http://www.who.int/tobacco/en/atlas23.pdf
இந்தப் பக்கத்தைச் சுட்டி இணைய வர்த்தகத்தில் எங்கே விலை மலிவாக, தரமுள்ள சிகரெட்டை வாங்கலாம் என்பதை தீர்மானித்து வர்த்தகம் செய்யலாம், இணைய உலகில் எந்த நாட்டில் விற்பனையாளர்கள்? எந்த நாட்டில் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் சிகரெட் வர்த்த்கத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்கிறது.
அமெரிக்காவில் மட்டும் 2000 இணைய வர்த்தகர்கள் இருக்கிறார்கள். இதற்கென்றே 88 இணைய்தளங்கள் இருக்கின்றன. பீடி விற்கும் தளங்கள் 8 இருக்கிறது என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். இணையம் மூலம் சிகரெட் வாங்குவதில் 50 விழுக்காட்டுக்கு மேல் வாலிபர்களும் வாலிபிகளும் இருப்பது அமெரிக்காவில்!
இணையம் மூலம் சிகரெட்டுக்கு ஆடர் செய்துவிட்டு வாங்காமல் தேங்கிய சிகரெட் மட்டும் இங்கிலாந்து சுங்கவரித்துறையினர் அழித்த சிகரெட்டுகள் 10மில்லியன்(10,000,000)கள்! இணையம் மூலம் சிகரெட் வாங்குவது எதோ இன்று நேற்று துவங்கியது அல்ல 1990களிலேயே துவங்கிவிட்டதாக இன்னுமொரு தகவல் அதிர்ந்து தெரிவிக்கிறது.
வியாதிகள் பலவிதம்....
நுரையீரல் வியாதி, நுரையீரல் புற்று நோய்(85சதம் குணப்படுத்த இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது),மூக்கடைப்பு, மூக்கு, தொண்டை சிவந்தும் தடித்தும் ஏற்படும் நோய் உட்பட பெயர் வாயில் நுழையா நோய்கள் 80முதல் 90 சதம் நோய் புகையுறிஞ்சுவதால் மட்டுமே வருகிறது.
சிகரெட் புகைப்பவர்களில் முப்பது விழுக்காடு இதய நோய் பாதிப்பால் விழுந்து அல்லலுறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுதான் இதற்கு முழு முதற்காரணம். உறிஞ்சுகின்ற புகைஇதயத்திலிருந்து இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிற இரத்தக் குழாய்ச் சுவரின் உட்பகுதியை தடிமனாக்கிவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகச் சென்றடைய முடியாமற் பிரளயத்தை ஏற்படுத்திமரணத்தின் அழைப்பு மணியை அடிநாதமாய் ஒலிக்க வைக்கின்றது.
நிகோடின் என்ற நச்சு, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, பிராணவாயுத் தகராறு என்று மெல்லக் கொல்லுகின்ற பேராபத்துக்கு அடித்தளமிடுகிறது.
புகையுறிஞ்சல் அதிகரிக்கும்போது நெஞ்சுவலியும் திடீர் மாரடைப்பும் ஏற்படுகின்ற கொடூரம் நிகழும்.
இரத்தம் உறை நிலை (Blood clots) என்பது புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகமுண்டு.
புற்றுநோய்...
ஒருவர் புகைப்பதால்உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள்(salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி(larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus)மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும்.வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்துகொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.
பெண்களுக்கு...
புகைப்பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்குநின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள்சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில்உடைந்துவிடுகின்ற தனமையையும் (osteoporosis) ஏற்படுத்தும்.
கொடிது கொடிதுஅடுத்தவர்
ஊதும் புகையைச் சுவாசிப்பது....
நான் புகைப்பிடிக்கும் பழக்கமில்லதவன் என்று மார்தட்டிக் கொள்ளுபவர்களே! நீங்கள் கூட புகைப்பிடிப்பவரிடமிருந்து விலகி இருக்காவிடில் பிறர் ஊதித்தள்ளும் புகையை நீங்கள் சுவாசிக்க நேரும்சந்தர்ப்பங்கள் அதிகமானால் உங்களையும் நோய் நெருங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வது காலத்தின் கட்டாயம்.
புகைப்பழக்கமில்லாத, ஆனால் பிறர் விடும் புகையை உள்ளிழுத்துக் கொண்டவர்களைச் சாவு அரவணைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அமெரிக்காவில் 73,000 பேர்! இதில் மிக மோசமானகார்டியோவாஸ்குலர் நோய் தாக்கியிருந்ததாக அறியப்பட்டோர் மட்டும் 57,000 பேர்!!
புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு எவ்வளவு கெடுதல்களை ஏற்படுத்துமோ, அதைவிடக் கொடிது அவர்கள்ஊதித்தள்ளும் புகையை சுவாசிப்பதும் உறிஞ்சுவதும் ஆகும்.
வீட்டில் புகையை ஊதித்தள்ளுவதால், கைக்குழந்தைகளும், சிறார்களும் அந்தப் புகையால் அவர்களின் இளந் திசுக்களும் சீர்கெடுவதோடு, அவர்களும் பலவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.
ஒவ்வொருவருடமும் அடுத்தவர் ஊதித்தள்ளும் புகைக்குப் பலியாகிறவர்கள் நியூ மெக்சிக்கோவில் மட்டும் 2,700பேர் என்பது அமெரிக்க மாநிலங்களிலேயே மிக அதிகமாகும்!
வல்லமை படைத்த இனிய விரோதி....
நிகோடின் நஞ்சு வயோதிகத்தை வரவழைக்கும் வித்தைக்காரன். இரவுத் தூக்கத்தை குறைக்கும் மாபெரும் அரக்கன்இந்த நிகோடின். உண்ட உணவு செரித்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளும் சுயநலவாதி! அடுத்தவர் உறக்கத்தை உண்டு இல்லையென்று செய்துவிடும் குறட்டையைப் பரிசாகத் தந்திடும் இனிய விரோதி!
புகை உங்கள் இனிய குரலை கரடுமுரடாக மாற்றிச் சாகசம் செய்ய வைக்கும்! அதிலும் பெண்கள் குரலை ஆண்குரலுக்கு இணையாக மாற்றி அற்புதச் சாதனை படைக்க வல்லது! புகைப்பிடிக்கும் பெண்களுக்கு,புகைபிடிக்காதவர்களை விட 7 மடங்கு முகத்தில் முடி வளருகின்ற அரிய வாய்ப்பை வழங்கும் வல்லமை படைத்தது.
இன்றைக்கு, புகையுறிஞ்சுவதும், புகையிலையை மென்று உள்ளே தள்ளுவதும் எவ்வளவு உயிராபத்து என்று அறிந்துகொள்ளுகின்ற வாய்ப்பை உலகில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அளப்பறிய பணியாற்றி வருவதைஅறியும் போது மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது.
வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்.....
ஆண்டொன்றுக்கு 42,,000 உயிர்ப் பலிகளை நிகழ்த்தும் எமனாக சிகரெட் அமெரிக்காவில் உள்ளது என்பது எந்தக் கலப்புமில்லா உண்மை. அதாவது ஒவ்வொருநாளும் 1,200 பேர் பலியாகின்றனர்.புகைப்பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஒவ்வொரு நாளும் விமான விபத்தில் 1,200 பேர்விழுந்து செத்துப் போகிறார்கள் என்றால் யாராவது விமானப் பயணத்துக்கு உடன்படுவார்களா?
அதைப் பிடிப்பதால் மரணம் நிச்சயம் என்று
நிர்ணயிக்கப்பட்ட நிதர்சனமான உண்மை!
பிடித்ததைப் பிடிக்காமல் செய்யுங்கள்; உங்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுள்ளதை கண்காணாத தூரத்திற்கு தூக்கி வீசுங்கள்; நல்ல காற்றைச் சுவாசிக்க உங்கள் சுவாசப் பைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்.
உங்கள் கை விரலிடுக்கில் தப்பித் தவறி நுழைந்துவிடாமற் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; புகை வலையங்களுக்குள்சிக்கிக் கொள்வதில்லை என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் உங்கள் வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்எமனிடமிருந்து விலகிவிட்டீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்று நிரூபியுங்கள்.
- ஆல்பர்ட்