20-ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை வரலாற்றில் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்தியப் பெருமை பாரதியையும், பாரதிதாசனையும் சேரும். தமிழ்த் தேசிய இனத்தின் தன்னிகரற்ற பாவலராகிய புரட்சிக் கவிஞரைக் குறுகிய மனப்பான்மை உடையவர், குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர், அவர்க்கு ஊர்ப்பார்வை உண்டே தவிர உலகப்பார்வை இல்லை என்று குறைத்துப் பேசும் ஆராய்ச்சியாளர் உளர். இத்தகைய கருத்துக்களில் இருந்து பாரதிதாசனைப் பிரித்து வேறுபட்ட பார்வையில் இக்கட்டுரையானது ஆராய்கிறது.
ஆசிரியர் குறிப்பு:
பாரதியாரின் சீடரான பாரதிதாசன், தமிழன்னை வியக்கும் வகையில் தமிழைப் பாடியவர். மூடநம்பிக்கையால் முடக்கப்பட்டவர்களை தன்பாட்டுத் திறத்தால் மருத்துவம் செய்து உலா வரச் செய்தவர். 1891 ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி புதன் இரவு புதுச்சேரியில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி அம்மையார். இவரின் இயற்பெயர் கனகசுப்புரெத்தினம். 1895இல் ஆசிரியர் திருப்புளிச்சாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். 1898இல் முதுபெரும் புலவர் பு.அ. பெரியசாமியிடமும், பங்காரபக்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். 1909ல் காரைக்காலில் ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். பல படைப்புகளை வெளியிட்டவர். 21.04.1964இல் இப்புண்ணிய பூமியைவிட்டு பரலோகம் சென்றடைந்தார்.பாரதிதாசனைப் பற்றிய தவறான கருத்துக்கள்:புதுச்சேரியில் தோன்றிய புயலை சிலர் மென்காற்று, வறண்ட மேகம் என்று பாரதியை உயர்த்தியும், தாசனை இகழ்;ந்தும், தாசன் உலக கவிஞரே இல்லை என்ற மாயையைத் தோற்றுவித்தனர். அவர்களில் வ. சுப்பிரமணியம் என்பவர்
"எங்கேயோ (புதிய ருஷ்யா) அடிமைச்சங்கிலி அறுந்ததற்காக இங்கே கவிஞன் குதூகலிக்கவில்லையா? பாரதிதாசனிடம் காணமுடியாத இந்த ~உலகப்பொதுமை அல்லது ~அகிலத்துவம; பாரதியின் தேசியப் பாடல்களில் காணக்கூடிய தனிச்சிறப்பு"என்று தனது 'வாழ்வியல் கவிஞர்கள்' என்னும் நூலில் (ப.41) குறிப்பிட்டுள்ளார். உலகப்பொதுமை அல்லது அகிலத்துவம் என்பதைப் பாரதிதாசனிடம் காணமுடியாது என்பது இவரது கருத்தாக உள்ளது.
பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. சீவானந்தம் அவர்கள்"பொது மக்களின் ப+ர்ணக்குரல் பாரதிதாசனின் பாடல்களில் இன்று கேட்க வேண்டுமென்று வர்க்க உணர்ச்சியும் அரசியல் பேதமும் கொண்ட பொதுமக்களின் சார்பில் வேண்டிக் கொள்கிறேன். ஜார் வீPழ்ச்சியைப் பற்றி பாரதி பாடினான். இட்லர் வீழ்ச்சியைப் (பாசிச வீழ்ச்சியைப் பற்றி) பாரதிதாசன் பாடியிருக்க வேண்டும். பிஜித்தீவு கரும்புத் தோட்டக் கஷ்டத்தைப் பற்றி பாரதி பாடினார். வங்கப் பஞ்சத்தைப் பற்றி பாரதிதாசன் பாடியிருக்க வேண்டும்." என்று குறிப்பிடுவதும் (கவிஞர் மலர் ப.95) ஏறத்தாழ முன்னர் கூறிய கருத்தோடு ஒத்தே அமைந்துள்ளது.ஆய்வாளர்களிடம் பரவலாகக் காணப்படும் இத்தகைய கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை. தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாய் உள்ளத்தோடு பாடியவர் பாரதிதாசன் ஆவார்.
உலகக் கவிஞர்களோடு பாரதிதாசன்:
பாரதிதாசனை உலகக் கவிஞர்கள் பலரோடு ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். குறிப்பாகக் கவிஞர்களுக்குச் சென்னையில் நடந்த நிதியளிப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட கவிஞர் மலர் (28.07.1946) இதற்கு மதிப்பீடுகள் பலவற்றைத் தந்துள்ளது. "மதங்களிலும் பழைய ஆசாரங்களிலும் ஊறிக்கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி, அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன், தமிழ்நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன். இக்கவிஞரைப் பலதுறையிலும் பாராட்ட வேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும்." என்று தமிழ்நாட்டு வால்விட்மன்; என்னுந்தலைப்பில் கவிமணி தேசியவிநாயகம் குறிப்பிட்டுள்ளார். (கவிஞர் மலர் ப.12)
'மாயக்காவ்ஸ்கி' என்னும் தலைப்பில் ஏ.பி. சனார்த்தனம் தம் கட்டுரையில் (ப.83) "மாயக்காவ்ஸ்கி இலக்கியக் கவிதைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. குழந்தைப் பாட்டுக்கள், காதல் கீதங்கள் ஆகியவைகளை இயற்றினார். ஆனால் இயந்திரங்களின் ஓசை, பாட்டாளியின் உழைப்பு, புரட்சியின் வேகம், சமுதாய முன்னேற்றம், எழுச்சி இவைகளுக்குத் தான் அவர் கவிதைகளில் முதலிடம்."
"பாட்டாளியின் பாசறைக்குத் தன் திறமையைக் காணிக்கையாகக் தருகிறவனே கவிஞன் என்பது அவரது முடிந்த முடிவு. இந்நாள் திராவிடத்திலும் ஒரு மாயக்காவ்ஸ்கியைக் காண்கிறோம். அவர்தான் பாரதிதாசன்! புரட்சிக் கவிஞருக்கு இன எழுச்சி, அரசியல், அறிவியல், சமுதாய விடுதலை குறிக்கோள், கவிஞரின் பாக்கள் மக்கள் உரிமைப் போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்தும் தன்மையுடையன." என்று ஒப்பீடு செய்கிறார்.'புரட்சியில்பூக்கும் புது உலகு' என்னும் கட்டுரையில் (ப.37), இரா. நெடுஞ்செழியன், "பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞராக ஆக்கியது அவரது சூழ்நிலையேயாகும். ரஷ்யா ஒரு புஷ்கினையும், ஆங்கில நாடு ஒரு ஷெல்லியையும், பிரான்சு ஒரு ஹ_கோவையும் அமெரிக்கா ஒரு வால்ட்விட்மனையும் கண்டவாறு திராவிடமும் ஒரு பாரதிதாசனைக் கண்டது." என்றும், 'கொலைவாளினை எடடா' என்னும் கட்டுரையில் (ப.48) க. அன்பழகன், "ஆங்கில நாட்டுக் கவிஞர் ஷெல்லியைப் போல,அமெரிக்க நாட்டுக் கவிஞர் வால்ட்விட்மனைப் போலஇஸ்லாமிய இனத்திற்குக் கிடைத்த கவிஞர் இக்பாலைப் போலதிராவிட நாட்டிற்குத் தமிழ் இனத்திற்குக் கிடைத்தஒப்பிலா அறிஞர் புரட்சிக்; கவிஞர் பாரதிதாசன்' என்று போற்றுகிறார்.