திருக்குறள்

சுனாமி...


சுனாமிக்குகூடஇடம்

பொருள் ஏவல்தெரிந்தே

இருந்ததோ


மேட்டுக்குடிகளை

மெட்டுகள் ரசிக்க வைத்துவிட்டு

குப்பங்களை அல்லவா

கொள்ளை கொண்டது


வந்ததும்

ஞாயிறன்றுதான்

திங்கள் முதல்வெள்ளி

வரைசின்னத்திரைத் தொடர்களுக்கு

தடையில்லாமல்


மகான் பிறந்த மறுநாள்

மகவுகளின் முகவரிகள்

கேள்விக்குறிகளாகாமல்

ஈன்றோரையும் சேர்த்துதானே

இழுத்துக்கொண்டது


கால்வருடி மீளும்போது

பள்ளம் விட்டுச் சென்ற அலைகள்

இன்றும்தான் பள்ளம் பறித்தன

புதைகுழிகளாய்


தவிப்போர்க்கு உதவ

நல்லோர் பலரைவிட்டும்

வைத்ததே


ஆறுதல்

அமைதி

ஆண்டவனிடம் வேண்டல்

இதுதானே நம்மால் முடியும்

இப்போதைக்கு
- அப்துல் கதீம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற