![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFfeGtjV8XTGnMxtJTo_Nxd0gFYbLB1VFVoTKLwcL1iu8nMEYzHZ_DAN81pkSQL6Ss9IZ8Dy0C8MS2-XNVJqT17kug7S_CPlSOBb2mnRUPqrkgUP2oVNDrqkDF8nbPmSJryKdB-CN5FNo/s320/ATT230474.jpg)
விலை போக வேண்டுமென்று
இரக்கப்பட்டு இறைவன் கொடுத்த
வனப்பைக் கொண்டு வனிதை நீங்கள்
வாலிப நெஞ்சம் கெடுக்கின்றீர்....
சிலகாலம் கொடுத்திருக்கும்
நிலையில்லா அழகைக் கொண்டு
பல காலம் எங்களது
இதயங்களை வதைக்கின்றீர்....
நல்ல எண்ணம் கொண்டு நீங்கள்
உய்வதற்கு வழிவகுத்த
இறைவனின் சிந்தையால்
எம் சிந்தைக் குலைக்கின்றீர்....
கொடுத்த அழகைக் காப்பதிலே
படுசிரத்தைக் கொள்ளும் நீங்கள்
அடுத்து நிற்கும் எங்களை
கெடுக்க எதற்கு நினைக்கின்றீர்....