கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது
பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!
விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.
அளவுக்கு அதிகமானபணிவை ஒருபோதும் நம்பக் கூடாது!
தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!
உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச்சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொருகாரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும்மூலகாரணமாகவும் இருக்கிறார்.
தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போதுவார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.
கமலக்கண்ணன்
துபாய்