திருக்குறள்

அதிலும்...

கையேந்த நான் நினைத்து
பாதை பார்த்து நிற்கும் போது
எனைப் பார்த்து ஒரு மனிதன்
மடியேந்தி நிற்கிறான்...

ஆற்றுத் தண்ணீர் தானே என்று
அருகில் சென்று குடிக்கப் போனால்
அங்கொருவன் நின்று கொண்டு
அதிலும் எச்சில் துப்புகிறான்...

எங்கு நான் சென்றாலும்
எனக்கு மட்டும் எதற்காக
சங்கடங்கள் இது போல
பின் தொடர்ந்து வருகிறது...

ஆயிரம் மனிதர் வாழும் இந்த
அவனியிலே எனக்கு மட்டும்
ஆவி எடுக்கும் ஆராதனைகள்
ஏனோ....

விடை தெரியாமல் புலம்பும்
விட்டில் பூச்சிகள்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற