திருக்குறள்

காட்டு கருவேல மரத்தினால் உண்டாகும் அபாயம்




உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே
! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்:இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமைநமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வுநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.



நல்ல மரம் ஆரோக்கியம்வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக சொல்லுங்கள்.
இந்த மரத்தை வெட்டி .....! நம் மண்ணின் தங்கள் காப்போம்..!!

Source - Iniyam

மின் தடை. உண்மை நிலை?

தினசரி 8 மணிநேரம், 10 மணி நேரம் மின்வெட்டால் தமிழகம் கதிகலங்கி நிற்கிறது. திடீரென இவ்வளவு மின்வெட்டு ஏன் என எல்லோரும் கேட்கிறார்கள்.


உண்மை நிலவரத்தை அரசு சொல்வதில்லை. சொன்னால் அர சின் ‘ஓரவஞ்சகம்’ மக்களுக்குப் புரிந்து விடும் என்பதால் மூடி மறைக்கிறது. 
பிப். 16ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதற்குமான மின் தேவை 11,522 மெகாவாட். உற்பத்தி 8,792 மெகாவாட். ஏறத்தாழ 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது (மின் உற்பத்தி நிலவரம் பட்டியலில் உள்ளது). அப்படியா னால், மொட்டையாகக் கணக்குப் போட்டாலும் சராசரி 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே எல் லோருக்கும் (பெரும் தொழிற் சாலைகள் உட்பட) மின்வெட்டு இருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மணிநேரமும் பிற மாவட்டங்களில் 8 மணி முதல் 11 மணிநேரமும் மின்வெட்டு அநியாயம் ஏன்?
சிறு மற்றும் குறுந்தொழில், பஞ்சாலை முத லாளிகள் ஒரு விளம் பரத்தை அளித்துள்ளனர்.

அவர்கள் அதில் நியாயமான சில கேள்விகள் எழுப்பி உள்ளனர்.


“தமிழகத்தின் உயர்மின் அழுத்த மின்சாரப் பயன்பாடு 3800 மெகாவாட் ஆக இருந்தபோதி லும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு, சிமெண்ட் தொழிற்சாலைகள், இரும்பு தொழிற்சாலைகள், மாவு அரைக்கும் ஆலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தொழிற்சாலைகளுக்கு உண் டான பயன்பாடு 1800 மெகாவாட் ஆக உள்ளது. இவர்கள் தங் களுடைய பலத்தினை அரசாங் கத்திடம் காண்பித்து, இந்த மின்சார வெட்டிலிருந்து விலக்கு பெற்றதன் காரணமாக இவர்க ளின் சுமை தென் மற்றும் மேற்கு தமிழகத்திலுள்ள சிறு, குறு மற்றும் இதரத்தொழில்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதி விலக்கு பெற்ற பெரிய தொழிற் சாலைகள் அவர்களுக்கென்று உள்ள தனிப்பட்ட மின்கடத்தி யினை (னுநுனுஐஊஹகூநுனு குநுநுனுநுசு) பயன்படுத்தி அவர்கள் தங்க ளுக்கு தேவையான மின்சாரத்தை வெளியிலிருந்து பெற்று பயன் பெற வாய்ப்பு இருந்தும் அரசாங் கத்திடமிருந்து தங்களது செல் வாக்கால் குறைந்த செலவில் தடையில்லா மின்சாரம் பெற்று வருகிறார்கள். இந்த நிலை நியாயமா? ”

இப்போது நமது கேள்வியும் அதுதான்.

முதலாவதாக, வெளியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வசதி வாய்ப்பிருக்கிற பன்னாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் முதலாளிகளுக்கு 1800 மெகாவாட் தடையில்லா மின் சாரம் வழங்கவேண்டுமா? அவர் களுக்கும் எல்லோரையும் போல் சம அளவு மின்வெட்டு அமல் படுத்த எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


இரண்டாவதாக, 3600 மெகா வாட் மின்சாரத்தை தினசரி உற் பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் தமிழக தொழிற்சாலை முதலாளிக ளிடம் உண்டு. அவற்றை இயக்கச் செய்வதில் தமிழக அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை? டீசலுக்கு மானியமோ அல்லது குறைந்த விலையில் டீசலோ வழங்க தமி ழக அரசு முயற்சித்தால் கணிச மான அளவு மின் வெட்டை இதன் மூலம் ஈடு செய்ய முடியும் அல் லவா? இதை செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்தி ருக்கும் ரகசியம் என்ன?

வடசென்னை, மேட்டூர், தூத் துக்குடி, நெய்வேலி மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீர்செய்ய தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? தானே புயலை விட வேகமாக செயல்பட்டதாக சட்டமன்றத் தில் சவால் விட்டு பேசிய முதல் வர், இந்த விஷயத்தில் குறட்டை விடுவது ஏன்? எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?

25 விழுக்காடு மின் உற்பத்தி பாதிப்பை ஈடு செய்ய வழியும் வாசலும் மேலே சொல்லப்பட் டுள்ளது. இவற்றை உடனடியாக செய்தால் சொற்ப அளவு மின் வெட்டோடு தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடுமே! இதைச் செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


மின்வெட்டால் யார்யாரெல் லாம் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்களுக்கு வந்த சோதனை தான் கொடுமையானது. ‘சமச்சீர் கல்வியில்’ முதல்வர் ஜெயலலிதா அர்த்தமற்ற வீம்புகாட்டியதால் கிட்டத்தட்ட 2 மாதம் மாணவர் கள் படிப்பு பாழானது. இப்போது தேர்வு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி மீண்டும் மாணவர்களை பழிவாங்குவது நியாயமா? அது மட்டுமல்ல. வேலைக்கு மற்றும் சில தேவைகளுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்கச் சொல்கிறார்கள். அவர்கள் மின்சாரம் இல்லாத தால் பெரும் பாதிப்புக்குள்ளா கிறார்கள். பலருக்கு பதிவுமூப்பு கூட பறிபோகிறது. இப்படி சொல் லிக்கொண்டே போகலாம்.

நிர்வாகப் புலி என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் முதல்வர்; சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்களையும் லாரி லாரி யாக மிக்ஸி, கிரைண்டர்களையும் அனுப்பும் முதல்வர் மின்வெட் டால் மக்களின் துயர் களைய எப்போது விழிப்பார்?
- மின் பாலு < source - suran >

ஸ்பெக்ட்ரம் - தேசம் சேமித்த பல லட்சம் கோடி


ஸ்பெக்ட்ரம் - தேசம் சேமித்த பல லட்சம் கோடி
ஸ்பெக்ட்ரம்... கடந்த ஓராண்டாக இந்தியர்கள் இறைவனின் திருநாமத்தைவிட அதிகம் உச்சரித்த பெயர். சில பல வணிக விளையாட்டுகள்,சில பல சதிகள், சில பல அரசியல் சடுகுடுகள், அரசிற்கும்,நீதித்துறைக்குமான "தான் யார் என்ற அகங்காரங்கள்" இவற்றோடு மக்களிடையே மண்டையைக் குழப்பவைத்த மீடியாக்கள் என்று ஓராட்டம் ஆடி இப்போது இரண்டாம் சுற்றில் நிற்கிறது. என்னதான் நடந்தது இதில்? எதுதான் உண்மை?

ஸ்பெக்ட்ரம் என்பது அதிர்வெண்.அதாவது மெஹாஹெர்ட்ஸ்னு சொல்றோம் இல்லையா அதுதான். நாட்டில் உள்ள தாதுக்கள்,கனிமங்கள் போல இதுவும் ஒரு வளம். சரி இது எதுக்கு அரசாங்கத்துகிட்ட இருக்கணும்? விசயம் சிம்பிள்.. இதை அரசாங்கம் ஒழுங்கு செய்யாம ஆளுக்காள் ஒரே அலைவரிசையில் செயல்படுத்த ஆரமிச்சா தகவல் தொடர்பில் குழப்பம் வரும். சரி 2ஜி அப்படின்னா என்ன? இதுக்கு முன்னாடி 1ஜி இருந்ததால இது 2ஜி. ஆஹா.. அப்ப 1ஜி அப்படின்னா என்ன? முதன்முதலில் செல்பேசி சேவை அனலாக் முறையில் இயங்கியது. தாத்தா காலத்து டெக்னாலஜி. அதுல நீங்க பேசுனா நான் கேக்கலாம், நான் பேசுனா நீங்க கேக்கலாம்.இதைத்தாண்டி ஒரு வசதியும் கிடையாது. அதுவும்கூட அத்தனை துல்லியமாக சில நேரம் இருக்காது.

அடுத்து வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். இதுதான் 2ஜி. இது gsm மற்றும் cட்ம அப்படின்னு ரெண்டு வழில இயங்குது. இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் வேலை செய்யும். ஒவ்வோரு நாட்டுலயும் வேறவேற‌ அதிர்வெண்ல‌ இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.

1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குறதுன்னா என்ன? இந்த‌ அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். செல்பேசிச் சேவைக்கு அதை நடத்தும் ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம்.இது இவர்கள் தங்கள் செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது அப்லிங் மற்றும் டவுன்லிங். இதுக்காக தகவல் தொடர்பு அமைச்சகம் 75 மெகாஹெர்ட்ஸ் அப்லிங்கிற்கும் 75 மெஹா ஹெர்ட்ஸ் டவுன்லிங்கிற்கும் தருகிறது. அதாவது மொத்தம் 150 மெஹா ஹர்ட்ஸ். இந்த 150 மெஹா ஹர்ட்ஸ்குள்ள அமைச்சகம் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரக்கூடாது என்பது சட்டம். ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும். 900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.

