கற்பனைத் திறனில் இவர் ஒர் ஆழி
இன்னும் நூறாண்டு வாழி
நீயும்தான் வாழ்த்தேன் தோழி
படித்தோம் நாம் இராமயணத்து
வல்லவன் வாலி அன்று
மறைந்துதான் தாக்கினான்
காவியத் தலைவன் இராமன் அன்று
பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி
மறைந்தோ மறையாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
குறிவைத்தோ வைக்காமலோ
யாரும் தாக்க முடியுமோ இவரை?
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?
- சினிமா விரும்பி