நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???
விளம்பரதாரர் : வெண்ணிற முத்துப்போன்ற பற்களுக்கு கோபால் பல்பொடி....
இவ்வளவு அப்பட்டமாக தொலைகாட்சிகளில் காட்டியும்....நம்ம ஊரு ஆசாமிங்க அசராம பாதயாத்திரை....குரு பூஜை..
யாகம்....தங்க செருப்பு காணிக்கை என்று திரும்பவும் கிளம்பிவிட்டார்கள்......
இதில எங்கே தவறு இருக்கிறது....?
நமது மனதுக்குள் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்று அடி மனதில் எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கிறது .... (15 minutes fame - எழுத்தாளர் சுஜாதா சொல்லித்தான் தெரியும் )
குடும்ப பெண்கள் அல்லது பணிபுரிபவர்கள் காலப்போக்கில் குடும்ப பொறுப்புகளால் தங்களது திறமைகள் முடக்கப்படுவதாக உணர்கிறார்கள்.... அவர்கள் போன்ற அம்மாஞ்சிகளாக பொருக்கி எடுத்து க்ரூப் சேர்ப்பதுதான் இந்த மாதிரி சாமியார்கள் செய்யும் வேலை... லீலை... இன்னபிற கன்றாவி எல்லாம்.....
இன்றைய தேதியில் உங்களுக்கு பத்து ஜென் குரு கதைகள்.... சில வாழ்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களின் சுய முன்னேற்ற வரிகளும் தெரிந்திருந்தாலே போதும் நீங்களும் ஒரு சாமியார் தான்.
இப்பொழுதெல்லாம் சாமியார்கள் ரொம்பவே ஹைடெக் ....அவர்களுக்கு என்று இணைய தளம் ....பூஜைகள் நேரடி ஒலி ஒளி பரப்பு...மாதா மாதம் பாப் பாடல்கள் ரிலீஸ் செய்வதுபோல குறுந்தகடு வெளியீடு....Land rover car....Black berry cell phone with 3g connection. இவர்கள் சொற்பொழிவு அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றது போல இருக்கும்...
நம்ம பாப்பையா பட்டிமன்றதில் திரு . ராஜா அவர்கள் எப்படி காலத்திற்கு தகுந்தாற்போல நகைச்சுவை கலந்து பேசுவாரோ அப்படி...
இது போன்ற சாமியார் போலிகள் பொதுவாக படித்த இளைய தலைமுறைகளை கவர்வதில்லை.... அதனாலேயே பொது அறிவு ரொம்ப கம்மியாக இருக்கும் குடும்பப் பெண்களையும்.... சில அம்மாஞ்சி கணவர்மார்களையும் இது போன்ற அமைப்பு
கவர்ந்து விடுகிறது....
பொதுவா கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்... முயல் பிடிக்கிற .....................(பிராணி) எது என்று? கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்க.
அப்படியும் இந்த பால் வடியும் முகத்தை பார்த்து எப்படி பரவசம் வருகிறதோ ?
அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...
சில பேர் தவறான ஆளை பின்பற்றிவிட்டோமே என வருந்தி திருந்துகின்றனர்... சிலர் தன் தவறை நியாயப்படுத்தவே முயல்கின்றனர்.... அப்படி என்ன தவறு செய்து விட்டார்? ஹா ஹா ஹா
ரொம்ப சுலபமான கேள்வி தான்..
அவர் எங்களுக்கு யோகா முறைப்படி ... சக்கரங்களின் அமைப்பையும் ... உடல் கூறுகளின் இயக்கங்களையும்... ஆன்மாவை மேன்மை அடைய வழியும் சொல்லித்தரும் குரு.... என்று சொல்லி சமாளிகின்றனர்...
இதெல்லாம் நாங்க சக்திமான் சீரியல்லையே பாத்துடோமப்பு.... இந்த கதையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்...
விவேகானந்தரும், வள்ளலாரும், ரமண மகரிஷியும் வாழ்ந்த நமது தேசத்தில் ஆன்மிகத்தை தேடி ஏன் போலிகளிடம் போய் விழுகிறீர்கள்...?
நல்லது செய்ய நினைத்தால் ஏகப்பட்ட அமைப்புகள் இருக்கிறது....அதில் சேர்ந்து செய்யலாமே....
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் ...
இது போன்ற போலி ஆ-சாமிகள் ...குரு பூஜை ...சொற்பொழிவு...என்று சொல்லி ஊருக்கு மையத்தில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடித்து ஒரு ஆளுக்கு தீட்சை அளிக்க 5000 ரூபாயில் இருந்து வசூலிக்கின்றனர் ....
இது போக இந்த சாமியாரின் கைப்பட்ட புத்தகம்....பேனா.... செடி...குத்து விளக்கு... மாணவர்கள் பரீட்சைக்கு எடுத்து செல்ல படம் , பேனா... மற்றும்
இந்த பால் வடியும் மூஞ்சி படம் பொறித்த டாலர் இதை பெண்கள் தாலி போல அணிய வேண்டுமாம்...தனது (கணவன் படத்தை கூட அணிந்திருக்க மாட்டார்கள்!) ...மணிக்கட்டில் அணியக்கூடிய செப்பு தகடு....என்று வியாபார லிஸ்ட் நீள்கிறது....
எங்கே செல்கிறீர்கள் ஆன்மிகத்தை தேடி....????
கொஞ்சமாவது பகுத்தறிவுன்னு இருந்தால் இதையெல்லாம் உங்கள் மனசிடம்
கேட்டு பாருங்கள்...
௧) ஒரு சாமியாருக்கு எதற்கு குஷன் சோபாவும். ஆடம்பர கார்களும்?
௨) ஒரு ஆன்மிகத்தை போதிப்பவன் எதற்கு அவனது படத்தை பொறித்த பொருட்களை அணிவிக்கவோ அல்லது பூஜை செய்யவோ சொல்ல வேண்டும்...?
௩) ஒரு சினிமா நட்சத்திரம் போல எதற்கு இவ்வளவு விளம்பரம் ? ஆடம்பரம் ?
௪) உங்களை எது ஈர்க்கிறது ..... புதிதாக எதையும் இந்த உலகத்தில் இருந்து உங்களுக்கு அவன் கொடுத்துவிட போவதில்லை...பின்பு எதை தேடி இந்த போலிகளிடம் சிக்குகிறீர்கள்...?
உண்மையான ஆன்மிகம் எங்கோ ஒரு மூலையில் அமைதியாய் இருக்கிறது.... இவையெல்லாம் உங்களை மூடர்களாய் ஆக்கி பணம் சம்பாதிக்கும் உத்திகள் அன்றி சத்தியமாய் ஆன்மீகமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.....