திருக்குறள்

அரசியலில் சாதி (தீ)

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் முதன்மையாகத் திகழ்வது அவர்கள் சார்ந்திருக்கும் “சாதி”

தற்போது நாட்டில் மொத்தம் 4650 சாதிகள் உள்ளதாக அண்மையில் நடந்த மானிடவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெருன்பான்மையான வாக்காளர்கள் என்றால், அந்தச் சாதியைச் சார்ந்தவர்கள் தான் அந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று நம்பப் படுகிறது.

மக்கள் சாதியையும் , தன் கட்சியையும் பார்த்து வாக்களிக்கிறார்கள் அதே சமயத்தில் தன் கட்சிக் காரன் தன் சாதியைச் சேர்ந்தவனா என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மக்களின் இந்த எண்ணத்தை புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் சாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகின்றன. “ எங்களுக்கு எல்லாச் சாதியும் ஒன்றுதான்” என்று அறிவித்து வெற்றியை இழக்க அல்லது சோதனைச் செய்து பார்க்க கட்சிகள் தயாராக இல்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தத் தொகுதியிலும் தனிப்பட்ட சாதியினர் 65 சதவீதத்துக்கு மேல் இல்லை என்பது தற்போது வந்துள்ள கணக்கெடுப்புகளின் தெரிய வந்துள்ளது. இந் நிலையில் பெரும்பான்மை சாதியில் இருந்து பல வேட்பாளர்கள் போட்டியிடும் போது சாதிக்காகவே விழும் வாக்குகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள். அதனால் பிற சாதிகளின் வாக்குகளை அதிகமாக பெறுகின்ற பெரும்பான்மைச் சாதியின் வேட்பாளர் வெற்றி பெற முடிகிறது. சாதியோடு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி, வேட்பாளரின் தனிப்பட்டச் செல்வாக்கு ஆகியவையும் காரணமாக அமைகின்றன.

ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் சாதி இயக்கங்கள் மிகவும் வலிமை பெற்று கட்சியாக காட்சியளிக்கும் போது அந்த இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர், அல்லது கணிசமான அளவு வாக்குகளை பெறுகின்றனர்.

இந்த விசயத்தில் முற்றிலுமாக ஒத்துப் போவது வன்னியர் சங்கத்தில் இருந்து உருவான “பாட்டாளி மக்கள் கட்சி”. அதே போல் தலித் மக்களை முன்னிலைப்படுத்தி ஏராளமான அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அவை பெரும் கட்சியாக உருவெடுத்ததில்லை. டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையிலான தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு “புதிய தமிழகம்” என்ற கட்சியாகவும், திருமாவளவின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு என்று சில கட்சிகளே தலித்களின் வாய்ப்புகளாக உள்ளது. இயக்க ரீதியாக தலித்துக்கள் அணி திரளும் போது அவர்களுடைய வாக்குகளை பிற கட்சியினர் அவ்வளவு எளிதாக பெற முடிவதில்லை.

‘கவுண்டர் ஓட்டு கவுண்டருக்கே” என்ற முழக்கத்தோடு தற்போது கொங்கு மண்டலத்தில் களமிறங்கி இருக்கும் – கொங்கு முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் இருந்து அரசியல் கட்சியாக புறப்பட்டிருக்கும் “மனித நேய மக்கள் கட்சி”, முக்குலத்தோர் ஓட்டுகளை மட்டுமே நம்பி கட்சி நடத்தும் கார்திக், யாதவர்கள் ஒட்டு எப்போதும் எனக்குத்தான் என்று சொல்லியே அரசியலில் அடிக்கடி அணி மாறும் கண்ணப்பன், என்று தமிழக அரசியலில் சாதி தன் பங்களிப்பச் சரி வரச் செய்கிறது

1967 ல் உணவுப் பிரச்சினை,
1971ல் வறுமையை ஒழிப்போம் என்ற இந்திராவின் கோஷம்,
1977 ல் அவசர நில எதிர்ப்பு,
1984ல் இந்திரா கொலை,
1989ல் போஃபர்ஸ் ஊழல் பிரச்சினை,
1991ல் ராஜீவ் படு கொலை...

என்ற இந்திய அளவில், மாநில அளவில் சில பொதுப் பிரச்சினைகள் தேர்தலில் இடம் பெறும் போது மட்டுமே, சாதி தன் பங்களிப்பை செய்ய இயலாமல் போனது.

எஸ். அன்பு.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற