திருக்குறள்

இந்திய பொதுத் தேர்தல்...


இந்தியாவை உலக நாடுகள் ஆச்சரியத் தோடு பார்ப்பதற்கு கலை, ஆன்மீகம், கலாச் சாரம் போன்ற பல அம்சங்கள் இருந்தாலும், நவீன உலகத்தின் பார்வையில் இந்தியாவின் ஆச்சரியகரமான அம்சமாக இருப்பது இங்கு நிலவும் ஜனநாயகமாகும். 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா வில் 70 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகையுடன் கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுவருவதை சர்வதேச சமுதாயம் வியப்போடு பார்க்கிறது.தற்போது இந்தியாவின் 15--வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.


சுதந்திர இந்தியா, 1950-ஆம் ஆண்டில் முழுமையான குடியரசு நாடான பிறகு, 1952-இல் முதல் பொதுத் தேர்தல் நடை பெற்றது. இதற்கான வாக்குப்பதிவு 1951- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 4 மாதங்கள் நடைபெற்றது. 26 மாநிலங்களில் 489 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 245 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார் பண்டிதர் ஜவஹர்லால் நேரு. ஐந்தாண்டுகள் கழித்து, இரண்டாவது பொதுத்தேர்தல் 1957-ஆம் ஆண்டு நடைபெற்றது. 490 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் காங்கிரஸ் கட்சி 296 இடங் களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நேருவே மீண்டும் பிரதமரானார். 1962- இல் 3-வது பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வெற்றிபெற, மூன்றாவது முறையாகப் பிரதமரானார் நேரு.


நாடு விடுதலையடைந்ததிலிருந்து பிரதம ராகப் பொறுப்பேற்றிருந்த நேரு, 1964-ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, பிரதமர் பொறுப்பை லால்பகதூர் சாஸ்திரி ஏற்றார். இரண்டாண்டுகள் மட்டுமே பிரதமராக இருந்த அவர், ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்டு நகருக்கு சென்றபோது மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து 1966-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமரானார் நேருவின் மகள் இந்திராகாந்தி. 1967-ஆம் ஆண்டில் நான்காவது பொதுத்தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைப் (297) பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.


வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சி, இந்திரா ஆட்சிக்காலத்தில் இரண்டாகப் பிளவுற்றது. காமராஜர், மொரார்ஜிதேசாய், நிஜலிங்கப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்களைக் கொண்ட ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காந்தியை தலைவராகக் கொண்ட இந்திரா காங்கிரஸ் என இரு கட்சிகளானது. தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ஐந்தாவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டார் இந்திராகாந்தி. இதனையடுத்து, 1971-ல் தேர்தல் நடை பெற்றது. 352 தொகுதிகளில் இந்திராகாங்கிரஸ் வெற்றிபெற, மீண்டும் இந்திரா பிரதமரானார். ஆனால், இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்ட தால், அதிலிருந்து மீள்வதற்காக 1975-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் பிரதமர் இந்திராகாந்தி. எதிர்க்கட்சியினர் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன.


1977-இல் நெருக்கடி நிலை திரும்பப்பெறப் பட்டது. சிறையிலிருந்து விடுதலையான எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் நின்று ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஜனதா கட்சியை உருவாக்கினர். 1977 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. ஜனதாகட்சி 298 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மொரார்ஜி தேசாய், பிரதம ரானார். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசு, ஜனதா அரசுதான். ஜனதா கட்சித் தலைவர் களிடையே ஏற்பட்ட மோதல்களால் அக்கட்சி பிளவுபட்டது. பெரும்பான்மையை இழந்த மொரார்ஜி தேசாய் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தார். இதையடுத்து, 1979-ல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சரண்சிங் பிரதமரானார். சில வாரங்களே நீடித்த அந்த அரசும் கவிழ்ந்தது.


நாட்டின் 7-வது பொதுத்தேர்தல் 1980-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்திரா காங்கிரஸ் கட்சி 351 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலுக்குள் இருந்த தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தை அனுப்பினார் இந்திரா. இது சீக்கிய மதத்தினரின் மனதை புண்படுத்தியது. 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி தனது பாதுகாவலர்களாலேயே இந்திரகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். உடனடியாகப் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்தார்.


1984-ஆம் ஆண்டு நடந்த 8-வது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 403 இடங்களில் வெற்றிபெற்றது. ராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பை யேற்றார். அவரது கட்சியில் நிதியமைச்சராக இருந்த விஸ்வநாத் பிரதாப்சிங் (வி.பி.சிங்) ஆட்சியின் ஊழல்களை சுட்டிக்காட்டியதால் வெளியேற்றப்பட்டார். ஜனமோர்சா என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அது மேலும் சில கட்சிகளுடன் இணைந்து ஜனதாதளமானது. ஜனதாதளம், தி.மு.க, தெலுங்குதேசம், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட 7 கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணி உருவானது. 1989 தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. வி.பி.சிங் பிரதமரானார். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷனை அமல்படுத்தியதாலும் பாபர் மசூதியை இடிக்க முயன்ற பா.ஜ.கவின் ரதயாத்திரையைத் தடுத்ததாலும் வி.பி.சிங் ஆட்சி 1990-ல் கவிழ்ந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமரானார். அவரது ஆட்சி சில மாதங்களே நீடித்தது.


1991 தேர்தலின்போது ராஜீவ்காந்தி படு கொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்றது. பி.வி. நரசிம்மராவ் பிரதம ரானார். 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 1996 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 13 நாட்கள் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். பின்னர் மாநிலக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவில் எச்.டி. தேவகவுடா, குஜ்ரால் ஆகி யோர் பிரதமராக இருந்தனர். ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. 1998-ல் நடந்த பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி யமைத்த வாஜ்பாய் 13 மாதங்களே ஆட்சியில் இருந்தார். அ.தி.மு.க. தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. 1999-ஆம் நடந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, வாஜ்பாய் பிரதமரானார். 2004-ஆம் ஆண்டு நடந்த 14-வது நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாகாந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில வென்றது. டாக்டர் மன்மோகன்சிங் பிரதமரானார்.


இந்த நிலையில்தான் நாட்டின் 15-வது நாடாளு மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வலிமைமிக்க ஒரே தலைவர், பெரும்பான்மைமிக்க ஒரே கட்சி என்ற நிலைமை இன்று இந்தியாவில் இல்லை. உயர்சாதி ஆதிக்கத்தை தகர்த்து பிற்படுத்தப்பட்ட,-தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அரசியல் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாநிலக் கட்சிகளின் தயவின்றி மத்தியில் எந்த ஆட்சியும் அமையமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.மாநிலக் கட்சிகள் ஒதுக்கும் இடங்களை தேசியக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலே நிலவுகிறது. இதன் மூலம் ஒரே இடத்தில் அதிகாரம் குவிவது தடுக்கப்பட்டு, மாநில நலன்களில் கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த நிலை நீடித்து, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால், எதிர்காலத்தில் மாநில சுயாட்சி என்ற கனவு சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


- கோவி.லெனின்

செந்தில்நாதன் பார்ட்டி











திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக ஓரே மேடையில்....


திமு.க-வின் சார்பில் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, மாநில அமைச்சர்கள் பூங்கோதை, கீதா ஜீவன், காங்கிரஸ் சார்பில் ராணி வெங்கடேசன், தே.மு.தி.க-வின் விருதுநகர் வேட்பாளர் 'மாஃபா' பாண்டியராஜன், சரத்குமார் கட்சி பிரமுகர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள்... இப்படி அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, கும்பகோணத்தில் நடந்தது அந்த மாநாடு.

'ஏதேது இப்படி ஒரு அதிசய கூட்டணியா? என்று விவரம் புரியாதவர்கள் சற்று குழம்பித்தான் போவார்கள். இவர்களைச் சேர்த்து வைத்தது இனம்தான்! நாடார் மகாஜன சங்கத்தின் 68-வது மாநாடும், மகளிர் மாநாடும் கடந்த மார்ச் 28, 29-ம் தேதிகளில் கும்பகோணம் சர்வமங்களா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில்தான் அந்த அபூர்வம்!

அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாட இருக்கும் நாடார் மகாஜனசங்கத்தோடு தமிழகம் முழுக்க சுமார் 1,500 உறவின் முறை சங்கங்கள் தொடர்பில் உள்ளன. சுமார் 60 சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக இருக்கும் நாடார் சமுதாய மாநாடு தேர்தல் சமயத்தில் நடப்பதால்... முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வரின் துணைவியார் ராசாத்தியம்மாள் அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி இருவரில் ஒருவர் கண்டிப்பாக வரப்போகிறார் என மாநாட்டு முழுவினர் எதிர்பார்த்தனர். இருவரும், கடைசி வரை வரவேயில்லை. 'நாடார் சமூகத்தவர் தன் பக்கம் இருக்கட்டும்' என்று நினைத்து, இந்த மாநாட்டுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார் தயாநிதி மாறன். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரை அழைத்து வருவதாக சொல்லியிருந்த நாடார் சமூக பிரமுகர் வீனஸ் வீர அரசும் வரவில்லை.

மாநாட்டில் பேசிய சங்கத்தின்பொதுச் செயாளர் கரிக்கோல்ராஜ், ''2011-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் எங்களின் பலத்தை நிரூபிப்பதற்காக, எங்களை இப்போதிலிருந்தே தயார்ப்படுத்திக் கொள்கிறோம். தி.மு.க-வின் தலைவர் கலைஞராக இருக்கட்டும். அ.தி.மு.கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவாக இருக்கட்டும். இந்த தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு எங்களிடையே நபர்கள் வரவில்லையே? காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளிலும் இதே நிலைமைதான். சுயமாக முடிவெடுக்கும் இடத்தில் எங்கள் அமைப்பை வைத்திருக்க மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் தற்போது உள்ளவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளின் கட்டுப்பாட்டை விட்டு வெளியே வரமுடிவதில்லை. பொதுவான சில சமுதாயப் பணிகளைச் செய்வதற்கே ஆள்பவர்களிடம் போராட வேண்டியுள்ளது. இலவசக் கல்வி தர நாங்கள் நினைக்கிறோம். எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்கள் பள்ளிக்கூடங்களில் நிலம் தொடர்பான பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. மூன்று நர்ஸிங் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதில் அலைச்சல். சென்னை புறநகர் பகுதிகளில் பல லட்சம் பேர் கிராமணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களைப் போலவே, ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் சாணார்களின் எண்ணிக்கையும் பல லட்சம் தாண்டும். இந்த இரு வகுப்பினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும்படி கேட்கிறோம்.

டாஸ்மாக் கடையில் கள்ளையும் விற்கவேண்டும். பதநீரை அரசே கொள்முதல் செய்து, கருப்பட்டி ஆக்கி விற்பனை செய்யலாம். 1970-ம் ஆண்டுக்குப் பிறகு, பதநீர் மாளிகை சென்னையில் செயலற்றுக் கிடக்கிறது. அதை மீண்டும் பொலிவுடன் மாற்றி செயல்பட வைக்க வேண்டும். பனை வாரியத்தை முறையாகச் செயல்படுத்தவேண்டும்!'' என கோரிக்கை மேல் கோரிக்கையாக அடுக்கினார் கரிக்கோல்ராஜ்.

- நன்றி ஜீ.வி

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....


























































பணநாயகம்... ஜனநாயகத்துக்கு சவால்!

ரவிக்குமார் எம்.எல்.ஏ.

தேர்தல் அறிக்கைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வெளியிட்டுவிட்டன. வேட்பாளர் பட்டியலும் பல கட்சிகளால் வெளியிடப்பட்டு விட்டன. இனிமேல் வாக்கு சேகரிக்கக் கிளம்ப வேண்டி யதுதான்.

கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், அவை அறிவித்திருக்கிற வேட்பாளர் பட்டியலையும் பார்க்கும்போது, அவற்றுக்கிடையே ஒரு முரண்பாடு இருப் பதை உணர முடிகிறது. தேர்தல் அறிக்கையில் பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் பேசி யிருக்கின்றன. தேசியக் கட்சிகளை எடுத்துக்கொண்டால், வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டு பாதுகாப்பு என்று ஏகப்பட்ட பிரச்னைகளை விவாதித்திருக்கின்றன. மாநிலக் கட்சிகளும்கூட தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்தில், பல்வேறு ஆழமான பிரச்னைகளை தேர்தல் அறிக்கை களில் வெளியிட்டு இருக்கின்றன. ஆனால், இந்தத் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பேசு வதற்கும், நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதங்களை திறமையாக முன்வைப்பதற்குமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால், அரசியல் கட்சிகள் வெளி யிட்டுள்ள வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால், அவர்களில் பலர் அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக் கையில் முன்வைத்துள்ள விஷயங்களைப் பற்றி எந்தளவுக்கு விவரம் அறிந்துள்ளனர் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஆக, தேர்தல் அறிக்கை என்பது வெற்று வாக்குறுதிதானோ என்ற ஐயம் வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, என்னென்ன விஷயங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதைப் பார்த்தாலே இதற்கான விடை நமக்குத் தெரியும். போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் நேர்காணல்களில் முக்கியமாக இடம்பெறுகின்ற கேள்வி, 'நீங்கள் எவ்வளவு கோடி செலவு செய்வீர்கள்?' என்பதுதான். ஒரு
நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிகபட்சமாக இருபத்தைந்து லட்ச ரூபாய்தான் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த போதிலும், பலகோடி ரூபாய்களை ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்கிறார் என்பது ஊரறிந்த ரகசியம்.

தேர்தல் செலவு என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்துகொண்டே போகிறது. முன்பெல்லாம் சட்ட மன்றத் தேர்தலுக்குத்தான் அதிகமாக செலவாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்படி செலவு செய்ய தேவையில்லை என்ற நிலை இருந்தது. இப்போது சிறிய கட்சிகள்கூட மத்திய அரசில் பங்குபெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், தேர்தலில் செய்யப்படும் செலவு பின்னாளில் ஈட்டப்போகும் வருமானத்துக்கான முதலீடாகக் கருதப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலும்கூட செலவு மிகுந்ததாக மாறிவிட்டது. மிக சாதாரணக் கணக்கின்படி தொகுதி ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் செல வாகும் என்றுதான் பொதுவான பேச்சு இருக்கிறது. ஆக, நம்முடைய 'ஜனநாயகம்' என்பது 'பணநாயகமாக' மாறிவிட்டது!

தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு எத்தனையோ விதமான பற்றாக்குறைகள் ஏற்படும். இப்போது வேட்பாளர் பற்றாக்குறை இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் பலவும் அறிவித்து வருகின்ற வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும்போது,

நல்ல வேட்பாளர்கள் கிடைப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றம் என்பது கட்சிகள் தங்களுடைய பலத்தைக் காட்டுகிற இடமல்ல. அதுதான் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கிற அவையாகும். அங்குதான் நம்முடைய நாட்டின் அனைத்துக் கொள்கைகளையும் தீர்மானிக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. உள்நாட்டு, வெளியுறவு, பாதுகாப்பு தொடர்பான நிலைபாடுகளெல்லாம் அங்குதான் தீர்மானிக்கப்படுகின்றன.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அவைக்கு எப்படிப் பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் எந்தவொரு கவனமும் செலுத்துவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது. பல்வேறு விஷயங்களில் ஞானமும், அதுபற்றி விவாதிக்கக்கூடிய ஆற்றலும்கொண்ட பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம்தான் ஒரு கட்சி தன்னுடைய இருப்பை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த முடியும். வெறும் பலத்தால் எதையும் செய்துவிட முடியாது. அரசியல் அறிவோ, பல்வேறு விஷயங்கள் குறித்த அக்கறையோ இல்லாதவர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, அவர்கள் வெறுமனே கைத்தூக்கிகளாக மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு கட்சிக்கு எத்தகைய லாப-நஷ்டங்களை ஏற்படுத்துகிறது என்பதை விடவும், அத்தகைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிற மாநிலங்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பது மிகமிக அவசியமாகும்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்று நம்முடைய மாநிலம் சந்தித்து வருகின்ற பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பகிர்வு பிரச்னைகள்; மத்திய-மாநில உறவுகள் குறித்த சிக்கல்கள்; இனம் என்கின்ற விதத்தில் தமிழ் இனம் சந்தித்து வருகின்ற சிக்கல்கள் என ஏராளமான பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் நாடாளுமன்ற அவையில் எடுத்துவைத்து, இதற்கான தீர்வுகளைக் காணவேண்டிய கடமை இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்லப்போகும் எம்.பி-க்களுக்கு இருக் கிறது. அந்தக் கடமையை ஆற்றக்கூடிய தகுதியான நபர்களை அனுப்பினால் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்தை நாம் காப்பாற்ற முடியும்.

தமிழ்நாட்டின் நலன்களுக்காக வாதாடக்கூடிய தகுதி யான நபர்களைத் தேர்ந்தெடுப்பதே வாக்காளர்களின் பொறுப்புதான் என்றாலும், அதற்கான வாய்ப்பு அவர் களுக்கு வழங்கப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி. தம்முடைய தொகுதியில் நிறுத்தப்படுகிற வேட்பாளர்களில் இருந்துதான் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில் வாக்காளர்களின் தேர்வு மிகவும் வரையறுக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. எனவே, இதில் வாக்காளர்களை அதிகம் குறைசொல்ல முடியாது. வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் கவனமாக இருந்து, நல்ல வேட்பாளர்களை நிறுத்தாமல் போனால், வாக்காளர்கள் எதுவும் செய்வதற்கில்லை.

விவரமறிந்த, நாட்டின் மீது அக்கறைகொண்ட பலரும், அரசியல் என்றாலே ஒதுங்கிப் போகிற நிலைதான் இப்போது உள்ளது. இதற்குக் காரணம், அத்தகைய நபர்கள் இருந்து செயல்படக்கூடிய கட்சிகள் இல்லாமைதான். இப்படியான நபர்கள் சேர்ந்து செயல்படக்கூடிய வாய்ப்பை அரசியல் கட்சிகள் உருவாக்கித் தர தவறிவிட்டன என்பதே உண்மை. அப்படி தப்பித்தவறி எவரேனும் வந்தாலும்கூட, அவர்கள் இந்தக் கட்சிகளில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய நிலை இருப்பதில்லை. இதற்கு அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லாமல் போய்க்கொண்டிருப்பதே முக்கியமான காரணமாகப்படுகிறது.

ஒருவர் தன்னுடைய ஆற்றலை வெளிப் படுத்தி, ஒரு ஆளுமையாக பரிணமிப்பதற்கு ஏற்ற சூழல் எந்த அரசியல் கட்சியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் கட்சிகளில் நல்ல வேட்பாளருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள கோஷ்டிப் பூசல்கள் நிறைந்த அரசியல் சூழலில், நல்ல ஆளுமைகள் எந்தக் கட்சியிலும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படையான தகுதியாக ஒருவரிடம் உள்ள பணம்தான் கருதப்படுகிறது என்ற நிலையில், வேறு எந்தவித தகுதியையும் அவரிடம் எதிர்பார்ப்பது நியாயமல்ல. பணத்தை செலவு செய்து வெற்றி பெற்றுப்போகிற ஒரு வேட்பாளர், பணத்தைச் சம்பாதிப்பதில்தான் குறியாக இருப்பார். அவருக்கு மாநிலத்தின் நலனோ, இனத்தின் நலனோ இன்னும் சொல்லப்போனால், அவர் சார்ந்துள்ள கட்சியின் நலனோகூட முக்கியமாக இருக்காது. பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்கி வெற்றி பெற்றுப் போகிற ஒருவர், அதேபோல பணத்தால் வாங்கப்படக்கூடிய ஒரு பண்டமாகத்தான் இருப்பார். ஒருசில எம்.பி-க் களின் ஆதரவுகூட நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கக்கூடும் என்ற நிலையில், இப்படியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்குப் பயனளிக்கும் என்பதை அரசியல் கட்சிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நாடாளுமன்றத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதம் வந்தபோது, அதில் பெரும் பாலான மாநிலக் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிதாகும். கலந்துகொண்ட ஒன்றிரண்டு கட்சிகளும்கூட தம்முடைய கூட்டணி தலை மையின் நிலைப்பாட்டை வழிமொழிவதாகவே கருத்துத் தெரிவித்தன. இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், சுயமாக சிந்தித்து நல்லதொரு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு இதுபோன்ற விஷயங்களில் ஞானம் கொண்ட பிரதிநிதிகள் அவையில் இருக்கவேண்டும்.

இன்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகின்ற நிதிப் பகிர்வு குறைந்துகொண்டே போகிறது. அதுபற்றி மாநிலக் கட்சிகள் சார்பில் போகிற எம்.பி-க்கள் குரல் எழுப்புவதில்லை. தமிழ்நாட்டில் 'வாட்' வரி அமல்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களைக் குறித்துப் பேசக்கூடிய எம்.எல்.ஏ-க்கள் ஒருசிலர்தான் தமிழக சட்டப் பேரவையில் இருந் தார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் நிலை இதைவிட சிறந்ததாக இல்லை. தற்போதுள்ள பொருளாதாரச் சூழலை புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? பொருளாதார விஷயங்களில் பயிற்சி அற்றவர்கள் அவை யில் நிறைந்திருக்கும்போது, நிதிநிலை அறிக்கை மீது என்ன விவாதத்தை நடத்திட முடியும்?

நம்முடைய நாட்டின் வேளாண் துறை, சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால், வேளாண் துறையை சரிவில் இருந்து காப் பாற்றியாக வேண்டும். வேளாண் துறை சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து எவ்வளவு பேருக்கு ஆழமான புரிதல் இருக்கிறது? விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த அறிக்கையைப் புரிந்துகொள்ளக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இன்றைய நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்? அதுபோல இன்று மீனவ மக்களின் வாழ்க்கையையே சிக்கலுக்கு ஆளாக்கக்கூடிய 'கடற்கரையோர மேலாண்மை' திட்டத்தைப் பற்றிவிவாதித்து, மீனவர் களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு குரலெழுப் பக்கூடிய எம்.பி-க்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?

தகுதியான, மக்கள் நலனில் அக்கறைகொண்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அரசியல் கட்சிகளுக்கு ஏற்படப்போகும் நஷ்டத்தைவிடவும், ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டமே மிகவும் அதிகம். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு குறித்துக் கண்காணிக்கவும், கருத்துச் சொல்லவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, ஊடகங்களுக்கு இதில் அதிகம் பொறுப்பு இருக்கிறது. விழிப்பு உணர்வு கொண்ட சூழலை ஏற்படுத்துவதன் மூலமே இத்தகைய சீர்கேட்டைச் சரிப்படுத்த முடியும்.

'அவர்கள் கட்சி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது அவர்களுடைய உரிமை. இதில் நாம் தலையிட்டு எதுவும் செய்து விடமுடியாது' என்று நினைத்தால், அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் மக்கள்தான். ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறாமல் தடுப்பதற்கு விழிப்பு உணர்வு பெற்ற வாக்காளர்கள் முன்வர வேண்டும். தனி நபர்களாக இருந்து, இதை மாற்றிவிட முடியாது என்பது உண்மைதான். சமூக அக்கறைகொண்ட இயக்கங்களும், ஊடகங்களும் நினைத்தால் நிச்சயமாக இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். செய்வார்களா?
-நன்றி ஜீ.வி

அரசியலில் சாதி (தீ)

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் முதன்மையாகத் திகழ்வது அவர்கள் சார்ந்திருக்கும் “சாதி”

தற்போது நாட்டில் மொத்தம் 4650 சாதிகள் உள்ளதாக அண்மையில் நடந்த மானிடவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெருன்பான்மையான வாக்காளர்கள் என்றால், அந்தச் சாதியைச் சார்ந்தவர்கள் தான் அந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று நம்பப் படுகிறது.

மக்கள் சாதியையும் , தன் கட்சியையும் பார்த்து வாக்களிக்கிறார்கள் அதே சமயத்தில் தன் கட்சிக் காரன் தன் சாதியைச் சேர்ந்தவனா என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மக்களின் இந்த எண்ணத்தை புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் சாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகின்றன. “ எங்களுக்கு எல்லாச் சாதியும் ஒன்றுதான்” என்று அறிவித்து வெற்றியை இழக்க அல்லது சோதனைச் செய்து பார்க்க கட்சிகள் தயாராக இல்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தத் தொகுதியிலும் தனிப்பட்ட சாதியினர் 65 சதவீதத்துக்கு மேல் இல்லை என்பது தற்போது வந்துள்ள கணக்கெடுப்புகளின் தெரிய வந்துள்ளது. இந் நிலையில் பெரும்பான்மை சாதியில் இருந்து பல வேட்பாளர்கள் போட்டியிடும் போது சாதிக்காகவே விழும் வாக்குகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள். அதனால் பிற சாதிகளின் வாக்குகளை அதிகமாக பெறுகின்ற பெரும்பான்மைச் சாதியின் வேட்பாளர் வெற்றி பெற முடிகிறது. சாதியோடு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி, வேட்பாளரின் தனிப்பட்டச் செல்வாக்கு ஆகியவையும் காரணமாக அமைகின்றன.

ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் சாதி இயக்கங்கள் மிகவும் வலிமை பெற்று கட்சியாக காட்சியளிக்கும் போது அந்த இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர், அல்லது கணிசமான அளவு வாக்குகளை பெறுகின்றனர்.

இந்த விசயத்தில் முற்றிலுமாக ஒத்துப் போவது வன்னியர் சங்கத்தில் இருந்து உருவான “பாட்டாளி மக்கள் கட்சி”. அதே போல் தலித் மக்களை முன்னிலைப்படுத்தி ஏராளமான அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அவை பெரும் கட்சியாக உருவெடுத்ததில்லை. டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையிலான தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு “புதிய தமிழகம்” என்ற கட்சியாகவும், திருமாவளவின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு என்று சில கட்சிகளே தலித்களின் வாய்ப்புகளாக உள்ளது. இயக்க ரீதியாக தலித்துக்கள் அணி திரளும் போது அவர்களுடைய வாக்குகளை பிற கட்சியினர் அவ்வளவு எளிதாக பெற முடிவதில்லை.

‘கவுண்டர் ஓட்டு கவுண்டருக்கே” என்ற முழக்கத்தோடு தற்போது கொங்கு மண்டலத்தில் களமிறங்கி இருக்கும் – கொங்கு முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் இருந்து அரசியல் கட்சியாக புறப்பட்டிருக்கும் “மனித நேய மக்கள் கட்சி”, முக்குலத்தோர் ஓட்டுகளை மட்டுமே நம்பி கட்சி நடத்தும் கார்திக், யாதவர்கள் ஒட்டு எப்போதும் எனக்குத்தான் என்று சொல்லியே அரசியலில் அடிக்கடி அணி மாறும் கண்ணப்பன், என்று தமிழக அரசியலில் சாதி தன் பங்களிப்பச் சரி வரச் செய்கிறது

1967 ல் உணவுப் பிரச்சினை,
1971ல் வறுமையை ஒழிப்போம் என்ற இந்திராவின் கோஷம்,
1977 ல் அவசர நில எதிர்ப்பு,
1984ல் இந்திரா கொலை,
1989ல் போஃபர்ஸ் ஊழல் பிரச்சினை,
1991ல் ராஜீவ் படு கொலை...

என்ற இந்திய அளவில், மாநில அளவில் சில பொதுப் பிரச்சினைகள் தேர்தலில் இடம் பெறும் போது மட்டுமே, சாதி தன் பங்களிப்பை செய்ய இயலாமல் போனது.

எஸ். அன்பு.

மக்களவைத் தேர்தலும் மக்களின் குழப்பமும்

15வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அறிவிக்கை செய்துள்ளதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ள நிலையில், மேலும் ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் மக்களின் சிந்தனை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் அரசியல் கட்சிகளுக்கிடையே பயம் கலந்த குழப்பம் நிலவுகிறது.
இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் - அது தேச கட்சியாக இருந்தாலும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் - முழுமையான வெற்றியை அள்ளிக்கொண்டு போகும் அளவிற்கு ஆதரவு இல்லாத நிலையே கட்சிகளின் இந்தக் குழுப்ப நிலைக்கு காரணம்.
மாநிலக் கட்சிகளுடன் கூட்டு வைத்தாலும் அந்த அந்தந்த மாநிலங்களைத் தாண்டியதாக இருக்காது என்று காங்கிரஸ் கட்சி வீராப்பாக அறிவித்தது. ஆனால் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியபோதுதான் தனக்கு இருக்கும் ‘மரியாதை’யை அக்கட்சி புரிந்து கொண்டது.
பீகார் மாநிலத்தில் மட்டும்தான் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சியுடனும் கூட்டணி என்று காங்கிரஸ் முழங்கியது. ஆனால் அவ்விரு கட்சிகளும் தங்களுக்குள் பேசி கூட்டணி அமைத்துக் கொண்டு, மொத்தம் உள்ள 40 இடங்களில் 37 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்தன. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 3 இடங்களை மட்டுமே ஒதுக்கின.

கோபத்தால் கண் சிவந்த காங்கிரஸ் கட்சி, பீகாரி்ல் 37 இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்து. அது மட்டுமின்றி, ஜார்க்கண்டில் செல்வாக்குப் பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சியுடன் கூட்டணி போட்டிக்கொண்டு லாலு பிரசாத்திற்கு பதிலடி கொடுக்க முற்பட்டது. அந்த கூட்டணி அறிவிப்பு ஒரு நாள் கூட நிற்கவில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரின் மகன் கூட்டணி அறிவிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

80 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள காங்கிரஸ் பேசியது. அதிகபட்சமாக 14 தொகுதிகள்தான் தர முடியும், வேண்டுமென்றால் எடுத்துக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்றது சமாஜ்வாடி. 25 தொகுதிகள் கேட்டு கிடைக்காமல் தனித்துப் போட்டி என்று அறிவித்தது காங்கிரஸ்.பீகாரிலும், உ.பி.யிலும் உள்ள 120 தொகுதிகளில் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி வாய்ப்பு என்ற நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, பலம் வாய்ந்த மூன்று மாநிலக் கட்சிகளின் துணையை இழந்ததால் வெற்றி வாய்ப்பற்று நிற்கிறது

காங்கிரஸிற்கு மட்டுமல்ல, மற்றொரு அகில இந்தியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் மாநிலக் கட்சிகளிடமிருந்து இதே ‘மரியாதை’தான் கிடைத்துள்ளது.ஒரிசா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுக் காலமாக பலமான கூட்டணியைக் கொண்டிருந்த பிஜூ ஜனதா தள கட்சியுடனான உறவு ஓரே நாளில் முறிந்ததில் அக்கட்சி அதிர்ச்சியடைந்தது. 21 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒரிசாவில் பலமான துணையாக இருந்த பிஜூ ஜனதா தள கட்சியுடன் இருந்த உறவு அற்றுப் போனதில் வெற்றி வாய்ப்பு சற்றும் இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

பாரதிய ஜனதா உறவு அறுந்த அடுத்த கனமே பிஜூ ஜனதா தளக் கட்சியை ‘மதச் சார்ப்பற்ற’ ஞானஸ்தானம் செய்து மூன்றாவது அணிக்கு இழுத்துக் கொண்டது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தும் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள சில சிறிய கட்சிகளைக் கூட வளைத்துப் போட முடியாத நிலையில் உள்ளது. சொந்த பலத்தை நம்பி தனித்து குதிக்கிறது தேர்தல் கடலில். இதே நிலைதான் பாரதிய ஜனதா கட்சிக்கும்.

2004ஆம் ஆண்டுத் தேர்தல் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளையும், தனி மாநிலம் கோரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியையும் இணைத்துக் கொண்டு பலமான கூட்டணி அமைத்துக்கொண்டு பாஜக பெட்டியை கழட்டிவிட்டது. நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யமும் சுழன்றடித்து பிரச்சாரம் செய்ய திக்குத் தெரியாத காட்டில் சிக்கிய குழைந்தை கதையாக தனித்து விடப்பட்டுள்ளது 6 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட தேசக் கட்சி.

1998,1999, 2004ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலமான மாநிலக் கட்சிகளான தி.மு.க.வுடனும், அ.இ.அ.தி.மு.க.வுடனும் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி, இம்முறை நேரடி சந்திப்பு, ரகசிய சந்திப்பு என்று எப்படியெல்லாமோ முயன்றும் பெரிய கட்சிகள் வராததால், முதலில் விஜயகாந்தை முயற்சித்தது, பிறகு சரத் குமாருடன் பேச்சு நடத்தி உடன்பாடு கண்டு தனித்து நிற்கும் நிலையை தவிர்த்துள்ளது.
அதிக தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலங்களில் மராட்டியத்தில் மட்டும்தான் காங்கிரஸும், பா.ஜ.க.வும் தங்களுடைய பழைய கூட்டணிக் கட்சிகளுடன் உறவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி, அசோம் கன பரிஷத் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இதைத்தவிர, தங்களுக்கு தனித்த பலம் இருக்கும் மாநிலங்களில் இக்கட்சிகள் இரண்டும் தனித்துதான் போட்டியிடுகின்றன. உதாரணத்திற்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா ஆகியன. கேரளத்தில் எப்போதும் இரண்டு அணிகள் மட்டுமே போட்டியிடும், இப்போதும் அதே நிலைதான். அங்கு எப்போதும் போல பாரதிய ஜனதா தனித்தே நிற்கிறது.
தேசக் கட்சிகளுக்கு ஏன் இந்த நிலை?
இப்படி இந்தியாவின் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் தேசக் கட்சிகளான காங்கிரஸையும், பாரதிய ஜனதாவையும் புறக்கணிக்கக் காரணமென்ன?
2004ஆம் ஆண்டில் நடைபெற்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ‘இந்தியா மிளிர்கிறது’ என்று முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தது. அதன் 6 ஆண்டுக் கால ஆட்சியில் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும், தொழில் வளர்ச்சியிலும் எட்டிய சாதனைகளை முன்வைத்து அந்த முழக்கத்தை வைத்தது தேச ஜனநாயகக் கூட்டணி. அதனை மக்கள் ஏற்கவில்லை. சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், பொதுவான மேம்பாட்டை ஒரு முழக்கமாக முன்வைத்ததை மக்கள் நிராகரித்தார்கள். விளைவு, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை இழந்தது.
5 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பின்னர் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி (ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற பல மாநிலக் கட்சிகள் வெளியேறிவிட்டதால் ஒரு கூட்டணியாக காங்கிரஸ் தேர்தலை சந்திப்பதாக கருதுவதற்கில்லை) தனது சாதனையாக கடந்த ஆண்டுவரை எதையெல்லாம் கூறிவந்ததோ - பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி வளர்ச்சி, அன்னிய முதலீடு வருகை, உற்பத்திப் பெருக்கம் ஆகிய அனைத்தும் 2008ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவால் தலைகீழாக மாறியது. பொருளாதார வளர்ச்சி சரியத் தொடங்கியது, ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து வருகிறது, தொழிலக உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகியுள்ளதால் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது, அயல் நாடுகளில் பணியாற்றி வந்த இந்தியர்கள் வேலையிழந்து நாடு திரும்பும் நிலை, விவசாய கடன் தள்ளுபடி செய்தும் இந்த நிலையாண்டிலும் 14,000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளது என்ற சற்றும் எதிர்பாராத ஒரு சூழலில் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை சந்திக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் தங்களுடைய ஆட்சியின் திறமையால்தான் என்று அக்கட்சி கூறிவந்தது. ஆனால் உலகளாவிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையும், ஏற்றுமதி சரிவும் அதன் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பும் அதன் சாதனைகள் அல்லது காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பதெல்லாம் உலகளாவிய பொருளாதாரத்தோடு நமது பொருளாதாரமும் பின்னியிருந்ததன் விளைவுதான் என்பதையும், உலக அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட போது அது நம்மை பாதித்ததிலிருந்தே உறுதியானது. ஆக, தங்களுடைய சாதனை இதுவென்று கூறுவதற்கு காங்கிரஸிடம் ஏதுமில்லை.
நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பும் மும்பை பயங்கரவாத தாக்குதலினால் கேள்விக்குறியதாகியுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் நாங்கள் ஒரளவிற்கு வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூற முடியாத நிலை காங்கிரஸிற்கு. இந்த பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் பா.ஜ.க.வும் உள்ளது. மும்பைத் தாக்குதலை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திக்கொள்ள அக்கட்சி மேற்கொண்ட முயற்சி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதற்கு எந்தப் பயனையும் தரவில்லை.
எங்களின் சாதனை இது என்று கூறி மீண்டும் வெற்றியைத் தாருங்கள் என்று கேட்க காங்கிரஸ் கட்சிக்கு ஏதுமில்லை. அதே நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை சாதிப்போம் என்று கூறுவதற்குக் கூட முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதுமில்லை என்ற நிலை. ஆக நமது நாட்டின் இரண்டு பெரும் தேசக் கட்சிகள் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மாநிலக் கட்சிகளை தங்களை நோக்கி ஈர்க்கும் அல்லது இழுக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை உறுதியாக பெற்றிருக்கவில்லை என்பதே இன்றைய யதார்த்தமாகும்.
நிலையான ஆட்சி தர எங்களை ஆதரியுங்கள் என்று கூட இவ்விரு கட்சிகளும் கூற முடியாது. காரணம் இரண்டு கட்சிகளுமே சிறுபான்மை எண்ணிக்கையில் இருந்தாலும் மற்ற கட்சிகளி‌ன் ஆதரவினால் கடந்த 11 ஆண்டுகளில் சிக்கலின்றி ஆட்சி செய்தன (அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட சவாலைத் தவிர எந்த அச்சுறுத்தலையும் மன்மோகன் அரசு எதிர்கொள்ளவில்லை). எனவே நிலையான ஆட்சி என்று கூறி வாக்கு கேட்கும் சூழலும் இல்லை.
ஆக, நமது நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுக்கு உள்ள மக்கள் செல்வாக்கே இந்தத் தேர்தலி‌ன் முடிவில் அமையவுள்ள ஆட்சியை தீர்மானிக்கும் நிலை உள்ளது.
ஆட்சியில் உள்ள மாநிலக் கட்சிகளும் மக்கள் செல்வாக்கை உறுதியாகப் பெற்றுள்ளனவா என்று பார்த்தால் அதுவும் பெரும்பான்மை மாநிலங்களில் இல்லை என்றே கூறலாம். உதாரணத்திற்கு கேரளா (இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையிலான அடிதடி, மார்க்ஸிஸ்ட் கட்சிக்குள்ளேயே அதிகார போட்டி), ஆந்திரா (ஆட்சிக்கு எதிரான மக்கள் மன நிலை), தமிழ்நாடு (இலங்கைப் பிரச்சனையில் மக்களின் கோபம்), மராட்டியம் (மும்பைத் தாக்குதல், விவசாயிகள் தற்கொலை, வேலையிழப்பு), மேற்கு வங்காளம் (நந்திகிராம் துப்பாக்கிச் சூடு), ஜார்க்கண்‌ட் (அரசியல் தடுமாற்றங்கள்), ஒரிசா (மதக் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் எதிர்ப்பு) உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மன நிலை தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடியவை.
ஆக, தேசக் கட்சிகள் ஆனாலும் மாநிலக் கட்சிகள் ஆனாலும் எந்தவொரு கட்சியும் வலிமையான நிலையில் இல்லாத ஒரு அரசியல் சூழல்தான் எங்கும் நிலவுகிறது (டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் விதிவிலக்கு). இப்படிப்பட்ட அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கு என்ன அடிப்படையில் வாக்களிப்பது என்று மக்களிடையேயும் ஒரு குழப்பம் நிலவுகிறது.
நமது நாட்டில் நடைபெற்ற தேர்தல்களை நன்கு ஆய்ந்து பார்த்தால் ஒவ்வொரு தேர்தலின் முடிவையும் நிர்ணயித்த ஒரு பிரச்சனையை அடையாளம் காண முடியும். பிரச்சனை ஏதும் இல்லாத சூழலில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்த நிலையும் உண்டு.
ஆனால் இம்முறை ஆட்சிக்கு ஆதரவான பிரச்சனை அல்லது சாதனை என்று ஏதுமில்லை. அதே நேரத்தில் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க மக்கள் நினைத்தாலும் மாற்றுச் சக்திக்கு சாதகமான அரசியல் சூழல் இல்லை.
பார்த்துப் பார்த்து சலித்துவிட்ட கட்சிகளுக்குத்தான் மீண்டும் வாக்களிக்க வேண்டுமோ என்ற நிலைதான் மக்களிடையே உள்ளது. இந்த நிலையில் இந்தத் தேர்தலின் முடிவு இதுவரை நமது நாடு கண்டிராத ஒரு திருப்பத்தை (அது பார்பதற்கு பலவீனமானதாக தெரிந்தாலும்) ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். அது நமது நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உகந்த ஒரு ஆட்சியைத் தருவதாகக் கூட அமையலாம். முடிவு வரை பொறுத்திருப்போம்.
- web duniya















கூகிள் (Google) உருவான கதை....

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.
இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.
லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)
நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?



கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!
கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.










கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.
கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)
கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.
கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.
கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்
பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.
இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.
அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.
ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.
சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.
கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

எழுதியவர் : கார்த்திக்

கண்களை நம்பாதீர்கள்....