திருக்குறள்

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் - 20வது இடத்தில் கலாநிதி மாறன்

2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சன் குழும அதிபர் கலாநிதி மாறன் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளார்.

போர்ப்ஸ் இதழ் இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் கலாநிதி மாறனுக்கு 20வது இடம் கிடைத்துள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய டிவி குழுமங்களில் சன் டிவியும் ஒன்றாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் பெரும் பெரும் டிவி குழுமங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில் இந்தியாவில் தொடங்கப்பட்ட டிவி குழுமம்தான் சன்டிவி.

சென்னையில், தொடங்கி இன்று இந்தியா முழுவதும் வியாபித்துள்ள சன் குழும சானல்கள், பிராந்திய மொழி ஒளிபரப்பில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்துள்ளன.
மக்களின் ரசனையை மாற்றி அமைத்தவை சன் டிவியின் நிகழ்ச்சிகள். மெகா தொடர்கள், கேம் ஷோக்கள், திரைப்படங்கள், திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள் என அதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதுமையுடன், தரத்தையும் குழைத்துக் கொடுத்தது சன்.
சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட புதிதில் அதன் விஸ்வரூபம் யாருக்கும் தெரியவில்லை.

 இதனால் பெரிதாக அதைக் கண்டு கொள்ளாத நிலையும் இருந்தது. இந்தி, ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் எடுபடும் என்று கட்டியம் கூறி வந்தனர். ஆனால் அத்தனையையும் தகர்த்து அனைவரையும் சென்னையின் பக்கம் திரும்ப வைத்தார் கலாநிதி மாறன்.

தென் மாநிலங்கள் கலாநிதிமாறனின் தங்கச் சுரங்கமாக மாறியது. சன் டிவியைத் தாண்டி, கன்னடம், மலையாளம் , தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் கிளை பரப்பியது சன் குழுமம். இன்று ஒவ்வொரு மொழியிலும் ஏகப்பட்ட சானல்கள்.
இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு நேயர்களைக் கொண்டுள்ளது சன் டிவி குழும சானல்கள். டிவி உள்ள வீடுகளில் நான்கில் மூன்று பங்கு நேயர்கள் சன் குழுமச் சானல்களைப் பார்க்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் சன் குழுமத்தின் வருவாய் 19 சதவீதம் உயர்ந்து 225 மில்லியன் டாலராக இருந்தது. 80 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியது.
கடைசி காலிறுதியில், சன் குழுமத்தின் விற்பனை மற்றும் லாபங்கள் 21 சதவீதமாக அதிகரித்தது.

சன் குழுமத்தின் வசம் இன்று 20 சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்கள், 46 எப்எம் ரேடியோ நிலையங்கள் உள்ளன.

சுபாஷ் சந்திராவின் ஜீ தொலைக்காட்சி குழுமம்தான் இதுவரை அதிக மதிப்பு வாய்ந்த பட்டியலிடப்பட்ட மீடியா நிறுவனமாக திகழ்ந்தது. அதை தற்போது சன் குழுமம் தகர்த்து முன்னிலைக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் 100 அதிக ரேங்கிங் பெற்ற டிவி நிகழ்ச்சிகள் பட்டியலில் சன் குழுமத்தைச் சேர்ந்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 21 ஆக இருந்துத. அதேசமயம், ஜீ டிவியின் நிகழ்ச்சிகள் வெறும் 16 மட்டுமே.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து டாப் 10 நிகழ்ச்சிகளும் சன் குழுமத்தின் நிகழ்ச்சிகள்தான்.

இத்தனை வெற்றிகளுக்கு மத்தியில் படு அமைதியாக, நிதானமாக இருக்கிறார் கலாநிதி மாறன். எப்படி இது சாத்தியம் என்று அவரிடம் கேட்டபோது, நான் போட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் வளருவற்கு முன்பே வீழ்த்தி விட விரும்புவேன். அவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, கவலைப்பட மாட்டேன் என்கிறார்.

சன் குழுமத்தின் வளர்ச்சியில் கலாநிதியின் பங்கு பெரும் பங்கு என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அரசியல் தொடர்புகளும் சன் குழுமத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

முதல்வர் கருணாநிதியின் பேரன் என்ற ஒரு பெரும் பலன் இருந்ததால், திமுகவினரின் ஏகோபித்த டிவியாக மாறிப் போயிருந்தது சன் டிவி - ஒரு காலத்தில். கலாநிதி மாறனின் தம்பி தயாநிதி மாறனும், சன் டிவியின் வளர்ச்சிக்காக மிகப் பெரிய அளவில் உதவியுள்ளார். ஆனால் அரசியல் பலத்தால் மட்டும் தாங்கள் வளரவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் கலாநிதி மாறன். சன் டிவி 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லை. மீண்டும் நிறுவனம் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப்பட்டபோதும் (2006) திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லை.

சன் குழுமத்தின் 16 ஆண்டு கால வரலாற்றில் பாதி அளவு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியில் இருந்தது. மேலும், எனது உறவினர்களின் உதவிகளை நான் ஒருபோதும் நாடியதே இல்லை.
காலை முதல் இரவு வரை அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் கூட, எனக்கு அதில் சுத்தமாக ஈடுபாடு கிடையாது.

1993ம் ஆண்டு 25 பேர் அடங்கிய குழுவுடன், 86 ஆயிரம் டாலர் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது சன் டிவி. அந்த 25 பேரில் பலரும் கலாநிதியுடன் லயோலா கல்லூரியில் படித்த நண்பர்கள். அவர்களில் 20 பேர் இன்னும் கலாநிதியுடன் இருக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால் சன் டிவியை ஆரம்பித்து விட்ட கலாநிதி மாறன் அதனஒளிபரப்புக்காக முதலில் அணுகியது ஜீ டிவியை. அவர்களின் டிரான்ஸ்பான்டர்கள் மூலம் பிற்பகலில் மட்டும் ஒளிபரப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரினாராம் கலாநிதி.
இதற்காக சுபாஷ் சந்திராவை பார்க்க சென்றிருந்தார் கலாநிதி. ஆனால் அவரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மாறாக ஒரு சாதாரண அதிகாரியைத்தான் கலாநிதியால் பார்க்க முடிந்தது. அந்த அதிகாரியோ, தமிழ் நிகழ்ச்சியையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று கூறி கலாநிதியின் கோரிக்கையை நிராகரித்து விட்டாராம்.

மனம் தளராத கலாநிதி அப்போது ஜீ டிவிக்குப் போட்டியாக இருந்த சிறிய சேனலான ஏடிஎன்-ஐஅணுகினார். அவர்களோ 3 மணி நேரம் ஸ்லாட் தருவதாக கூறினார். ஆனால் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க மாட்டீர்கள் என்று அவ நம்பிக்கையுடன் கூறினார்களாம் கலாநிதியிடம்.
ஆனால் கலாநிதிக்கு நம்பிக்கை இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ் மொழிச் சானலை நிச்சயம் நடத்த முடியும், இந்தி ஆதிக்கத்தைத் தாண்டி வளர முடியும் என்று நம்பினார். மேலும் தென்னிந்தியர்களுக்குப் பெரும்பாலும் தமிழ் புரியும் என்ற காரணத்தினால் தமிழா, இந்தியா என்று வரும்போது நிச்சயம் தமிழைத்தான் அவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையம் கலாநிதியிடம் இருந்தது. அதுதான் கடைசியில் ஜெயித்தது.

கடைசியில் சன் டிவி வெற்றி பெற்றது. 1998ம் ஆண்டு நேரடியாக அப்லிங்கிங் செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு அனுமதித்தது. அதை முதலில் பயன்படுத்திக் கொண்ட சானல்களில் ஒன்றாக சன் இருந்தது.

இந்த சமயத்தில்தான் புத்திசாலித்தனமாக திரைப்படங்களுக்கான டிவி உரிமைகளை வாங்கும் முறையை தொடங்கி வைத்தார் கலாநிதி மாறன். அப்போது அதற்கு அதிக செலவுபிடிக்கவில்லை. இதனால் பெருமளவில் படங்களை வாங்கிக் குவித்தது சன் டிவி. இன்று சன் குழுமத்திடம் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.  இன்று தயாரிக்கப்படும் முக்கிய நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் சன் டிவி வசமே உள்ளது. இது போதாதென்று சன் டிவியும், சன் பிக்சர்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பில் குதித்து அதிலும் வெற்றி பெற்றுள்ளது.

சன் டிவியின் விஸ்வரூப வளர்ச்சிக்து அதன் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மிகப் பெரிய உதவியாக அமைந்தது. தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை எஸ்.சி.வி கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் சன் டிவியால் படு வேகமாக வளர முடிந்தது.

இப்படி தொடர்ந்து வளர்ந்து வந்த சன் குழுமம் இன்று எப் எம் சானல்கள், சன் டைரக்ட் டிடிஎச் என்று கிளை பரப்பி வியாபித்து வருகிறது. விரைவில் விமான சேவையிலும் இறங்கப் போகிறது சன் டிவி.

தனியார் தமிழ் தொலைக்காட்சி உலகில் முதலில் காலடி எடுத்து வைத்த சன் டிவி இன்று தமிழ் தொலைக்காட்சி உலகின் முன்னோடியாக, மிகப் பெரிய இடத்தில் உட்கார்ந்திருக்கிறது என்றால் நிச்சயம் கலாநிதி மாறனின் சலியாத உழைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

- தட்ஸ் தமிழ்

இந்தியாவின் ஜனநாயகம் சிதிலமடைந்த கட்டடம்: ஊடகம் அதன் துரு பிடித்த தூண்

(தலித் முரசு அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

இந்தியாவின் ஜனநாயகம் சிதிலமடைந்த கட்டடம்: ஊடகம் அதன் துரு பிடித்த தூண்


மிகவும் அருவருப்பான மனநிலையோடுதான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். தமிழில் வெகுமக்கள் ஊடகங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளராக அருவருப்பைத் தவிர வேறெந்த உணர்வை அடைந்துவிட முடியும்? உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின், வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன! இதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லை! பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் இருக்கின்றன! வர்த்தக உத்தியோடு வக்கிர புத்தியும் இணையும்போது, எவையெல்லாம் செய்தியாகும் / காட்சியாகும் என்பதற்கு நாள்தோறும் பல சான்றுகளை நாம் குறிப்பிட முடியும். என்றாலும் இந்த அருவருப்பு மனநிலைக்குத் தள்ளிய மூன்று முக்கியமான விஷயங்களை முதன்மையாகப் பட்டியலிட விரும்புகிறேன்.

1


தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஹமாம் சோப்' விளம்பரம் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையைக் கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பனக் குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோடு விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விளையாடிக் கொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்டுல இந்த சந்தேகமெல்லாம் ஏங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை இழுத்து அடித்தபடி அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆட்டோவுல அந்தக் குழந்தைங்களோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதைச் சொல்லும்போது அவர் கண்களிலும், உடல்மொழியிலும் வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.

‘அந்தக் குழந்தைகள்' என்று அவர் குறிப்பிடுவது யாரை? எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையா? தொழு நோயாளிகளையா? இவைகூட தொற்றுநோயில்லையே! பொத்தாம் பொதுவாக அந்தக் குழந்தைகள் என்று குறிப்பிடுவது, மற்ற எல்லா குழந்தைகளையும்தானே. அப்படியானால், அந்த ஒரு சிறுமியைத் தவிர மற்ற குழந்தைகள் சொறியோடு சுத்தமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தப்படுகிறது! ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து போவது, தெருவில் சொறிநாயோடு விளையாடுவதற்கு சமமா என்ன? இதைவிடவும் நிர்வாணமாக சாதிய வக்கிரத்தை வேறெப்படி வெளிப்படுத்த முடியும்?

ஒரு சோப்பை உயர்த்திப் பிடிக்க இவர்கள் இழிவுபடுத்த நினைப்பது யாரை? விளம்பரக் களம் ஒரு பார்ப்பன வீடு என்பதால், காலங்காலமாகத் தொடரும் தீண்டாமையின் அடிப்படையில் இவர்கள் குறிப்பிடுவது தலித் குழந்தைகளை என்று வைத்துக் கொள்ளலாம் தானே! எந்தத் தணிக்கையுமின்றி இந்த விளம்பரம் நாள்தோறும் பல நூறு முறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நம் சுயமரியாதையை கொஞ்சம்கூட அது சுண்டவில்லை. கிராமத்தின் தேநீர்க் கடைகளில் இருக்கும் பேதத்தை கவனிக்கும் நாம், நகரங்களில் சாதியின் நவீன வடிவங்களை சற்றும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த விளம்பரத்தை எதிர்த்து ஒற்றைக் குரல்கூட ஒலிக்காதது, சாதி எதிர்ப்பாளர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தேடலை உருவாக்கி விட்டிருக்கிறது.

பொதுவாகவே, சோப்பு விளம்பரங்களும் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களும் பெண்களை குறிப்பாக கறுப்பான பெண்களை (இப்போது கறுப்பான ஆண்களும் குறிøவக்கப்பட்டிருக்கிறார்கள்) இழிவுபடுத்தும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன! கறுப்பு என்பது ஓர் இனத்தின் நிறம். அதை அழிக்கவோ மாற்றவோ முற்படுவது, இன அழிப்பில் ஈடுபடுவதற்கும் நிறவெறியைத் தூண்டுவதற்கும் சமமானது. கறுப்பானவர்களை தனிமைப்படுத்தும் முயற்சி. அதனால்தான் இந்த விளம்பரங்கள் எந்தத் தணிக்கையும் இன்றி வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘என் நிறத்தை இழிவென்று சொல்வதற்கும் அதை மாற்ற முயல்வதற்கும் நீ யார்?' என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை! கறுப்பாக இருப்பதை கேவலமாக சித்தரித்து, 'நிறம் வெண்மையாக இந்த சோப் போட்டு குளியுங்கள், இந்த கிரீமை பூசுங்கள் என்று நாள்தோறும் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. விற்பனைக்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விற்கலாமா?

வியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று இந்த விளம்பரங்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவை காலங்காலமாக இந்த சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் அடிமைக் கருத்தியல்களை நவீனத்தோடு இணைத்து வளர்த்தெடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கின்றன. பார்ப்பன மனோபாவத்தோடு, பார்ப்பனர்களை முன்வைத்து, அவர்களாலேயே, அவர்களைக் கொண்டுதான் பெரும்பாலும் எல்லா விளம்பரங்களுமே வெளிவருகின்றன. பார்ப்பன வாழ்வியலையும் சாதிய மேலாதிக்கத்தையும் மட்டுமே இவை மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன. குறிப்பாக, குளியல் சோப் உள்ளிட்ட அழகு சாதனப் பொருள்களை பரிந்துரை செய்பவர்கள் பெரும்பாலும் ‘அவா பாஷை' பேசும் பார்ப்பனர்களே! சுத்தமும் அழகும் பார்ப்பனர்களின் உடைமை என்ற புழுத்துப்போன ஆதிக்கக் கருத்தியலை இன்று பல விளம்பரங்கள் முன்னிறுத்துகின்றன.

இந்தியாவில் பாகுபாடு என்பது சாதியின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கிறது! மேற்கத்திய நாடுகளைப் போல நிறத்தினால் அல்ல. அதனால் சாதிப் பெயர் சொல்லித் திட்டினாலோ கேலி செய்தாலோ அது வன்கொடுமை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிறத்தை இழிவுபடுத்தினால் அது சாதாரணம். ஆரியர்களின் ஆதிக்கம் வெள்ளை மோகத்திற்கான முதல் விதையைத் தூவியது. வெள்ளையர்களின் வருகை அந்த விதைக்கு நீர் பாய்ச்சியது. தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக வெள்ளையை உயர்த்திப் பிடிக்கவும் கறுப்பை தாழ்த்தவும் செய்தது இவர்கள்தான்! இருள், அமாவாசை, துக்கம், இழப்பு, ஆகாத காரியம், அபசகுனம், மரணம் ஆகியவற்றை கறுப்போடும்; பகல், பவுர்ணமி, மகிழ்ச்சி, நிறைவு, லாபம், நல்ல நிகழ்வுகள், பிறப்பு இவற்றை வெண்மையோடும் ஒப்பிட்டு – கறுப்பின் மீதான வெறுப்பை மத நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி தீவிரப்படுத்தியதும் இவர்கள்தான். மதத்தைக் கடந்து ஆரியர்களையும் ஆங்கிலேயர்களையும் ஒன்றிணைய வைத்தது, அவர்களின் நிறமும் அதனால் உண்டான ஆதிக்க புத்தியுமே.

சாதி வன்மத்தைப் போலவே கறுப்பின் மீதான வெறுப்பு, காலங்கள் கடந்து பல வடிவங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறது. நாகரிகத்தின் அடையாளமாக வெண்மையே இங்கு முன்னிறுத்தப்படுகிறது. கறுப்பாக இருந்தால் சாதிக்க முடியாது. கறுப்பானவர்களுக்கு மரியாதை கிடைக்காது. கறுப்பு என்றாலே புறக்கணிப்புதான் என்öறல்லாம் ஒரு கருத்தியலை உருவாக்கி, சமூகத்தின் மூளையில் அது ஆழ பதியவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பதாக சொல்லத் தொடங்கினோம் நாம். ‘இருந்தாலும்' என்ற இந்த இழிவு கறுப்பின் மீது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. கறுப்புக்கும் அழகிற்கும் தொடர்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தத்தான் களையாக இருக்கிறார்கள் என்ற ஆறுதல் பரிசு! காலங்காலமாக இந்த ஆறுதல் பரிசோடுதான் கறுப்பானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

சாதி மற்றும் நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களின் மூளையில் பரவிக் கிடக்கும் இந்த அடிமைக் கருத்தியலை மிக வேகமாக வரித்துக் கொண்டதும், வியாபாரத்திற்கான உத்தியாக மாற்றியதும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான். கறுப்பாகப் பிறப்பதும் இருப்பதும் பெருங்குற்றமென்றும், தங்கள் பொருட்களை தடவினால் அந்த அவலத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் கூவியபடி, நாள்தோறும் எண்ணற்ற வகைகளை சந்தையில் இவை இறக்குகின்றன. நிறத்தை மட்டுமே குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தவர்கள், ஹமாம் சோப் விளம்பரத்தின் மூலம் வெளிப்படையான சாதிப் பாகுபாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.

2


இந்த ஆண்டு தீபாவளியின் ஊடகக் கதாநாயகன் கமல்ஹாசன். காரணம், அவரே தயாரித்து நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம். இதன் மூலம் இந்தியில் வெளிவந்த ‘வெட்னஸ்டே' திரைப்படம். மொத்தமே நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான தமிழ் திரைப்படத்திற்குரிய பகட்டு வேலைகளும், பேண்டஸியும் இல்லை என்பதால் இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தி, நேரடியாக எந்த இடர்ப்பாடுமின்றி சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பிரதிநிதியாக தன்னை அறிமுகப்படுத்ததிக் கொள்ளும் கமல்ஹாசன், குறிப்பிட்ட நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கட்டளைக் கோரிக்கையோடு, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்துவிட்டு காத்திருக்கிறார். ஆனால், உண்மையில் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்வது அவர்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல; பொதுமக்களின் பிரதிநிதியான கமல்ஹாசனே தன் திட்டப்படி அவர்களை கொல்வதற்கு!

இந்து மதத்தையோ இஸ்லாத்தையோ குறிப்பிட்டு குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருப்பது தெரிந்தாலும் அது வெறும் மேல்பூச்சு வேலைதான். திரைப்படம் தொடங்குவதிலிருந்து கடைசி வரை, ‘முஸ்லிம்களே தீவிரவாதிகள், அவர்களை எதிர் தீவிரவாதச் செயலால் மட்டுமே அழிக்க முடியும்' என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கொல்வதற்கு கமல் தேர்ந்தெடுக்கும் நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர் முஸ்லிம்கள். ஒருவர் மட்டும் இந்து. ஆனால் இவர் வெடிகுண்டுகளை வீசி பொது மக்களை கொல்பவரல்ல; பணம் கொடுத்தால் யாரைக் கொல்லவும் வெடிகுண்டுகளை சப்ளை செய்பவர். தீவிரவாதிகள் சதவிகித அடிப்படையில் மூன்று முஸ்லிம்களுக்கு ஓர் இந்து என்று கணக்கிடப்பட்டிருப்பது எதனால் என்று சொல்லப்படவில்லை. ஆனால் ‘இந்த நால்வரையும் சீட்டுக் குலுக்கிப் போட்டே தேர்ந்தெடுத்தேன்' என்று ஓரிடத்திலும், ‘வெறும் முஸ்லிம்களாக மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதால்தான் ஓர் இந்துவையும் சேர்த்துக் கொண்டேன்' என்று வேறொரு இடத்திலும் முரண்பாடாக சொல்கிறார் கமல். வெடிகுண்டு வியாபாரியான இந்து கதாபாத்திரம் பார்ப்பதற்கு பரிதாபமானவராக, நகைச்சுவை கதாபாத்திரத்தைப் போல வெகுளியானவராக, ஒரு சுத்தமான வியாபாரியாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம் கதாபாத்திரங்கள் கண்களில் குரூரத்தோடும் வெறியோடும் வன்மத்தை சுமந்து கொண்டு பழி தீர்க்கக் காத்திருப்பவர்களைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் தீவிரவாதக் கதாபாத்திரங்களில் ஒருவர், பெஸ்ட் பேக்கரி கலவரத்தை விவரித்து அதில் எரித்துக் கொல்லப்பட்ட தன் குடும்பத்தைப் பற்றி சொல்கிறார். எரித்து வீசப்பட்ட தன் மகனின் சடலத்தைப் பார்த்துதான் பழிவாங்கும் உணர்ச்சியோடு தான் தீவிரவாதியானதாகக் குறிப்பிடுகிறார். ஒரு தீவிரவாதி தான் தீவிரவாதியானதுக்குக் காரணம், தீவிரவாதமும் மதவெறியுமே என்கிறார். இவருக்காவது நேரடியான பாதிப்புகளும் கொடுமையான அனுபவங்களும் இருந்திருக்கிறது. ஆனால் தன்னை ஒரு ‘காமன்மேன்' என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசன், இந்த தீவிரவாதிகளை கொல்வதற்கான காரணமாகச் சொல்லும் பண்பாட்டுச் செய்தி மிக மிக ஆபத்தானது.

அதிநவீனமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி நால்வரையும் கொன்றுவிட்டு, ஒரு ‘காமன்மேனாக' காய்கறிக் கூடையோடு அவர் கிளம்பிச் செல்வதற்கு முன், தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வு என்று அறிவுறுத்துகிறார். ஒரு சாதாரண மனிதனை கதாநாயகனாகக் காட்ட முற்பட்டு, அவன் வாயிலாக இந்த திரைப்படம் மக்களுக்கு சொல்லும் செய்தியும், ஒரு தீவிரவாதியை வில்லனாக உருவகப்படுத்தி, தன் அனுபவத்தில் அவர் இந்த சமூகத்திற்கு சொல்வதும் ஒன்றுதான். அந்த அடிப்படையில் பார்த்தால் இங்கு கதாநாயகனான ‘காமன்மேனும்' வில்லன்தான்; தீவிரவாதிதான்; உயிரோடு இருக்கத் தகுதியற்றவன்தான். முஸ்லிம்களுக்கு எதிரான படமாக வந்துவிடக் கூடாது என்பதற்காக குஜராத் கலவரம் பற்றியெல்லாம் உருக்கமாக, கண்ணீரை வரவழைத்துக் கொண்டு கமல் பேசுவதைக் கேட்க சகிக்கவில்லை. அந்த கண்ணீரிலோ, உருக்கத்திலோ துளியும் உண்மையை உணர முடியவில்லை. கடைசி வரை கமல்ஹாசன் கதாபாத்திரம் எந்த மதத்தைச் சார்ந்தது என்று குறிப்பிடப்படவே இல்லை. முஸ்லிம்களுக்காக பரிந்து பேசிக் கொண்டே முஸ்லிம்களை பொறுக்கியெடுத்துக் கொல்லும் அந்த செயலில் தெரிந்தது பார்ப்பனக் கள்ளத்தனம் மட்டுமே. சட்டப்படியான மரண தண்டனையே மனித உரிமை மீறல் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சாதாரண மனிதன் தொழிற்நுட்ப உதவியோடு தன்னிச்சையாக கொலைகள் செய்வது, மனித உரிமை மீறலின் உச்சம். இந்த திரைப்படத்தில் வலியுறுத்தும் நீதியின் அடிப்படையில் முதலில் கொலை செய்யப்பட வேண்டியது, கமல்ஹாசன் கதாபாத்திரம்தான். தீவிரவாதத்தைக் கொண்டாடும் இந்த திரைப்படத்தை, ஆகச் சிறந்ததாக எல்லா பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் கொண்டாடின. கமலை ஓர் அறிவாளியாகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் புகழ்ந்து தள்ளின. ‘ஹேராம்' படத்தில் கண்ணுக்கு கண் எப்படி தீர்வாகும் என்று கேட்ட அதே கமல்ஹாசன்தான் ‘உன்னைப் போல் ஒருவனில்' கண்ணுக்கு கண்ணை கேட்கிறார்!

தீவிரவாதத்துக்கு தீவிரவாதத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், வன்முறைக்கு வன்முறையால் விடிவு வரும் என்று நம்பிக் கொண்டிருந்தால், மாறி மாறி மனிதர்கள் சாவதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை. குறிப்பிட்ட மதத்தினரின் இனத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது மட்டுமே தீவிரவாதம் உருவாகிறது. பறித்த உரிமைகளை முறையாக திருப்பித் தருவது ஒன்றே தீவிரவாதத்திற்கான முடிவேயன்றி, மாறி மாறி உயிரை எடுப்பதல்ல

3

அண்மையில் நடிகை புவனேஸ்வரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட, அதைத் தொடர்ந்து ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தை நினைத்தால் எரிச்சலும் கோபமுமே மிஞ்சுகிறது. புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதும் அவர் பாலியல் தொழில் செய்யும் மற்ற நடிகைகள் பற்றி காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக செய்தி வெளியானது. உடனே இது குறித்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட நினைத்த ‘தினமலர்' ரொம்பவும் மெனக்கெட்டு ஒரு கட்டுரையை தயார் செய்தது! எந்தெந்த நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்? யார் யாருக்கு எவ்வளவு விலை என்று கண்டுபிடித்து (இந்த சமூகத்துக்கு இந்த பத்திரிகைகள் எவ்வளவு தொண்டாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள்) தொடர்புடையவர்களின் புகைப்படங்களுடன் விலைப்பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் இடம் பிடித்த நடிகைகளில் பலரும் திருமணமானவர்கள். குழந்தைகள் உடையவர்கள். மிக முக்கியமாக, கணவரைப் பிரிந்து வாழ்கிறவர்கள்.

இது உண்மையாகவே ஒரு புலனாய்வுக் கட்டுரையாக இருந்திருக்குமானால், அந்த ஆய்வை மேற்கொண்ட விதத்தையும் அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் தேவைப்படாமலே சினிமா பத்திரிகையாளர்களின் ‘கிசுகிசு' தகவல்களை வைத்துக் கொண்டு நேரில் கண்டவர்களைப் போலவே எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தொடர்புடைய நடிகைகளின் நிம்மதி மொத்தமாகப் பறிபோனது. கொதித்தெழுந்த நடிகைகள் நடிகர் சங்கத்தில் முறையிட, நடிகர் சங்கம் இந்த பிரச்சனையை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டது. கண்டனக் கூட்டம் நடத்தி, தமிழக முதல்வரிடம் புகார் செய்து, ப்ரஸ் கவுன்சிலுக்கு' மனு அனுப்பி, நடிகர் நடிகைகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

பெண் உரிமைகளை, தனி மனித சுதந்திரத்தை, சுயமரியாதையோடு வாழ்வதற்கான உரிமையை, பத்திரிகை நெறிகளை ‘தினமலரின்' இந்த ஒரே கட்டுரை நசுக்கிவிட்டது. நடிகைகளையும் பாலியல் தொழிலையும் வைத்து பத்திரிகைகள் தொடர்ந்து பிழைப்பு நாடகத்தை நடத்துவதால், சில விஷயங்களை நாம் விவாதித்தாக வேண்டியிருக்கிறது. ஒரு பெண் முழு நேர பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட, அவருடைய பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடும் உரிமை பத்திரிகைகளுக்கு இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டியது சட்டத்தின் அடிப்படையிலான தண்டனை மட்டுமே. ஆனால் காவல் துறையின் உதவியோடு பத்திரிகைகள் தொடர்ந்து சமூக ரீதியிலான தண்டனையை பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

புகைப்படங்களுடன் வெளிவரும் செய்திகள் ஆதாரமானவை என்று தட்டையாக ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருப்பதால், காவல் துறையை நச்சரித்து (அல்லது காவல் துறையின் விருப்பத்திற்கேற்ப) குற்றவாளியின் புகைப்படத்தை எப்படியாவது வாங்கி விடுகிறார்கள். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகின்ற நிலையிலேயே, தீர்ப்பு வழங்கப்படும் முன்பே கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். அதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணாக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.

நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை எழுதவும் பிரசுரிக்கவும் விருப்பப்படும் இவர்கள் அனைவரும் மஞ்சள் பத்திரிகைகளைப் படித்து வளர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் எழுத்தும் வக்கிரமான கற்பனையுமே சாட்சி. இன்றைய பத்திரிகையாளர்களில் பலரிடம் இந்த தகுதி மட்டுமே நிறைந்திருக்கிறது. வியாபாரத்தைப் பெருக்க நினைக்கும் பத்திரிகைகளுக்கும் அதுதான் தேவைப்படுகிறது. பத்திரிகை அறம் குறித்தோ, நெறிகள் பற்றியோ, மனித உரிமைகளைப் பேண வேண்டியதில் ஊடகங்களின் பங்கு பற்றியோ இம்மியளவு கூட இவற்றுக்கு அக்கறை இல்லை.

பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்படும் பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்ற விதி இருக்கும்போது ‘தினமலர்' நாளிதழ் எந்த தைரியத்தில் அடிப்படையே இல்லாமல் நடிகைகளின் புகைப்படங்களோடு அந்த செய்தியை வெளியிட்டிருக்கக்கூடும். நடிகைகள் கொதித்தெழுவார்கள் என்றோ போராட்டத்தில் இறங்குவார்கள் என்றோ ‘தினமலர்' நாளிதழுக்கு தெரியாதா என்ன? தெரியும். பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் முகத்திரையைக் கிழித்து இந்த சமூகத்தை அவர்களிடமிருந்து காக்க வேண்டும் என்ற அக்கறையா ‘தினமலருக்கு'? நிச்சயமாக இல்லை. விற்பனை மோகமும் வக்கிரத்தின் வேகமும் மட்டுமே தினமலரின் இந்த கட்டுரைக்குக் காரணம். ஆணாதிக்க சிந்தனை மட்டுமே இவ்வளவு கீழ்த்தரமாக செயலாற்றத் தூண்டுகிறது.

நடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஒரு பக்கம் பிழைப்பு நடத்தியும், இன்னொரு பக்கம் அவர்களின் அந்தரங்கங்களை கிசுகிசுக்களாகவும் வெளிப்படையான கட்டுரைகளாகவும் எழுதி கேவலப்படுத்துகிறார்கள். உணர்வுகளும் சுயமரியாதையும் மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே சமமானது. எல்லோருக்குமே அந்தரங்கங்கள் உண்டு. அது தனி மனித சுதந்திர வரையறைக்குட்பட்டது. இன்னொருவரின் சுதந்திரத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வரை அதற்குள் நுழையும் உரிமை யாருக்கும் இல்லை. விபச்சாரம் செய்கிறார்கள் என்று புகைப்படத்தோடு வெளிவந்த செய்தியைப் பார்த்து நடிகைகள் என்ன மாதிரியான அவமானத்திற்கு ஆளாவார்கள் என்றோ, அவர்களின் குழந்தைகள் என்ன மாதிரியான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாவார்கள் என்றோ, பரபரப்பு வெறியர்களுக்கு அக்கறை இல்லை.

நடிகைகள் பற்றி இழி செய்தி வெளிவந்து அது இவ்வளவு பரபரப்புகளை அடைந்த போதும் நடிகைகளுக்கு ஆதரவாக எந்த பெண்கள் அமைப்போ, பொதுவுடைமை இயக்கங்களோ, மனித உரிமை அமைப்புகளோ சிறு சலனமுமின்றி அமைதி காத்தனர். சிறு அளவிலான கண்டனத்தைக் கூட அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நம் சமூகத்தில் பெண்கள் அமைப்புகள் தங்கள் மூச்சை நிறுத்தி நாட்களாயிற்று என்பதை கண்கூடாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. நடிகைகளையும் பாலியல் தொழிலாளர்களையும் மூன்றாம்தர குடிமக்களாக நினைத்து, இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட எந்த வகையான இன்னல்களுக்கும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்ததாக நினைவில் இல்லை. தங்கள் அழுத்தமான அமைதியின் மூலம் ‘தினமலர்' நாளிதழின் உரிமை மீறலுக்கு இவை துணை போயிருக்கின்றன.

அதே நேரத்தில் நடிகர் நடிகைகளின் போராட்டத்தைத் தொடர்ந்து ‘தினமலர்' செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட, தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துதானே தீர வேண்டுமென பத்திரிகை உலகம் அமைதியாக இருக்குமென்றுதான் நியாயத்தை மதிக்கிறவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், கைதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகையை சேர்ந்தவர்களும் பத்திரிகை அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். பத்திரிகை சுதந்திரம் பறிபோவதாக இவர்கள் முழங்கியதைக் கேட்க சகிக்கவில்லை. ஒரு கொலையாளி கொலை செய்வதற்கான உரிமையைக் கோருவதைப் போல இருந்தது, பத்திரிகையாளர்களின் போராட்டம்.

இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், உண்மையாகவே பத்திரிகை சுதந்திரம்தான் பறிபோகிறதோ என்ற பதற்றத்தோடு பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்கு கை கொடுக்க வந்தவர்களின் பட்டியல்தான். பொதுவுடைமைவாதிகளும் சில மனித உரிமை ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களோடு போராட்டத்தில் பங்கேற்றது, ஆழமான அவநம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. தராதரமில்லாமல், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், பிறரின் உரிமைகளையும் நிம்மதியையும் பாதிக்கிற வகையில் எதை வேண்டுமானாலும் இவர்கள் எழுதலாம், வெளியிடலாம். அதை கண்டித்தால், அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டால், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என கிளம்பிவிடுகிறார்கள். எழுத விரும்புவதை எல்லாம் எழுதிவிடுவதுதான் இவர்கள் எதிர்நோக்கும் பத்திரிகை சுதந்திரமா?

பேசவும், எழுதவும் முடிகிறவர்கள் அந்த ஒரே காரணத்திற்காக பத்திரிகையாளர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். சமூகத்தைப் பற்றிய பார்வை, புரிதல், அக்கறை எதுவும் பத்திரிகையாளர்களுக்கு கிஞ்சித்தும் இருப்பதில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அதற்குரிய தகுதியென ஒன்று உண்டு. ஆனால் இங்கு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் தேவைப்படுவதில்லை. இதனால் ஒரு சராசரி மனிதனுக்குரிய எல்லா விருப்பு வெறுப்புகளோடும், வக்கிர சிந்தனைகளோடும் ஆதிக்க மனோபாவத்தோடும்தான் பத்திரிகையாளர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்கள் வலம் வருகிறார்கள். சாதிய மேலாதிக்கமும், மத பாகுபாடுகளும், ஆணாதிக்க சிந்தனைகளும் அவர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியிலும் எப்படியேனும் வெளிப்படுவது இந்த காரணத்தினால்தான்.

தினமலருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய பத்திரிகைகளில் முழுவீச்சோடு செயல்பட்டது ‘நக்கீரன்'. கொள்கை அடிப்படையில் தினமலரோடு முரண்படும் ‘நக்கீரன்', நடிகைகள் விஷயத்தில் கைகோர்த்ததன் காரணம் மிக எளிமையானது. நடிகைகளின் அந்தரங்கம் பற்றிய அதீத கற்பனை வளம் கொண்ட பத்திரிகையாளர்கள் நக்கீரனில் அதிகம். கொச்சைப்படுத்தி எழுதுவதில் தினமலரை மிஞ்சிய சிஷ்யன் நக்கீரன். தினமலரில் குறிப்பிட்ட அந்த செய்தி வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மிகக் கூர்மையாக கண்காணித்து, பரபரப்பான செய்தியாக வாசகர் முன் சமர்ப்பிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை தாமாகவே ஏற்றுக் கொண்ட நக்கீரன், அதன் பின்னர் வெளியிட்ட செய்திகளை வாசிப்பதற்கு தனி மனோதிடம் தேவைப்பட்டது. நடிகர் நடிகைகள் கண்டனக் கூட்டத்தில் எவ்வளவு ஆபாசமாகப் பேசினார்கள் என்று அதையும் அப்படியே பிரசுரித்தது. நடிகர், நடிகைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் நக்கீரனின் கேள்வி. தினமலரை எதிர்த்து களமிறங்கியவர்கள், நாளை தன்னையும் எதிர்த்துப் போராடுவார்கள் என்ற பயத்தை நக்கீரனின் ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்க முடிந்தது.

நடிப்புத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்வதற்கும் ஒழுக்கத்தோடு இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் இவர்கள் யார்? பண்பாட்டுக் காவலர் பதவியையும், கற்பொழுக்கத்தை காக்க வேண்டிய கடமையையும் பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகமோ சட்டமோ வழங்கியிருக்கிறதா என்ன?!

பத்திரிகையும் சினிமாவும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு விஷயங்களாகிவிட்ட நிலையில், வணிக நோக்கத்திற்காக பத்திரிகையாளர்களும் திரைத்துறையினரும் ஒருவரையொருவர் சார்ந்தே இயங்கி வருகிறார்கள். பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆபாசப் படங்களை முதன்மைப்படுத்தும் பத்திரிகைகளும் ஒரு வகையில் பாலியல் தொழிலே செய்கிறார்கள். லஞ்சத்தை 'கவர்' என்று குறிப்பிடும் வழக்கமே வெகுமக்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான். கவர் வாங்காத பத்திரிகையாளர்கள் இந்த துறையில் இருக்கவே தகுதியற்றவர்களைப் போல நடத்தப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த செய்தி ஊழலை கண்டிக்கவோ, தடுக்கவோ யார் சார்பிலும் எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.

திரைத்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். விளம்பரத்துக்காக செய்தியாளர்களை கைக்குள் வைத்துக் கொள்வது ஒன்றே அவர்களின் நோக்கம். திரைத்துறையினருக்கும் செய்தியாளருக்குமான இந்த பந்தம் முழுக்க முழுக்க வியாபார அடிப்படையிலானது. சினிமா செய்திகள் இல்லையென்றால் அது வணிக ரீதியில் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையை உருவாக்கியதும், வாசகர் மனநிலையை வெறும் பொழுதுபோக்கு விஷயங்களில் மட்டுமே ஈடுபடுத்தியதும் வணிக ஊடகங்கள் இந்த சமூகத்துக்கு இழைத்த துரோகம்! சினிமாவிற்கும் பத்திரிகைக்கும் உள்ள இந்தத் தொடர்பைவிட மிக ஆபத்தானது காவல் துறைக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள பந்தம்.

காவல் துறைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்கும் கள்ள உறவு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்வியலில் மிகக் கொடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருப்பதற்கு, பல கைதுகளையும் செய்திகளையும் நாம் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும்.

இந்தியாவில் காவல் துறை மாதிரிதான் பத்திரிகைத் துறையும். சீருடை ஒன்றை வைத்தே காரியங்களை சாதிப்பதைப் போல ‘பிரஸ்' என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தொடர்ந்து உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் பத்திரிகை நெறிகளை அவமதிப்பதும் நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காவல் துறையோடு கைகோர்த்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடுவதை பத்திரிகைகள் வழக்கமாக வைத்திருக்கின்றன. குறிப்பாக தலித் மக்கள் பற்றியும் சிறுபான்மையினர் குறித்தும் காவல் துறை என்ன சொன்னாலும் அது எந்த ஆய்வும் தணிக்கையுமின்றி அப்படியே அச்சுக்குப் போகிறது. காவல் துறையின் தகவல்களை வைத்துக் கொண்டு செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு அது அன்றைய நாளின் அவசரச் செய்தி. அவ்வளவுதான். காவல் துறையினுடைய தகவல்களின் அடிப்டையில் ஒருவரை குற்றவாளியாக்கும் பத்திரிகைகள், பின்னர் குற்றமற்றவர் என்று அவர் நிரூபிக்கப்படும் போது அதை கண்டுகொள்வதே இல்லை. சாதி, மதக் கலவரங்களில், பயங்கரவாதச் செயல்களில் கைது செய்யப்பட்டு பொய் வழக்குகளில் பிணைக்கப்பட்டு வாழ்வைத் தொலைத்த தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் துயரக் கதைகளே இதற்கு சான்று.

வெகுமக்கள் ஊடகங்கள் திரைத் துறையினருடன் கொண்டிருக்கும் உறவு, சமூகப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்துவதைத் தடுக்கிறது என்றால், காவல் துறையோடு துணை போவதன் மூலம் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செய்தி வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது. ஓர் அரசு தன் சொந்த மக்கள் மீதே நிகழ்த்தும் வன்முறையும் பாகுபாடும் அரச பயங்கரவாதம் என்றால், ஊடகங்கள் அரசோடு கைகோர்த்துக் கொண்டு வெளியிடும் பாரபட்சமான செய்திகள் ஊடக பயங்கரவாதமின்றி வேறில்லை.

‘சோப் தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல்தான் இந்தியாவில் பத்திரிகைகளின் நிலை. வணிக நோக்கத்தைவிட பெரிய பொறுப்பென்று அவற்றுக்கு ஏதுமில்லை. அரசியல் கதாநாயகர்களை துதி பாடுவதும் கொண்டாடுவதும்தான் அவற்றின் முதன்மை வேலையாக இருக்கிறது' என அம்பேத்கர் வருத்தத்தோடு சுட்டிக் காட்டி பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் ஊடகங்களின் நிலை இம்மியளவும் மாறியபாடில்லை. எல்லா சமூக அவலங்கள் பெருகுவதற்கும் இந்த ஊடகங்கள் தம்மால் ஆன பங்கை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின், இந்து மத வெறியர்களின் கைகளில் ஊடகங்கள் இயங்குகிற வரை, சாதி, மத பாகுபாட்டை அவை வளர்த்துக் கொண்டுதானிருக்கப் போகின்றன. வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை. ஜனநாயகத்தின் நான்வது தூண் துரு பிடித்ததாகவே இருப்பதை வேதனையோடு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்! இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பதே சிதிலமடைந்த ஒரு கட்டடத்தைப் போல நிலைகுலைந்த நிலையில் இருக்கையில், அதன் தூண்கள் மட்டும் துருபிடிக்காமல் அப்படியே இருக்குமா என்ன?

ஒரு சென்டிமென்ட் ..

பாகவதர் காலம் தொடங்கி 'பசங்க' காலம் வரை தமிழ் சினிமா ஒரு சென்டிமென்ட் கடல்தான்! சில துளி இங்கே...

அம்மா - தங்கச்சி:

'நாடோடி மன்னன்' எம்.ஜி.ஆர். தொடங்கி 'நந்தா' சூர்யா வரை அம்மா என்றாலே சென்டிமென்ட்தான். முன்பு ஆறு பாடல்களில் ஒன்றை அம்மாவின் பெருமையைப் பாட ஒதுக்கிவிடுவார்கள். அம்மாவுக்கு அடுத்த இடம் தங்கச்சிக்கு. ''தங்கச்சீ...'' என்று டெரராகக் கூவி சென்டிமென்ட்டை டெரரிஸமாக மாற்றியதில் டி.ஆருக்குப் பெரும் பங்கு உண்டு. கிளைமாக்ஸில்அம்மாவையும் தங்கச்சியையும் உயரமான கட்டடத்தின் உச்சியிலோ, ரயில்வே தண்டவாளத்திலோ கட்டிப்போட்டு வில்லன் மிரட்டுவார். ஹீரோ வந்து இருவரையும் காப்பாற்றி, காதலியைக் கைப்பற்றி கேமராவைப் பார்த்துச் சிரிப்பார்!

தாலி:

கொஞ்சநாள் முன்பு வரை தாலிதான் சினிமா ஹிட்டாக வழி என்று இருந்தது. தாய்லாந்தில் கணவன் தடுக்கி விழுந்தால் இங்கே மனைவி கழுத்தில் தாலி அறுந்துவிழும். மனநோயாளியை விட்டு விதவைக்குத் தாலிகட்ட வைத்தார்கள். மொள்ளமாரி புருஷனாக இருந்தாலும் தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைத்தார்கள். ஹீரோயின் தாலியை வில்லனைவிட்டு அறுத்து எறியவைத்தார்கள். 'பிடித்த பெண்ணை அடைய வேண்டுமா?'... 'கட்றா தாலியை' என்று மஞ்சள் கயிற்றைச் சுழற்றினார் கள். 'கள் குடித்தாலும் கணவன்' என்று தாலியைக் கழற்றாமல் மனைவிகளைத் தவிக்கவிட் டார்கள். இப்போதுதான் 'தாலி'க்கு வந்து இருக்கிறது லைட்டாக வேலி!

காதல்:
'
காதல் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்' என்று சட்டம் கொண்டுவந்தால் எல்லோ ரும் படம் பார்க்க பக்கத்து மாநிலத்துக்குத்தான் போக வேண்டும். காதலிக்காகக் கடலில் மூழ்கி சங்கு எடுப்பது தொடங்கி, தனக்குத்தானே சங்கு ஊதிக்கொள்வது வரை காதலுக்காக தமிழ் சினிமா காதலன் இழந்தது ஏராளம். தங்கள் காதலைச் சொல்லாமலே மறைத்து தியாகம் செய்வது ஒரு சீஸன். பிறகு சொல்லாமலே காதல்,பார்க் காமலே காதல், பல் விளக்காமலே காதல், போன் காதல், போண்டா காதல் என்று எக்கச்சக்கமான காதல்கள் கோடம்பாக்கத்தை ஆட்டிப்படைத்தன!

மதுரை:

பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம் என்று திரிந்த சினிமா வேன்களை மதுரைப் பக்கம் திருப்பியது 'காதல்' படம். அந்தப் படம் ஹிட்டானதும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மதுரை மீது பாசம் பொங்கியது. 'ஏய்ய்ய், நாங்கள்லாம் யார்னு தெரியும்ம்ம்ல' என்று சிலுப்பிக்கொண்டு ஆரப்பாளையம், தேவர்சிலை, சிம்மக்கல், அரசரடி என்று மதுரையை டம்மி ரத்தத்தால் தோய்த்து எடுக்கும் சினிமாக்காரர்களை யாராவது ஊர் கடத்தினால் நல்லது. உங்களுக்காகவே இளைய தளபதி பாடினதைக் கேளுங்க பாஸ்... 'மதுரைக்குப் போகாதடி...'

யதார்த்தம்:

'பருத்திவீரன்' ஆரம்பித்துவைத்த யதார்த்தக் காய்ச்சல். இரண்டு வாரம் குளிக்காமல்,மேக் கப் தொடாமல் வெயிலில் கறுக்கத் தொடங்கினார்கள்.
''ஹீரோன்னா அழகா இருக்கணும்னு எவன்டா சொன்னான்?'' என கமல்ஹாசன் கலர் உள்ளவர்களை எல்லாம் கருவாயன் ஆக்கினார்கள். யதார்த்த சினிமா தப்பில்லை. ஆனால், நான்கைந்து பையன்கள் ஒரு குரூப்பாக அலைவது, நாலு பேரில் ஒருவன் தாடியோடு இருப்பது, கீச்கீச் என்று கத்தும் அம்மாக்கள், கூடவே ஒரு திருவிழாப் பாட்டு என இவர்கள் யதார்த்த சினிமா என்ற பெயரில் பண்ணும் ஒரே டைப் பதார்த்தம் திகட்ட ஆரம்பித்துவிட்டது!

ஊர்ப் பெயர்:

'ஊரரசு' என்கிற பேரரசு 'திருப்பாச்சி' என்று படம் எடுத்து ஓடினாலும் ஓடியது, மனுஷன் ஒரு ஊரை விடவில்லை. சிவகாசி, திருவண்ணாமலை, பழநி என்று தமிழ்நாட்டு மேப்பைத் தாளிக்க ஆரம்பித்துவிட்டார். இடையில், ஆந்திரத் திருப்பதியை டைட்டில்ஆக் கியது எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

கருத்து கந்தசாமி:

ஷங்கர்தான் இதைத் தொடங்கிவைத்த 'பெருமைக்கு உரியவர்'. 'நல்லதுக்காகக் கெட்டது செய்யும்' ஷங்கரின் ஹீரோக்கள் கடைசியில் போனால் போகிறது என்று போலீஸிடம் மாட்டுவார்கள். உடனே, மக்களின் வாய்க்குள் மைக் திணிக்கப்படும். 'அவர் செஞ்சதுல என்ன சார் தப்பு? நாங்க நினைச்சதைத்தான் அவர் செஞ்சாரு', 'அவரை மாதிரி நூறு பேர் வரணுங்க. அப்பதான் இந்த அரசியல்வாதிங்க திருந்துவாங்க', 'எங்களுக்கு மட்டும் அதிகாரம் இருந்தா அவரை உகாண்டாவுக்கு உள்துறை அமைச்சர் ஆக்குவோம்', 'சட்டம் இதுக்கு இடம் கொடுக்குமா?', 'மக்களுக்காகத்தான சட்டம், சட்டத்தைத் திருத்துங்க, சட்டைப் பட்டனைப் போடுங்க' என்று 'மக்கள் கருத்து' திரையில் ஓங்கி ஒலிக்கும். 50 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு பிளாக்கில் வாங்கிய மக்கள், நிஜத்தில் கருத்து சொல்ல எந்த மைக்கும் கிடைக்காது!

- ஆனந்தவிகடன்

தொழில் நுட்ப நிறுவனங்களின் பெயர் வந்த காரணம்..

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!


அடோப் (ADOBE)


இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

ஆப்பிள் (APPLE)

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple"என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

கூகுள் (GOOGLE)


சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

ஹாட் மெயில் (HOTMAIL)


இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

இன்டெல் (INTEL)

இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

மைக்ரோசாப்ட் (MICROSOFT)

பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

யாஹூ (YAHOO)

தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

- தேன் தமிழ்

கூத்தாடிகளுக்கு சில கேள்விகள் - ஜெ.பிஸ்மி

கட்டுரைக்கு செல்லும் முன் : சினிமா நிருபர் திரு.ஜெ. பிஸ்மி அவர்கள் எழுதியது

திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் பக்கம் பக்கமாகப் பேசுகிற வசனங்கள் அவர்களின் அறிவிலிருந்து உதிப்பவை அல்ல. எழுதிக்கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்து கேமிராவுக்கு முன் ஒப்பிக்கும் கிளிப்பிள்ளைகளே இவர்கள்.

இதுகாறும், இரவல் வசனங்களையே பேசிப்பழக்கப்பட்டவர்கள், சில நடிகைகளைப் பற்றி ஒரு நாளிதழ் அவதூறு செய்தி வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் சொந்த வசனத்தைப் பேசியிருக்கிறார்கள்.

அவதூறு செய்த நாளிதழைக் கண்டிக்கிற பெயரில் கூடிய கூத்தாடிகள்கூட்டம் ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும், அவர்களின் குடும்பத்துப்பெண்கள் மீதும் வார்த்தைமலத்தை வாரியிறைத்திருக்கிறது. தங்களின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் முக்கியக் காரணமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் மீது இந்தக் கூத்தாடிகள் வாசித்த குற்றப்பத்திரிகையில் ஒருவேளை நியாயம் இருக்கலாம், ஆனால் நன்றியுணர்ச்சியோ, நாகரிகமோ, கண்ணியமோ எள் அளவுமில்லை. மாறாக, வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் மூலம், இதுநாள்வரை அரிதாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் அசிங்கமான, அருவறுப்பான, ஆபாசமுகம் வெளிப்பட்டிருக்கிறது.

பத்திரிகையாளர்கள் மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?
திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகளை, அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதும் அங்கே வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று.

இப்படியொரு கருத்தை முன்வைக்கிற நடிகர் சூர்யா, பொது விழாக்களில் ஆபாச உடையணிந்து வந்ததாக சில நடிகைகள் மீது வழக்குகள் பாய்ந்ததை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு பேசியிருக்கிறார். படுக்கையறையில் அணியும் உடைக்கும், பல பேர் கூடும் பொதுஇடத்திற்கு வரும்போது அணிய வேண்டிய உடைக்கும் வித்தியாசம் உண்டு.

இந்த அடிப்படைகூட தெரியாமல், திரைப்படங்களில் அணிந்தாலே ஆபாசம் என்று தணிக்கைக்குழு ஆட்சேபிக்கக்கூடிய படு ஆபாசமான உடைகளை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொதுவிழாக்களுக்கு அணிந்து வரும் எத்தனையோ நடிகைகள் இருப்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இதைத் தற்செயலாகவோ, தவறென்று தெரியாமலோ
செய்வதில்லை - அவர்கள்.

அங்க, அவயங்கள் தெரிவதுபோல் உடை அணிந்து வருவதென்பது, திரைப்படத்துறையினரின், குறிப்பாக - கதாநாயக நடிகர்களின் கவனஈர்ப்பைப்பெற விழையும் முயற்சியே அது. அதன் மூலம் பட வாய்ப்பைப்பெற முடியும் என்று நம்புகிற நடிகைகளுக்கு உடனடிப்பலன் கிடைத்து வருவதும் நாம் அறியாததல்ல! ஆபாச உடையணிந்து வரும் நடிகைகள் தங்களை மீடியாக்கள் புகைப்படம் எடுக்க வேண்டும், அவை பத்திரிகைகளில் வெளியாக வேண்டும் என்று விரும்பித்தான் கர்ச்சீப்பைக் கூட கட்டிக்கொண்டு வரத் தயாராக இருக்கிறார்கள்.

எந்தவொரு புகைப்படக்கலைஞனும், (சூர்யா சொன்னதுபோல்) நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து எடுத்த நடிகைகளின் புகைப்படங்களை தன் வீட்டில் மாட்டி வைத்துக்கொள்வதில்லை என்பதை இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறி கொதித்தெழுந்தவர் புரிந்து கொள்ள வேண்டும்.

''இந்த ஈனப்பயலுக....'' இதுவும் அவரே உதிர்த்த பொன்மொழிதான். அது மட்டுமல்ல, ''இவனுங்களை நசுக்கிடணும்..'' என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார் சூர்யா. இதெல்லாம் சக நடிகைகள் மீது அவதூறு செய்தி வெளியிட்ட கோபத்தில் சம்மந்தப்பட்ட பத்திரிகை மீது மட்டும் இவர் கக்கிய அனல் என்று அறிவுள்ள எவரும் நம்பமாட்டார்கள்.

ஆங்கில வழிக்கல்வி கற்ற அவர் வேண்டுமானால், ஒருமைக்கும், பன்மைக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கலாம், மற்றவர்களும் தன்னைப்போலவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது அறிவான செயல் அல்ல! கம்பராமாயணத்தைக் கரைத்துக்குடித்த அவரது தந்தை சிவகுமாரிடம் தமிழ் கற்றுக் கொண்டு இனி மேடையில் முழங்க வேண்டும் என்பதே சூர்யாவுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்!

அது மட்டுமல்ல, தான் பேசிய பேச்சு நியாயமானது, அதில் தவறில்லை என்று அவர் கருதினால் கடைசிவரை தன் கருத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதுதான் நேர்மையாகவும் இருக்கும். பல பேர் கூடியிருக்கும் சபையில் பகிரங்கமாக ஈனப்பிறவிகள் என்று இழித்துப்பேசிவிட்டு, அதன் விளைவுகள் கடுமையாய் இருக்கும், அது தன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தெரிந்த பிறகு, 'ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் நான் பேசவில்லை', 'பத்திரிகை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கிருக்கிற ஆரோக்கியமான நல்லுறவை நான் மதிக்கிறேன்' என்று பல்டியடிப்பது ஏன்? சூர்யாவுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். 'நசுக்குவதற்கு நாங்கள் ஒன்றும் மூட்டைப்பூச்சிகள் இல்லை நண்பரே! உங்களைப் போன்றவர்களுக்கு முகவரி கொடுத்தவர்கள்!'

அதே மேடையில் 'நான் மானஸ்தன்' என்று மார்தட்டியதோடு, தன்னை கவரிமானுக்கு நிகரானவராகக் காட்டிக்கொண்ட மூத்த நடிகர் விஜயகுமாரோ, 'உங்க அக்காத்தங்கச்சிங்களை கவர்ச்சியாய் படம் எடுத்து பத்திரிகையில் போடுங்க' என்று ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்துக்கே அரியதொரு அறிவுரை வழங்கி இருக்கிறார். அவதூறு செய்தியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் இப்படி பேசியிருக்கும் விஜயகுமாருக்கு அவருடைய பாஷையிலேயே பதில் சொல்வது நமக்கு மிக எளிதானதுதான்.

அதைவிட, அந்த கண்டனக்கூட்டத்தில் ரஜினி பேசியதையே விஜயகுமாருக்கு பதிலாக சொல்வது பொருத்தமாக இருக்கும். ''நீங்க எப்படிப்பட்டவங்க என்பது உங்கள் குடும்பத்துக்கு தெரியும், உங்கள் நண்பர்களுக்குத் தெரியும், உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேலே கடவுளுக்குத் தெரியும்.!'' இதுதான் ரஜினி சொன்னது.

மேடைகளில் பேசும்போது குட்டிக்கதைகள் சொல்லும் ரஜினி, இம்முறை பேசியதும் 'குட்டிக்கதை'தான். இதன் உள்ளர்த்தம் புரிகிறவர்களுக்குப் புரியும். மக்களுக்குப் புரிகிறதோ இல்லையோ.. குறைந்தபட்சம் கோடம்பாக்கத்துக்குப் புரியும்.

தன் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ விருதை பெருமையுடன் போட்டுக் கொள்ளும் கமல் அவர்களுக்கு இந்த சந்தர்பத்தில் ஒரு வேண்டுகோள்! இனி பத்மஸ்ரீ பட்டத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.! ஏனெனில், நகைச்சுவை என்ற பெயரில் திரைப்படங்களில் மிமிக்ரி செய்து பிழைக்கும் விவேக்குக்கு வழங்கப்பட்டபோதே பத்மஸ்ரீ விருது, தன் பெருமையையும், கௌரவத்தையும் இழந்துவிட்டது.

இப்போது அதே விவேக்கினால் பத்மஸ்ரீ விருது இன்னொரு தடவை அசிங்கப்பட்டிருக்கிறது. அவதூறு செய்தியில் அவருக்கு நெருக்கமான நடிகை அஞ்சுவையும் சேர்த்துவிட்டார்களே என்ற ஆத்திரமோ என்னவோ.. தன் பேச்சில் ஆபாசத்தின் உச்சத்தைத்தொட்டிருக்கிறார் இந்த விரசகவி.

பத்திரிகையாளர்கள் அனைவரும் தன் குடும்பத்துப் பெண்களின் புகைப்படத்தை இவரிடம் கொடுக்க வேண்டுமாம். அந்தப் புகைப்படங்களில் உள்ள பெண்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஜட்டியும், பிராவும் அணிவித்து அதை உலகம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டப்போவதாக கொக்கரித்திருக்கிறார் இந்தக்கோமாளி. இவரின் தனிப்பட்ட வாழ்க்கை அசிங்கங்களையும், நட்சத்திர ஹோட்டல்களில் இவர் நடத்துவதாக நம் காதுக்கு வருகிற பாலியல் லீலைகளையும் பட்டியலிட்டால், இவரை புகழின் உச்சியில் அமர்த்திய தமிழக மக்களே இந்தக்கோமாளியை தமிழ்நாட்டிலிருந்தே ஓடஓட விரட்டியடிப்பார்கள்.

தன்நிலை மறந்த ஒரு குடிகாரனைப்போல் பொதுமேடையில் ஆபாசஉரை நிகழ்த்திய இந்த அதிமேதாவி, பத்மஸ்ரீ விருதுக்கு மட்டுமல்ல, சின்னக்லைவாணர் என்ற அடைமொழிக்கும் அருகதையற்றவர்தான்.
தன் நகைச்சுவை மூலம் மக்களை சிந்திக்க வைத்த கலைவாணர் எங்கே?
திரையில் கோமாளியாய், நிஜத்தில் இழிபிறவியாய் இரட்டைமுகம் காட்டும் இவர் எங்கே?

இந்தியத்திருநாட்டின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீயை உடனடியாய் இவரிடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என்பதே நாம் வைக்கும் கோரிக்கை!
பெயரில் மட்டுமே விவேகத்தை வைத்திருக்கும் இந்தக் கோமாளியின் பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது தெரிந்ததும், அவசர அவசரமாக ஒரு அறிக்கையை அனுப்புகிறார். 'நான் பொதுமக்களை அழைத்துப்பேசிய கூட்டமல்ல அது, என் கலைக்குடும்பம் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட கூட்டம்' இதுதான் அந்தத் தன்னிலை விளக்கத்தின் சாரம்சம்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தை தன் மகளுக்கு நடந்த பூப்புனித நீராட்டுவிழா என்று நினைத்துக்கொண்டாரா இவர்? பெற்ற அம்மாவையே வயோதிகக்காலத்தில் கவனிக்க வக்கத்துப்போன இவர் கலைக்குடும்பத்தைப் பற்றிக்கவலைப்படுவதும், பேசுவதுவும் வேடிக்கைதான். சாத்தான் வேதம் ஓதுகிறது!

கிராபிக்ஸில் ஜட்டி, பிரா போட்டு போஸ்டர் அடிக்க முன்வந்த விவேக்கிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார் சத்யராஜ். ''சின்ன சைஸ் ஜட்டி, பிராவாகப் போடுங்க. வேணும்னா நானே வாங்கித்தர்றேன்'' இதுதான் புரட்சித்தமிழன் அங்கே வைத்த வேண்டுகோள்.

பத்திரிகையாளர்களின் மனைவி, மகளும் தமிழச்சிகள்தான் என்பதை மறந்துவிட்ட. புரட்சித்தமிழனுக்கு பொதுவிழாக்களில் ஆபாசமாகப்பேசுவது புதிதல்ல. சில வருடத்துக்கு முன் ஓகேனேக்கல் பிரச்சனைக்காக திரைப்பட நட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தின்போதும் இப்படித்தான் கெட்ட வார்த்தைப்பேசி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினார்.

பெண்ணினத்துக்காகப் போராடிய பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிறவராக தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் சத்யராஜிடம் வைக்கவும் ஒரு கோரிக்கை இருக்கிறது. 'தயவு செய்து இனி பெரியாரின் பெயரைக்கூட உச்சரிக்காதீர்கள்!'

நடிகைகளின் கற்பைக் காப்பாற்றக் கிளம்பிய இந்த கற்புக்கரசர்களைப்பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவர்களிடம் கேட்கவும் எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன.சில கேள்விகளை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.

* தமிழ்த்திரைப்படத்துறையில் 'அட்ஜெஸ்ட்மெண்ட்' என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதே. அதன் அர்த்தம் என்ன?

* சினிமாவில் கதாநாயகியாக நடிக்க விரும்பி வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகைகளிடம் நீங்கள் போடும் முதல் கண்டிஷன் என்ன?

* கதைக்குத் தேவையில்லை என்று தெரிந்தும் கதாநாயகி சகிதமாக வெளிநாட்டில் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறீர்களே ஏன்?

* உங்களுக்கு ஜோடியாக இன்னார்தான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்களே..ஏன்?

* உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளை எந்த அடிப்படையில் சிபாரிசு செய்கிறீர்கள்? கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் என்றா? அல்லது....?
வெளிப்புறப்படப்பிடிப்புக்கு செல்லும்போது கதாநாயகி தங்கும் அறைக்குப் பக்கத்திலேயே எனக்கும் அறை வசதி செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுவது ஏன்?

* விபச்சார வழக்கில் சிக்குமளவுக்கு நடிகைகளின் வாழ்க்கை சீரழிந்ததற்கு யார் காரணம்?

* நடிகைகளின் வாழ்க்கை துயரமானது என்று கிளிசரின் இல்லாமலே கண்ணீர் வடிக்கிறீர்களே? அவர்களின் துயரத்துக்கு யார் காரணம்?

* சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கம் தொடர்பான மோதலில் விஜயகுமாரும், ராதாரவியும் எதிரெதிர் அணியில் இருந்தபோது, 'விஜயகுமார்வீட்டில் அறுபது அறைகள் இருப்பது ஏன்?' என்று ராதாரவி பத்திரிகைப்பேட்டிகளில் கேள்வி எழுப்பினாரே? அதற்கான பதிலை இன்னமும் விஜயகுமார் சொல்லாமல் இருப்பது ஏன்?

கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ” மூட்டலுக்கு எதிர்ப்பு!


சின்னக்கலைவாணர் என்ற பட்டத்திற்கு கொஞ்சமும் தகுயியானவர் கிடையாது விவேக். காலக்கொடுமைதான் அவருக்கு அந்த பட்டப்பெயர் வந்தது.

பகுத்தறிவாளன் என்று திரையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விவேக், தன் வீட்டை வாஸ்து முறைப்படிதான் கட்டினார் என்று முன்பு விவேக் மீது ஏச்சுக்கள் விழுந்தது.

காமெடி என்கிற பெயரில் நமீதா,மாளவிகா என்று நடிகைகளை வைத்துக்கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசும் இவர் நடிகைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நடிகர் சங்க கோதாவில் நின்றார்.

இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசும் இவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் 20.10.09 அன்று மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி பாட்டை பாடி பறவைகளுக்கு எல்லாம் ப்ளு கிராஸ் இருக்கு..இவாளுக்கு எல்லாம் நம்மள மாதிரி ஒய்ட் கிராஸ்தானே இருக்கு என்று திரையில் சமத்துவம் பேசிய இவரின் இந்த முகமும் இப்போது கிழிய ஆரம்பித்திருக்கிறது.

பத்திரிக்கையாளர்களை மிகவும் தரக்குறைவாக பேசியதற்காக பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் விவேக் பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் அல்ல; அவரது விருதை பறிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் விவேக், தனது சாதியை நாடியிருக்கிறார். டாக்டர் சேதுராமன் நடத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ‘’எனக்கு ஒன்ணுன்னா நீங்க நிற்கனும்’’என்றிருக்கிறார்.

பதிலுக்கு கூட்டத்தில், ‘’உங்களுக்கு ஒன்னுன்னா உசிரையே கொடுப்போம்’’என்று ஆதரவுக்கரங்கள் நீண்டதாம்.

அடங்கொப்புறான...., இதற்கு பேருதான் பகுத்தறிவா?சாதீ மூட்டலுக்கு எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளன.

இது மட்டுமல்ல இன்னும் கிழித்தெறியவேண்டிய விவேக் முகங்கள் நிறைய இருக்கு என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

- நக்கீரன்.

மர்பி விதிகள் - 1000

Murphys Law

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.


கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது.


தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்டி வாக்குகளை அள்ளிவிடலாமென்று குரூரமாக முயன்றது.
பாசிச ஜெயாவை ஈழத்தாயாக சித்தரிக்கும் வரலாற்று கொடுமைக்கு துணை போனது. ஆனாலும் இந்த நாடகத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள். இந்தத் தோல்விக்கு தி.மு.க அரசின் பணபலமும், வாக்கு எந்திரங்களின் முறைகேடும்தான் காரணங்களென இராமாதாஸ் புகார் வாசித்தார்.
வெற்றிபெரும் கூட்டணிகளில் இடம்பெற்று மத்திய அமைச்சரவையில் சேர்ந்து பா.ம.க இதுவரை சம்பாதித்ததற்கு என்ன கணக்கு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.


இவர்களும் வாக்களார்களுக்கு பணம் வழங்கினார்கள் என்பதும், அதில் தி.மு.கவோடு போட்டிபோட முடியவில்ல என்பதை விட எப்படியும் ஈழப்பிரச்சினைக்காக மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்று அலட்சியமாக பச்சோந்தி தலைவர் சிந்தித்தார். எப்படியும் வர இருக்கும் வெற்றிக்காக ஏன் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம்.
ஏழு தொகுதிகளிலும் தோற்றபிறகு ஒப்பந்தப்படி பா.ம.கவிற்கு அளிக்கப்பட விருந்த ராஜ்ஜிய சபா தொகுதியும் இப்போது கேள்விக்கிடமானது.


அதை ஜெயாவிடம் வலியுறுத்தும் அளவிற்கு பா.ம.கவிற்கு தைரியமில்லை. தோல்விக்குப் பிறகு இடதுசாரிகள் மற்றும் வைகோவை சந்தித்த ஜெயா பா.ம.க தலைவர்களை மட்டும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை.


இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திண்டிவனத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் முன்நடந்த கொலைவழக்கில் இராமதாசு குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல பா.ம.கவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. கீழ் கோர்ட்டில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சி.வி. சண்முகம் அவர்கள் வழக்கில் சேர்க்கக்கூறி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதை தடுக்க வேண்டுமென்பதற்காக பா.ம.கவின் கோ.க.மணியும், தன்ராஜும் கொடநாட்டில் அம்மையாரை சந்தித்து பேசினர்.


அப்போது அம்மா என்ன பேசினார் என்பது தெரியாவிட்டாலும் வழக்கின் மீது தலையிட அவர் விரும்பவில்லை என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. சரி ஜனநாயக நாட்டில் இத்தகைய வழக்குகளை சட்டபூர்வமாக எதிர்கொள்வதுதானே சரியாக இருக்கும் என்று பலரும் நினைக்கலாம்.


ஆனால் தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை நிறுத்துவதற்காக மத்திய ஆட்சியையே கவிழ்த்த ஜெயா அதே அளவுகோலின்படி தனது கூட்டணி கட்சிக்காகவும் வழக்கை விட்டுக்கொடுக்க சண்முகத்திற்கு கட்டளையிடுவார் என்பதே பா.ம.க கணக்கு. இந்த கணக்குதான் தற்போது பிழையாகியிருக்கிறது.
பாசிஸ்டுகள் எப்போதும் தமக்கு ஒரு வழிமுறையைக் கையாண்டால் அதை மற்றவர்கள் பின்பற்றுவதை விரும்பமாட்டார்கள்.


அவ்வகையில் சட்டம், வழக்கு, நீதிமன்ற விவகாரங்களில் பா.ம.கவிற்காக தலையிட அன்னையார் விரும்பவில்லை. இப்படித்தான் ‘ஜனநாயக’ நெறிமுறை பா.ம.க விவகாரத்தில் பாசிச ஜெயாவால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.


எப்படியும் கொடநாட்டிலுருந்து நல்ல சேதி வருமென்று காத்திருந்த பா.ம.க இராமதாஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார். அப்படியும் அம்மா அருள்பாலிக்கவில்லை.


எனவே அவசரமாக கூட்டப்பட்ட பா.ம.கவின் நிர்வாகக்குழு கூட்ட முடிவின்படி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக இரமாதாஸ் அறிவித்து விட்டார்.


இராமதாஸின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் எனபதற்காகவே கட்சி கூட்டணி மாறுகிறது என்றால் கட்சியின் நிர்வாகக் குழுவும் இராமதாஸின் குடும்ப நலனுக்காகத்தான் செயல்படுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


ஒரு வழக்கு குறித்த பிரச்சினயை சட்டப்பூர்வமாக சந்திக்கமாட்டோமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் இங்கே குடும்ப அரசியலுக்காக வெளிப்பட்டிருக்கிறது.


அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்காக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, இப்போது விரட்டப்பட்ட பா.ம.க மீண்டும் வாலை ஆட்டியவாறு தன்னிடம்தான் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாமென்பது ஜெயாவின் எண்ணம்.


இதில் தி.மு.க நிலை என்ன என்பதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ம.விற்கு இந்த ஞானோதயம் வர காரணம் கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கிடையாது. தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக அவர்கள் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.


இதை வைத்துப்பார்த்தால் முந்தைய பா.ம.க கூட்டணிகளெல்லாம் அரசியல் ரீதியிலானது என்று பொருளாகிவிடுகிறது. இதுவரை பா.ம.க இடம்பெற்ற எல்லாக்கூட்டணிகளிலும் எத்தனை சீட்டு என்பதே இராமதாஸின் கொள்கையாக இருந்தது.


எது எப்படியோ தி.மு.கவும் இப்போது அய்யா கட்சியை தமது கூட்டணியில் சேர்க்கத் தயாரில்லை என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயா போல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அய்யா வாலை ஆட்டிக்கொண்டு வருவார் என்று அலட்சியமாக சிந்திக்கலாம்.


இதற்கு ஆதரமாக பா.ம.கவின் கடந்த கால வரலாறு கட்டியம் கூறுகிறது. 1991, 1996 சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்ட பா.ம.க 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வென்றது. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 5 இடங்களை வென்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க கூட்டணிக்குத் திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வென்றது.


2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் நீடித்து 18 தொகுதிகளில் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இப்போது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.


2011 சட்ட மன்றத்தேர்தலில் இந்த பச்சோந்தி யாரிடம் சேருவார் என்ற முடிவு போயஸ் தோட்டத்திடமும், கோபாலபுரத்திடமும் உள்ளது.


ஆனால் அந்த தேர்தலில் மட்டும் இருவரும் பா.ம.கவிற்கு இடமில்லை என்று அறிவித்து விட்டால் ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற பச்சோந்தியை நாம் தமிழக அரசியலிலிருந்து ஒழிக்கப்படுவதை காணலாம். பச்சோந்தியை வளர்த்து விட்ட இருகழகங்களும் அதை ஒழிப்பதையும் செய்து விட்டால் தைலாபுரத்தின் அரசியல் அனாதையாக மாறிவிடும்.


ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். எனினும் இனியும் பேரம்பேசும் வலிமையை இழந்து அடிமை போல நடப்பதே இரமாதாஸின் விதி.
ஏனெனில் தற்போது வன்னிய சாதி நலன் என்ற பெயரில் வெறியை மீண்டும் வளர்த்து தனது சாதிய ஓட்டுவங்கி செல்வாக்கை கைப்பற்ற பா.ம.க முயல்கிறது.


ஆனால் இக்காலம் 80கள் அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. பெரும்பாலான வன்னியர்களே பா.ம.கவை இராமதாஸின் குடும்பச் சொத்து என்று புரிந்துகொண்டு புறக்கணித்து வரும் வேளையில் இந்த சாதிய அரசியல் எடுபடாது.


இப்பேற்பட்ட பச்சோந்திதான் ஈழத்திற்காக குரல் கொடுத்தது என்று இன்னமும் அப்பாவித்தனமாய் நம்பி வரும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா என்பதே நமது கேள்வி.


இறுதியாக ஒரிரு மாதங்களுக்கு முன்னர் இராமதாஸின் பச்சோந்தி கார்ட்டூனை நண்பர் ராஜா அனுப்பியிருந்தார். அதை எப்போது வெளியிடலாம் என்று காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இப்போது வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த இராமதாஸுக்கும் அதற்கு வழியமைத்துக் கொடுத்த பாசிச ஜெயாவிற்கும் எமது ‘நன்றி’யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


- நன்றி

வினவு

நடைப் பயிற்ச்சி - வைரமுத்து

நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும்.


அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி. பூமிக்கு வலிக்குமென்று பொடிநடை போவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும்; காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.


63 தசைகள் இயங்கினால் தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம்.நடைப்பயிற்சியின் போதே லாகவமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம். நடைப்பயிற்சியில் பேசாதீர்கள். உங்கள் ஆக்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும்.


ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள். சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்; இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீர்கள். உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள். இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்கு மேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.


உடல் எழுத்து



அதிகாலை எழு.

ஆகாயம் தொழு.

இருதயம் துடிக்க விடு.

ஈரழுந்த பல் தேய்.

உடல் வேர்வை கழி.

ஊளைச்சதை ஒழி.

எருதுபோல் உழை.

ஏழைபோல் உண்.

ஐம்புலன் பேணு.

ஒழித்துவிடு புகை & மதுவை.

ஓட்டம் போல் நட.

ஒளதடம் பசி.

அஃதாற்றின் எஃகாவாய்.


தன்னம்பிக்கை ..
















உலக தினங்கள்..

காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.

இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.

இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.

உலக தினங்களின் பட்டியல்..

பிப்ரவரி 14, காதலர் தினம்‌
பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்

மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்

மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்

நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

- வெப்துனியா

கைக் குட்டைக்குச் சட்டம்

கைக்குட்டை சதுரமாகத்தான் இருக்க வேண்டும் என்று பிரெஞ்ச் மன்னன் 1785ஆம் ஆண்டு ஒரு சட்டமே போட்டிருந்தார்.

சதுரத்தைத் தவிர வேறு அளவுகளில் கைக்குட்டைகளை வைத்திருந்தால் அவர்களுக்குக் கடுந் தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதற்குப் பிறகுதான் சர்வதேச கைக்குட்டை தயாரிப்பாளர்களும் சதுர அளவில் கைக்குட்டைகள் தயாரிக்க ஆரம்பித்தனர்

- வெப்துனியா

ஐ.நா. உச்சி மாநாட்டில் இந்திய சிறுமி பேச்சு..

பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளை எ‌த்தனையோ ‌வித‌ங்க‌ளி‌ல் எ‌த்தனையோ‌ பே‌ர் ‌விள‌க்‌கி‌வி‌ட்டன‌ர். ஆனா‌ல், பருவ‌நிலை மா‌ற்ற‌த்தா‌ல் உ‌ண்மை‌யிலேயே பா‌தி‌க்க‌ப்பட இரு‌க்கு‌ம் நமது இளைய சமூக‌ம் இதனை‌ப் ப‌‌ற்‌றி‌ப் பே‌சினா‌ல் அதுதா‌ன் ஏ‌ற்புடையதாக இரு‌க்கு‌ம்.

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு ந‌ல்ல உலக‌த்தை ‌வி‌ட்டு‌‌ச் செ‌ல்லு‌ங்க‌ள் எ‌ன்று எ‌த்தனையோ ‌வித‌ங்‌க‌ளி‌ல் கூ‌றி‌வி‌ட்டா‌ர்‌க‌ள். எத‌ற்கு‌ம் செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை இ‌ந்த ம‌க்க‌ள். உ‌ங்களது மூதாதைய‌ர் உ‌ங்களு‌க்கு எ‌ப்படி ஒரு ந‌ல்ல உலக‌த்தை ‌வி‌ட்டு‌ச் செ‌ன்றா‌ர்களோ, அதை‌ப் போ‌ன்றே எ‌ங்களு‌க்கு‌ம் ஒரு ந‌ல்ல உலக‌த்தை கொடு‌ங்க‌ள்.

‌நீ‌ங்க‌ள் பாழா‌க்‌கிய இ‌ந்த பூ‌மியை இ‌ங்களே ‌சீ‌ர்படு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று நமது ‌பி‌ள்ளைகளே‌ச் சொ‌ன்னா‌ல் கே‌ட்காம‌ல் இரு‌க்க முடியுமா?ஆ‌ம், அத‌ற்காக‌த்தா‌ன் ஐ.நா. உ‌ச்‌சி மாநா‌ட்டி‌ல் நட‌ந்த பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் கு‌றி‌‌த்து ‌விவா‌தி‌க்க கூ‌ட்ட‌ப்ப‌ட்ட கூ‌ட்‌ட‌த்‌தி‌ல் இ‌ந்‌தியாவை‌ச் சே‌ர்‌ந்த 9ம‌் வகு‌ப்பு மா‌‌ண‌வி யு‌க்ர‌த்னா கல‌ந்து கொ‌ண்டு பே‌சியு‌ள்ளா‌ர்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ள உச்சிமாநாடு அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், உலகெங்கும் உள்ள 300 கோடி குழந்தைகள் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி யுக்ரத்னா ஸ்ரீவத்சவா உ‌ச்‌சி மாநா‌‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்று பே‌சினா‌ர். இவ‌ர் உ.பி. தலைநகர் லக்னோவில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரு‌ம் மாண‌வியாவா‌ர்.

யுக்ரத்னா மாநா‌ட்டி‌ல் பேசுகை‌யி‌ல், பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்ப நிலை அதிகரித்து இமய மலை உருகுகிறது. இமயமலை‌யி‌ல் வாழு‌ம் பனிக்கரடிகள் பலியாகின்றன. ஐந்து பேரில் இருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அதே நேரத்தில், பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் அதிகரித்தபடி உள்ளது. பருவ நிலை மாற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. நமக்காக இல்லாவிட்டாலும் வருங்கால சந்ததிக்காகவாவது உலகை காக்க வேண்டியது நம் கடமை எ‌ன்று கூ‌றினா‌ர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜு ஜின்டோ உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரது மு‌ன்‌னிலை‌யிலு‌ம் யு‌க்ர‌த்னா‌வி‌ன் பே‌ச்சு இட‌‌ம்பெ‌ற்றது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
- வெப்துனியா

ஒரு 'முக்கோண' மர்மக் கதை!


விடை தெரியாத சில இயற்கை விநோதங்களில் மிக முக்கியமானது... பெர்முடா முக்கோணம்!

வட அட்லான்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோ ரிகோ இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் கிடைப்பதுதான், பெர்முடா முக்கோணம்!
பல மர்மங்களை உள்ளடக்கிய கடல் பகுதி. இந்த முக்கோணப் பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல வீடு திரும்பியது இல்லை. அப்படியே மாயமாகிவிடும். ஏன், கப்பல்களைக் காணவில்லை என்று ஆராய்ச்சிக்காகச் சென்ற 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்களையும் காணவில்லை.
1872-ல் அந்தப் பகுதிக்குள் அப்பாவியாகத் தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதல் பலி. தொடர்ந்து மெடா, சைக்ளோப்ஸ், கரோல் ஏ டீரிங்க், கன்னிமரா போன்ற பிரமாண்டக் கப்பல்களும் ஃப்ளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் மிதந்து, பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகிவிட, ஆயிரக்கணக்கான மக்கள் பலியானர்கள். 'நடந்தது என்ன?' என்று ஆராய்ச்சியாளர்கள் களத்தில் குதித்தார்கள். வாலன்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர், ''கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன!'' என்று குழப்பியடித்தார். அமெரிக்க விஞ்ஞானிகள், ''முக்கோண ஏரியாவுக்குள் திடப்பொருட்கள் சின்னச் சின்ன அணுக்களாக உடைந்துவிடுவதால் பொருட்கள் மாயமாகிவிடுகின்றன!'' என்றார்கள். ஏலியன்களின் தாக் குதல், ஓவர்டோஸ் புவிஈர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று பலர் பல செய்திகள் சொன்னார்கள்.