சரியா! இப்போ இருக்குற மெகாஹர்ட்ஸைத் தாண்டி அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது அரசு என்ன செய்யும்? சிம்பிள் ஏலம்விடும். ஏன் ஏலம் விடணும்? அப்பதான் யார் அதிகம் கேக்குறாங்களோ அவங்களுக்கு குடுக்கலாம். அரசுக்கும் அதிக பணம் கிடைக்கும். ஆ.ராசா என்ன செஞ்சாரு? ஏலம் விடாம அமைச்சகமே ஒருவிலையை நிர்ணயித்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கினார். இதுனால என்னாச்சு? என்னாச்சா... எவ்வளவு பெரிய துரோகம் இது!! ஏலம் விட்டுருந்தா 1,76,000 கோடிக்கு போயிருக்கும். ஆனா இந்தாளு முன்னுரிமையில் குடுத்தால வெறும் 30,984.55 கோடிதான் அரசுக்கு வந்துச்சு. எவ்வளவு பெரிய பச்சை துரோகம் இந்தாள் செஞ்சது!! இல்லையா? இப்படித்தான் படிச்சதும் தோணும். கொஞ்சம் அதன் மறுபுறத்தையும் பார்ப்போமா?

ஏன் ராஜா இப்படிச் செஞ்சாரு? முதன்முதலில் 1997 இல் சென்னையில் ஸ்கைசெல் நிறுவனத்தின் செல்பேசி உபயோகித்தவர்களுக்குத் தெரியும். அவுட் கோயிங் ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய், இன்கம்மிங் 15 ரூபாய். 20 ரூபாய் என்பது அன்று ஒரு தினக் கூலிக்காரரின் ஒருநாள் சம்பளம். ஏன் அவ்வளவு விலை?? காரணம் அன்று அலைக்கற்றை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ததால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மிக அதிகவிலை குடுத்து அந்த உரிமையை வாங்கியது, வாங்கிய தொகையை யார் தலையில் கட்டும்? பயனாளர் தலையில் கட்டும். அதனால்தான் அந்த ரேட்.

அன்று ஒரு தினக்கூலிக்காரரின் ஒருநாள் சம்பளத்தொகையை ஒரே ஒரு அழைப்பிற்காக செலவு செய்த நிலைபோய் இன்று ஒரு தினக்கூலிக்காரர் தான் எங்கே வேலைக்கு வரவேன்டும் என்பதை தன்னுடைய செல்பேசியில் கேட்டு தெரிந்துகொண்டு வரும் நிலைக்கு மலிவாகிவிட்டது தகவல்தொடர்பு. எப்படி? காரணம் அதே ஆ.ராசா. ஏலமுறையில் விலை ஏற்றிக் குடுக்காமல் நிர்ணய விலையில் அலைக்கற்றைகளை வழங்கியதால் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு கிடைத்தது. அதனால் அதிக விலை வைக்காமல் 50 பைசா என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் அழைப்பினை நிறுவனங்கள் வழங்குகிறது.

சரி சார், குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்? ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க‌.

நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது. நாளை நீங்கள் என்னைப் பார்க்க வடபழனியில் இருந்து என் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டை வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வந்து பார்த்த பின்னர் வீட்டில் என் மனைவி சொல்லித்தான் நான் இல்லை என்பதே உங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வர 15 கிலோமீட்டர் போக 15 கிலோமீட்டர் என 30 கிமீக்கு குறைந்தது அரைலிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கும். குறைந்தது 33 ரூபாய் உங்களுக்கு இழப்பு. உங்களுக்கு என்றால் உங்களுடைய இழப்பு அல்ல, எரிபொருள் என்ற அளவில் இது தேசத்தின் இழப்பு. இந்த 33 ரூபாயில் வரிக்கு முந்தைய அடக்கவிலையான குறைந்தது 15 ரூபாய் அன்னிய செலாவனியாக அரபு நாடுகளுக்குப் போய்விடும். நம் இருவரைப்போல நாட்டில் எத்தனை கோடி பேர்? எத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் மிச்சம்? இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல பல உதாரணங்களை தகவல் தொடர்பு மலிவினால் தேசத்திற்கு கிடைத்த சேமிப்பை என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும். ஆம் ஆ.ராசா 1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் கணக்கிட முடியாத லட்சம்கோடியை இந்த தேசத்திற்கு சேமித்துள்ளார். காமாலைக்கரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். பலருக்கும் அவர் ஏற்படுத்திய இழப்பு தெரிகிறது, எனக்கு அதனால் விளைந்த சேமிப்பு தெரிகிறது. ஒரு அமைச்சராக குப்பனையும்,சுப்பனையும் செல்பேச வைத்ததோடு இந்த தேசத்திற்கும் பலபலபல இலட்சம் கோடிகளை சேமித்துத்தந்த அமைச்சர் ஆ.ராசாவிற்கு என் வந்தனங்கள்.

- நன்றி கவிஞர் புதுகை எம்.எம்.அப்துல்லா

தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் ??


தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.

ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.

அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.

இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.

எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளா

உலகம் உன் காலடியில்

சிமிண்டு இல்லையே என
சிற்றெறும்புகள் ஓயவெடுக்காது
சீராக புற்றை
சிறப்புடனே கட்டிவிடும்.....
உழைப்பு என்பது
உன்னிடம் இருக்கு....
உடனே செயல் படு
உலகம் உன் காலடியில்