அது போல் ஒரு நாள் அவரை பின் தொடர்ந்து பெருந்திரளான மக்கள் வந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட இயேசு அருகிலிருந்த குன்றின் மேல் அமர்ந்துமக்களுக்கு போதனை செய்தார். அதனால் இந்த போதனை மலைமேல் இயேசு செய்த போதனை என அழைக்கப்படுகிறது.
அமர்ந்த இடத்திலிருந்து மக்களை பார்த்தார் இயேசு பிரான். கூடியிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருப்பவர்களும், மனவருத்தம் உடையவர்களாகவும் இருக்க கண்டார் இயேசு.
மனம் வருந்தாதீர்கள். சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்யம்தான்.
தங்களுக்கு ஆறுதல் வேண்டும் என கேட்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும்.
தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவனின் புதல்வர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
என் பொருட்டு துன்பப்படுகிறவர்கள் அதற்கான பரிசாக சொர்க்கத்தை அடைவார்கள்.
ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார். உங்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம்.ஆண்டவர் அந்த பொறுப்பேற்பார் என்று கூறி எவ்வாறு பிரார்த்தனை செய்வது எனவும் கூறினார்.
மற்றவர்கள் நீங்கள் பிரார்த்தனை செய்வதை காண வேண்டும் என பொது இடங்களில் பிரார்தனை செய்யாதீர்கள். தனி அறைக்கு சென்று பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவை பிரார்த்தியுங்கள்.
உங்களைப்பற்றி அறிந்த தந்தை உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார் அதை அவர்அருள்வார் என கூறினார்.
- நன்றி தட்ஸ் தமிழ்