பெர்முடா புதிர் முடிச்சு அவிழ்வதற்குள் அடுத்த பூதம்... ஜப்பானின் தென் கிழக்குக் கடற்பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள் இப்போது காணாமல் போக ஆரம்பித்திருக்கின்றன. ஜப்பான் விஞ்ஞானிகள் 'டிராகன் டிரையாங்கிள்' என்று பெயரிட்டுக் கவலையோடு ஆராய்ந்துகொண்டு இருக்கிறார்கள்!
- ஆர்.சரண்
மூலம்- ஆனந்தவிகடன்

கறுப்புப் பெட்டி என்ன நிறம்?


விமான விபத்து என்றால் உடனே பத்திரிகைகளில் கறுப்புப் பெட்டி தேடும் செய்தி வரும். ஏனெனில் அதில்தான் இருக்கிறது விபத்தின் ரகசியம். கறுப்புப் பெட்டியின் உண்மையான பெயர் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர். விமானம் பறக்க ஆரம்பித்ததும் விமானம் பறந்த வேகம், விமானிகளின் உரையாடல், சீதோஷ்ண நிலை, இன்ஜின் வெப்பநிலை போன்றவற்றைப் பதிவு செய்ய ஆரம்பிக்கும். விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து முந்தைய இரண்டு மணி நேரத் தகவல்களை இதில் இருந்து எடுக்கலாம். பெயர் என்னவோ கறுப்புப் பெட்டி. ஆனால், பார்த்தவுடன் பளிச்சென்று கண்டுபிடிக்க வசதியாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அந்தப் பெட்டி. விமான விபத்துக்களுக்குப் பிறகு பெரும்பாலும் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுவிடும். உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் நடந்தபோது கறுப்புப் பெட்டிகள் முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டன.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தான ஹெலிகாப்டரில் இருந்த கறுப்புப் பெட்டி மோதிய வேகத்தில் சேதமானதால் போதிய தகவல்களைப் பெற முடிய வில்லை. அதை அமெரிக்காவுக்கு அனுப்பி தகவல் பெற இருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள். விபத்தின் ரகசியம் விரைவில் வரும்!
-பா.பிரவீன்குமார்
மூலம். ஆனந்தவிகடன்

உங்களை உலகம் புகழனுமா?!

சக்போரா குறியீடுகள்!

இங்கிலாந்தில் உள்ள சக்போரா ஹாலில் இருக்கும் அந்தப் படத்தில் ஒரு பெண்ணும் மூன்று மேய்ப்பர்களும் இருக்கிறார்கள். மூன்று ஆண்கள் ஒரு கல்லறையைத் தோண்டுகின்றனர். கல்லறையில் லத்தீன் மொழியில் 'நானும்
ஆர்காடியாவில் இருக்கிறேன்!' என எழுதப்பட்டு இருக்கிறது. அது என்ன என்பதுதான் ரகசியம். கண்டுபிடித்தால், இயேசு கடைசியாக திராட்சை ரசம் குடித்த கோப்பையின் இடம் தெரியும் என்பது பலரின் நம்பிக்கை. D O U O S V A V V M என்னஎன்று புரிகிறதா? புரிந்தால் நீங்கள் உலகப் புகழ் பெறலாம்!

-ரயன்
மூலம். - ஆனந்தவிகடன்

கடத்தல் ஏலியன்ஸ் கமிங்!

வேற்றுக் கிரகத்து மனிதர்கள்தான் சென்ற நூற்றாண்டில் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் தூக்கம் கெடுத்தவர்கள். UFO (Unidentified Flying Objects) எனப்படும் பறக்கும் தட்டுக்கள்தான் பல வருடங்களாக உலக மக்களை ஆச்சர்யப்படுத்தி அச்சப்படுத்துகிறது. சங்குச் சக்கரம் மாதிரி தலைக்கு மேலே கிறுகிறுவெனச் சுற்றி, பின்னர் விஷ்க்கென வேகமெடுத்து மறையும் பல பறக்கும் தட் டுக்கள் இன்று வரை பீதி கொடுத்து பேதி கிளப்புகிறது. ஏலியன்கள் (வேற்றுக் கிரக வாசிகள்) பூமிக்கு வருவதே மனிதர்களின் ஐ.க்யூ லெவலைக் கண்டுபிடிக்கத்தான் என்பது அமெரிக்க மக்களின் நம்பிக்கை. 1961-ம் வருடம் பார்னே மற்றும் பெட்டி ஹில் தம்பதியர் விநோதமான உருவம்உடைய ஆட்களால் கடத்தப்பட்டார்கள். அந்த உருவங்கள் தங்கள் உடலில் ஏதோ ஆராய்ச்சி செய்தன என்பதைத் தாண்டி அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. அதற்கடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்தவர்கள் திடீரெனக் காணாமல் போக ஆரம்பித்தார்கள். இரண்டு நாள் கழித்து மந்திரித்த கோழி மாதிரி திரும்பி வந்தார்கள். கர்ப்பிணிப் பெண் ஒருவர் காணாமல் போய் குழந்தை இல்லாமல் திரும்பி வந்த கதையும் நடந்தது. ஊரடங்கு உத்தரவு போட்டது போல ஊரே வீட்டுக்குள் அடைந்துகிடந்தது. 'நாங்கள் பறக் கும் தட்டைப் பார்த்தோம். எங்களை ஏலியன்கள் கடத்திச் சென்றார்கள்' என்று பலர் மீடியாவை நோக்கிப் படையெடுத்தார் கள். அன்றில் இருந்து இன்று வரை டியூப் லைட் மாதிரி, கவிழ்க்கப்பட்ட பக்கெட் மாதிரி விநோத உருவங்கள் பறந்ததைப் பலர் படம் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கமும் முடிந்தவரை என்னென்னவோ ஆராய்ச்சிகள் செய்து பார்த்துச் சலிப்படைந்துவிட்டது. உலகின் வெவ்வேறு மொழிகளில் 'நாங்கள் உங்கள் நண்பர்கள்' என்பதை ரெக்கார்ட் செய்து சேட்டிலைட் மூலமாக விண்வெளியில் ஒலிபரப்பு செய்தார்கள் என்றுகூடச் செய்தி வதந்தி. எத்தனையோ பேர் பார்த்திருந்தாலும் இன்று வரை பறக்கும் தட்டின் ஒரு பகுதியோ, அதில் இருக்கும் ஓர் உயிரினமோ பூமியில் சிக்கியது இல்லை. பறக்கும் தட்டு என்பது 'அமெரிக்க ராணுவம் உருவாக்க முயற்சித்து, தோற்றுப்போன புதுவகைத் தாக்குதல் கருவி' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கிறதோ, இல்லையோ... ஹாலிவுட் டைரக்டர்களின் உதவியால் ஏலியன்கள் பூமியை நோக்கி வருடா வருடம் படை எடுத்துக்கொண்டே இருக்கின்றன!

- - கார்த்திகா குமாரி
மூலம் - ஆனந்தவிகடன்

மாஜிகளின் மஜா PARTY !!!






















நன்றி - நக்கீரன் குழுமம்

புறக்கடையில் கோழி வளர்க்கும் அமெரிக்கா...!

"நேரங்காலம் சரியில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றெல்லாம் யாராலும் ஆருடம் கணிக்க முடியாது. அப்படியே எதையாவது கணித்தாலும், அது தலைகீழாக மாறிப் போகலாம். அதனால், இப்போதே சுதாரித்துக் கொண்டு வீடுகளிலேயே கோழிகளை வளர்த்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு, நிதிச் சுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்"

-இது, உலகத்தைத் தாங்கிப் பிடிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, உச்சக்கட்ட மமதையில் உலக நாடுகளைப் பலவகையிலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் பரபரப்பாக இப்போது ஓடிக்கொண்டிருக்கும் அறிவுரைதான்!

அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் பலரும், மக்களை நோக்கி அடிக்கடி இப்படிப்பட்ட அறிவுரைகளைத்தான் அள்ளிவிட்டுக் கொண்டுள்ளனர். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், மறைக்கவோ... மறுக்கவோ முடியாத விஷயம்தான் இது

உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உலக நாட்டாண்மையான அமெரிக்கா ரொம்பவே ஆடிப்போயிருப்பது ஊரறிந்த உண்மை. அமெரிக்காவில் கடந்த ஆறாண்டுகளாக எகிறிக்கொண்டே போகும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திணறிக் கிடக்கிறார்கள், அமெரிக்கர்கள்

சாப்பிடுவதற்காகவே வாழும் ஜென்மங்கள்!

வாழ்வதற்காக சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையைவிட, சாப்பிடுவதற்காகவே வாழ்பவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகம். அரசும், தனியார் நிறுவனங்களும் இப்படித்தான் அந்த மக்களை பழக்கியும் வைத்துள்ளன. இதன் காரணமாக 'சாப்பாட்டு ராமன்'களாகிப் போனவர்கள்கூட, தற்போதையச் சூழலில் சாப்பாட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயம். விடுமுறைகளைக் கழிக்க அருகிலுள்ள ஊர்களுக்கு மட்டுமே போகிறார்கள். புதிய கார்களை வாங்குவது, புதிய வீடு வாங்குவது என்று பல விஷயங்களைத் தவிர்த்து வருகிறார்கள் மக்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் கோழி வளர்ப்பு என்பதும் அங்கே அதிகரித்துக் கொண்டுள்ளது. அதிகளவில் கோழி இறைச்சியை உண்டு பழகிப்போன அமெரிக்கர்கள், இறைச்சிக்காக பணம் செலவளிக்க முடியவில்லை. இந்நிலையில்தான், பொருளாதார வல்லுநர்களின் அறிவுரைப்படி வீட்டுக்குவீடு புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

நாட்டுக் கோழி மற்றும் பிராய்லர் கோழி என்று தங்களுக்குப் பிடித்த கோழிகளை மக்கள் வளர்க்க ஆரம்பித்திருப்பதால், நாடு முழுவதுமே புறக்கடை கோழி வளர்ப்பு முழு வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் கோழிக்குஞ்சு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் முழு வீச்சில் குஞ்சுகளை உற்பத்தி செய்து வருகின்றன. நியூயார்க், சிகாகோ போன்ற பெரு நகரங்களில்கூட கோழிகளுக்கான கூண்டுகள் கனஜோராக விற்பனையாகின்றன. ‘கோழிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது' என்ற சட்டத்தையே அரசாங்கம் சற்று தளர்த்தியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாளைக்கே வேலைபோனால் என்னாவது?

நாடு முழுவதும் கோழி வளர்ப்பில் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, கோழிக் குஞ்சுகள் அதிகளவில் பார்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை மட்டுமே 1.2 லட்சம் பவுண்ட் அளவில் கோழிக் குஞ்சுகள் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்கின்றன புள்ளிவிவரங்கள்.

"நாளைக்கே என் வேலை போய் விட்டால்... நான் என்ன செய்யமுடியும்? எப்படி, என் குழந்தைகளுக்குச் சோறு போடுவது?'' என்று பரிதாபமாகக் கேட்கும் நான்கு குழந்தைகளின் தந்தையான ரோம்ரியல், "அதனாலதான் நிறையக் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளேன். வளர்ந்த கோழிகளையோ, இறைச்சியையோ வாங்க அதிகளவு செலவு பண்ண வேண்டியிருக்கிறது. அதனால் குஞ்சுகளை வாங்கி நாமே வளத்தால் பணம் மிச்சமாகிறது" என்று தெம்பாகச் சொல்கிறார்.

கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் நூலகர் ஜாஸ்மின் மிடல்பாஸ், "நான் கடந்த ஆண்டிலிருந்து கோழி வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் 26 கோழிகள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக எனக்கு ஒரு டஜன் முட்டைகள் கிடைக்கின்றன. அதிகபட்சமாக மூன்று டாலர் வரை கிடைக்கிறது" என்று சொல்கிறார் சந்தோஷத்துடன்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, அரசுத்துறையினரும் புறக்கடைக் கோழி வளர்ப்புக்கு அங்கே ஊக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதைப் பார்க்கும்போது,

'ஆடாத ஆட்டமெல்லாம்... போட்டவங்க மண்ணுக்குள்ள... போன கதை, உனக்குத் தெரியுமா...?'

என்றே பாடத்தோன்றுகிறது.

- நன்றி
விகடன் குழுமம்