ற தகவல் வெளியானது. ஆனால் அதை திட்டமிட்டே காங்கிரஸ் கட்சி அமுக்கியது. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது நடைபெற்ற ஊழலில் பெரும் பகுதி குறைந்திருக்கும். ஆனால் மத்தியரசு அதை செய்ய வில்லை.

காரணம் கொள்ளையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கும் பங்குயிருப்பதால் தான். 
தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் கூட கண் துடைப்பு தான். விசாரணை நடக்கும். . . . நடக்கும். . . . நடந்து கொண்டேயிருக்கும்;போட்டிகள் முடிந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஊழலை மறக்க ஆரம்பிப்பார்கள், வேறு வேலைகள் வரும் எல்லோரும் அதற்கு போய்விடுவார்கள்.

ஊழல்களை கண்டுபிடிக்க களம்மிறக்கப்பட்டவர்கள் சில ஆண்டுகள் கழித்து திடிரென ஒருநாள் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை தருவார்கள். காரணம் ஊழல் செய்தவர்கள் ஆளும் அரசியல்வாதிகள். அதை விசாரிப்பவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள். இந்த ஊழல் விளையாட்டு நமக்கு பழகி போன ஒன்று தான்.
இந்தியாவின் பல மாநிலங்களில், கிராமங்களில் வசிக்க வீடுயில்லாமல், உண்ண உணவு இல்லாமல், விவசாய கடனை அடைக்க முடியாமல், படிக்க வழியில்லாமல் உள்ளவர்களுக்கு இந்த 35 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருந்தால் வறுமை போய் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.
குறைந்த பட்சம் அதை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க, சிறந்த மைதானங்களை உருவாக்க பயன்படுத்தியிருந்தால் அவர்கள் பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பார்கள்.

அப்படியில்லாமல் கொள்ளையடிக்க நடத்தப்படும் இந்த விளையாட்டுப்போட்டியால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பொய்யான இந்தியாவை கண்டு பெருமையாக இருக்கலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த விளையாட்டு கேவலமான ஒன்
று. 

நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ??

நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???




விளம்பரதாரர் : வெண்ணிற முத்துப்போன்ற பற்களுக்கு கோபால் பல்பொடி....


இவ்வளவு அப்பட்டமாக தொலைகாட்சிகளில் காட்டியும்....நம்ம ஊரு ஆசாமிங்க அசராம பாதயாத்திரை....குரு பூஜை..
யாகம்....தங்க செருப்பு காணிக்கை என்று திரும்பவும் கிளம்பிவிட்டார்கள்......





இதில எங்கே தவறு இருக்கிறது....? 

நமது மனதுக்குள் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்று அடி மனதில் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கிறது .... (15 minutes fame - எழுத்தாளர் சுஜாதா சொல்லித்தான் தெரியும் )

குடும்ப பெண்கள் அல்லது பணிபுரிபவர்கள் காலப்போக்கில் குடும்ப பொறுப்புகளால் தங்களது திறமைகள் முடக்கப்படுவதாக உணர்கிறார்கள்.... அவர்கள் போன்ற அம்மாஞ்சிகளாக பொருக்கி எடுத்து க்ரூப் சேர்ப்பதுதான் இந்த மாதிரி சாமியார்கள் செய்யும் வேலை... லீலை... இன்னபிற கன்றாவி எல்லாம்.....

இன்றைய தேதியில் உங்களுக்கு பத்து ஜென் குரு கதைகள்.... சில வாழ்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களின் சுய முன்னேற்ற வரிகளும் தெரிந்திருந்தாலே போதும் நீங்களும் ஒரு சாமியார் தான். 

இப்பொழுதெல்லாம் சாமியார்கள் ரொம்பவே ஹைடெக் ....அவர்களுக்கு என்று இணைய தளம் ....பூஜைகள் நேரடி ஒலி ஒளி பரப்பு...மாதா மாதம் பாப் பாடல்கள் ரிலீஸ் செய்வதுபோல குறுந்தகடு வெளியீடு....Land rover car....Black berry cell phone with 3g connection. இவர்கள் சொற்பொழிவு அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றது போல இருக்கும்...

நம்ம பாப்பையா பட்டிமன்றதில் திரு . ராஜா அவர்கள் எப்படி காலத்திற்கு தகுந்தாற்போல நகைச்சுவை கலந்து பேசுவாரோ அப்படி...



