திருக்குறள்

தியானத்திற்கும் ஒரு முனைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

அ‌ன்னை : தியானம் முற்றிலும் ஒரு மனச் செயல், மனோமய ஜீவனுக்கு மட்டுமே அதில் ஈடுபாடு. தியானிக்கும்போதே ஒருவன் ஒருமுனைப்படலாம், ஆனால் அது மனத்தின் ஒரு முனைப்பு; அதனால் ஒருவன் மோனம் பெறலாம், ஆனால் அது மனத்தின் மோனமாக மட்டுமே இருக்கும்; ஜீவனின் மற்றப் பாகங்கள் தியானத்திற்கு இடையூறு செய்யாதபடி செயலற்ற, அசைவற்ற நிலையில் வைக்கப்படுகின்றன. நீ ஒரு நாளில் இருபது மணி நேம் தியானம் செய்யலாம், ஆனாலும் மீதி நாலு மணி நேரத்தில் நீ முற்றிலும் சாதாரண மனிதனாகவே இருப்பாய். ஏனெனில் உன்னுடைய மனம் மட்டுமே தியானத்தில் ஈடுபட்டிருந்தது - ஜீவனின் மீதிப் பகுதிகள், பிராணனும் உடலுணர்வும், தியானத்திற்கு இடையூறு செய்யாத அளவில் அடக்கி வைக்கப்பட்டிருந்தன. தியானத்தில், ஜீவனின் மற்றப் பகுதிகளுக்கு நேரடியாக ஒன்றும் செய்யப்படவில்லை.

மறைமுகமாக தியானத்தின் பயன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால்.... தியானஞ் செய்வதில் விசேஷத் திறமை உடையவர்களைப் பார்த்திருக்கிறேன்; தியானத்தில் இல்லாதபோது அவர்கள் சர்வ சாதாரணமான மனிதர்களாகவே இருந்தார்கள், சில சமயங்களில் அவர்கள் மோசமான சுபாவம் உடையவர்களாகக் கூட இருந்தார்கள், அவர்களுடைய தியானத்திற்கு இடையூறு உண்டாக்கிவிட்டால் அவர்களுக்குக் கடுஞ்சினம் உண்டாகிவிடும். ஏனெனில் அவர்கள் தங்களுடைய மனத்தை மட்டுமே அடக்கக் கற்றிந்தார்கள். ஜீவனின் மற்றப் பாகங்களை ஆளக் கற்கவில்லை.

தியானத்தைவிட ஒரு முனைப்பு அதிக சுறுசுறுப்பான நிலை. நீ மனத்தளவில், பிராணனளவில், சைத்திய அளவில், உடலளவில் ஒருமுனைப்படலாம், ஒருங்கிணைந்த முறையிலும் (integrally) ஒருமுனைப்படலாம். ஒருமுனைப்பு, ஒரு முனையில் உணர்வை ஒன்றாகத் திரட்டுவது, அது தியானத்தைவிடக் கடினமானது. நீ உன் உணர்வின் அல்லது ஜீவனின் ஒரு பகுதியை அவ்வாறு குவிக்கலாம் அல்லது உனது உணர்வு முழுவதையோ அதன் துண்டுகளையோ ஒன்றாகத் திரட்டலாம்; அதாவது உன்னுடைய ஒரு முனைப்பு அரைகுறையானதாகவோ, முழுமையாக அல்லது ஒருங்கிணைந்ததாகவோ இருக்கலாம்; அதன் பயனும் அதற்கேற்றபடி வேறுபடும்.

உன்னிடம் ஒரு முனைப்புத் திறன் இருக்குமானால் உனது தியானம் அதிகக் கவர்ச்சியுடையதாகவும் எளிதாகவும் இருக்கும். ஆனால் ஒருவன் ஒருமுனைப்படாமல் தியானம் செய்யலாம். சிலர் தியானிக்கும் போது ஒரு கருத்துத் தொடரைப் பின்பற்றிச் செல்வார்கள் - அது ஒரு முனைப்பு அன்று, தியானம்

ந‌ன்‌றி : அ‌ன்னை‌யி‌ன் நூ‌ல்
தொகு‌திகே‌ள்‌விகளு‌ம் ப‌தி‌ல்களு‌ம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற