பறந்து வந்த
இறகுகளைக்கண்ட குருவிகள்
சமாதானமடைந்தன
அலைந்து திரியும்
வாழ்க்கை மேலென்று
கிளை ஒடிந்து
சிறுவன் விழுந்ததும்
மரத்தை சபித்தார்கள்
மரமோகைகள் துண்டானதால்
வலியில்
முனகிக் கொண்டிருந்தது
இக்கரைக்கும்
அக்கரைக்கும்
வழியனுப்பிய
பரிசல்கள்
வழி தொலைந்து நின்றன
நீர் வற்றியதால்.