இது போன்ற சாமியார் போலிகள் பொதுவாக படித்த இளைய தலைமுறைகளை கவர்வதில்லை.... அதனாலேயே பொது அறிவு ரொம்ப கம்மியாக இருக்கும் குடும்பப் பெண்களையும்.... சில அம்மாஞ்சி கணவர்மார்களையும் இது போன்ற அமைப்பு
கவர்ந்து விடுகிறது.... 

பொதுவா கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்... முயல் பிடிக்கிற .....................(பிராணி) எது என்று? கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்க.


அப்படியும் இந்த பால் வடியும் முகத்தை பார்த்து எப்படி பரவசம் வருகிறதோ ? 
அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்... 

சில பேர் தவறான ஆளை பின்பற்றிவிட்டோமே என வருந்தி திருந்துகின்றனர்... சிலர் தன் தவறை நியாயப்படுத்தவே முயல்கின்றனர்.... அப்படி என்ன தவறு செய்து விட்டார்? ஹா ஹா ஹா 
ரொம்ப சுலபமான கேள்வி தான்..

அவர் எங்களுக்கு யோகா முறைப்படி ... சக்கரங்களின் அமைப்பையும் ... உடல் கூறுகளின் இயக்கங்களையும்... ஆன்மாவை மேன்மை அடைய வழியும் சொல்லித்தரும் குரு.... என்று சொல்லி சமாளிகின்றனர்...

இதெல்லாம் நாங்க சக்திமான் சீரியல்லையே பாத்துடோமப்பு.... இந்த கதையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்...


விவேகானந்தரும், வள்ளலாரும், ரமண மகரிஷியும் வாழ்ந்த நமது தேசத்தில் ஆன்மிகத்தை தேடி ஏன் போலிகளிடம் போய் விழுகிறீர்கள்...?

நல்லது செய்ய நினைத்தால் ஏகப்பட்ட அமைப்புகள் இருக்கிறது....அதில் சேர்ந்து செய்யலாமே....

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் ...

இது போன்ற போலி ஆ-சாமிகள் ...குரு பூஜை ...சொற்பொழிவு...என்று சொல்லி ஊருக்கு மையத்தில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடித்து ஒரு ஆளுக்கு தீட்சை அளிக்க 5000 ரூபாயில் இருந்து வசூலிக்கின்றனர் ....

இது போக இந்த சாமியாரின் கைப்பட்ட புத்தகம்....பேனா.... செடி...குத்து விளக்கு... மாணவர்கள் பரீட்சைக்கு எடுத்து செல்ல படம் , பேனா... மற்றும் 

இந்த பால் வடியும் மூஞ்சி படம் பொறித்த டாலர் இதை பெண்கள் தாலி போல அணிய வேண்டுமாம்...தனது (கணவன் படத்தை கூட அணிந்திருக்க மாட்டார்கள்!) ...மணிக்கட்டில் அணியக்கூடிய செப்பு தகடு....என்று வியாபார லிஸ்ட் நீள்கிறது....

எங்கே செல்கிறீர்கள் ஆன்மிகத்தை தேடி....????

கொஞ்சமாவது பகுத்தறிவுன்னு இருந்தால் இதையெல்லாம் உங்கள் மனசிடம் 
கேட்டு பாருங்கள்...

௧) ஒரு சாமியாருக்கு எதற்கு குஷன் சோபாவும். ஆடம்பர கார்களும்?



௨) ஒரு ஆன்மிகத்தை போதிப்பவன் எதற்கு அவனது படத்தை பொறித்த பொருட்களை அணிவிக்கவோ அல்லது பூஜை செய்யவோ சொல்ல வேண்டும்...?

௩) ஒரு சினிமா நட்சத்திரம் போல எதற்கு இவ்வளவு விளம்பரம் ? ஆடம்பரம் ?

௪) உங்களை எது ஈர்க்கிறது ..... புதிதாக எதையும் இந்த உலகத்தில் இருந்து உங்களுக்கு அவன் கொடுத்துவிட போவதில்லை...பின்பு எதை தேடி இந்த போலிகளிடம் சிக்குகிறீர்கள்...?

உண்மையான ஆன்மிகம் எங்கோ ஒரு மூலையில் அமைதியாய் இருக்கிறது.... இவையெல்லாம் உங்களை மூடர்களாய் ஆக்கி பணம் சம்பாதிக்கும் உத்திகள் அன்றி சத்தியமாய் ஆன்மீகமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.....