திருக்குறள்

மின் தடை. உண்மை நிலை?

தினசரி 8 மணிநேரம், 10 மணி நேரம் மின்வெட்டால் தமிழகம் கதிகலங்கி நிற்கிறது. திடீரென இவ்வளவு மின்வெட்டு ஏன் என எல்லோரும் கேட்கிறார்கள்.


உண்மை நிலவரத்தை அரசு சொல்வதில்லை. சொன்னால் அர சின் ‘ஓரவஞ்சகம்’ மக்களுக்குப் புரிந்து விடும் என்பதால் மூடி மறைக்கிறது. 
பிப். 16ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதற்குமான மின் தேவை 11,522 மெகாவாட். உற்பத்தி 8,792 மெகாவாட். ஏறத்தாழ 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது (மின் உற்பத்தி நிலவரம் பட்டியலில் உள்ளது). அப்படியா னால், மொட்டையாகக் கணக்குப் போட்டாலும் சராசரி 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே எல் லோருக்கும் (பெரும் தொழிற் சாலைகள் உட்பட) மின்வெட்டு இருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மணிநேரமும் பிற மாவட்டங்களில் 8 மணி முதல் 11 மணிநேரமும் மின்வெட்டு அநியாயம் ஏன்?
சிறு மற்றும் குறுந்தொழில், பஞ்சாலை முத லாளிகள் ஒரு விளம் பரத்தை அளித்துள்ளனர்.

அவர்கள் அதில் நியாயமான சில கேள்விகள் எழுப்பி உள்ளனர்.


“தமிழகத்தின் உயர்மின் அழுத்த மின்சாரப் பயன்பாடு 3800 மெகாவாட் ஆக இருந்தபோதி லும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு, சிமெண்ட் தொழிற்சாலைகள், இரும்பு தொழிற்சாலைகள், மாவு அரைக்கும் ஆலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தொழிற்சாலைகளுக்கு உண் டான பயன்பாடு 1800 மெகாவாட் ஆக உள்ளது. இவர்கள் தங் களுடைய பலத்தினை அரசாங் கத்திடம் காண்பித்து, இந்த மின்சார வெட்டிலிருந்து விலக்கு பெற்றதன் காரணமாக இவர்க ளின் சுமை தென் மற்றும் மேற்கு தமிழகத்திலுள்ள சிறு, குறு மற்றும் இதரத்தொழில்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதி விலக்கு பெற்ற பெரிய தொழிற் சாலைகள் அவர்களுக்கென்று உள்ள தனிப்பட்ட மின்கடத்தி யினை (னுநுனுஐஊஹகூநுனு குநுநுனுநுசு) பயன்படுத்தி அவர்கள் தங்க ளுக்கு தேவையான மின்சாரத்தை வெளியிலிருந்து பெற்று பயன் பெற வாய்ப்பு இருந்தும் அரசாங் கத்திடமிருந்து தங்களது செல் வாக்கால் குறைந்த செலவில் தடையில்லா மின்சாரம் பெற்று வருகிறார்கள். இந்த நிலை நியாயமா? ”

இப்போது நமது கேள்வியும் அதுதான்.

முதலாவதாக, வெளியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வசதி வாய்ப்பிருக்கிற பன்னாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் முதலாளிகளுக்கு 1800 மெகாவாட் தடையில்லா மின் சாரம் வழங்கவேண்டுமா? அவர் களுக்கும் எல்லோரையும் போல் சம அளவு மின்வெட்டு அமல் படுத்த எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


இரண்டாவதாக, 3600 மெகா வாட் மின்சாரத்தை தினசரி உற் பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் தமிழக தொழிற்சாலை முதலாளிக ளிடம் உண்டு. அவற்றை இயக்கச் செய்வதில் தமிழக அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை? டீசலுக்கு மானியமோ அல்லது குறைந்த விலையில் டீசலோ வழங்க தமி ழக அரசு முயற்சித்தால் கணிச மான அளவு மின் வெட்டை இதன் மூலம் ஈடு செய்ய முடியும் அல் லவா? இதை செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்தி ருக்கும் ரகசியம் என்ன?

வடசென்னை, மேட்டூர், தூத் துக்குடி, நெய்வேலி மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீர்செய்ய தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? தானே புயலை விட வேகமாக செயல்பட்டதாக சட்டமன்றத் தில் சவால் விட்டு பேசிய முதல் வர், இந்த விஷயத்தில் குறட்டை விடுவது ஏன்? எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?

25 விழுக்காடு மின் உற்பத்தி பாதிப்பை ஈடு செய்ய வழியும் வாசலும் மேலே சொல்லப்பட் டுள்ளது. இவற்றை உடனடியாக செய்தால் சொற்ப அளவு மின் வெட்டோடு தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடுமே! இதைச் செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


மின்வெட்டால் யார்யாரெல் லாம் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்களுக்கு வந்த சோதனை தான் கொடுமையானது. ‘சமச்சீர் கல்வியில்’ முதல்வர் ஜெயலலிதா அர்த்தமற்ற வீம்புகாட்டியதால் கிட்டத்தட்ட 2 மாதம் மாணவர் கள் படிப்பு பாழானது. இப்போது தேர்வு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி மீண்டும் மாணவர்களை பழிவாங்குவது நியாயமா? அது மட்டுமல்ல. வேலைக்கு மற்றும் சில தேவைகளுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்கச் சொல்கிறார்கள். அவர்கள் மின்சாரம் இல்லாத தால் பெரும் பாதிப்புக்குள்ளா கிறார்கள். பலருக்கு பதிவுமூப்பு கூட பறிபோகிறது. இப்படி சொல் லிக்கொண்டே போகலாம்.

நிர்வாகப் புலி என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் முதல்வர்; சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்களையும் லாரி லாரி யாக மிக்ஸி, கிரைண்டர்களையும் அனுப்பும் முதல்வர் மின்வெட் டால் மக்களின் துயர் களைய எப்போது விழிப்பார்?
- மின் பாலு < source - suran >

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற