நேற்று
என் தாத்தா - ஆற்றில்
வெள்ளம் கண்டார்..
என் தந்தை - ஓடும் ஆற்றில்
நீரைக் கண்டார்..
இன்று நானோ
விரும்பியும் விரும்பாமலும்
விட்டு வைக்கப் பட்ட
நீர் நிலைகளில் அரசாங்கத்தால்
அமைக்கப்பட்ட குழாயிலும்
ஆழ்துளைக் கிணற்றிலும்
நீரைக் காண்கிறேன்
நாளை என் பிள்ளை
ஆற்றிலா, குளத்திலா, இல்லை
ஆழ்துளைக் கிணற்றிலா
எங்கு, எப்படி, எதில்
காண்பானோ நீரினை...
- சமீனா சேக் அப்துல்லாஹ்
துபாய்.