திருக்குறள்

படித்ததில் பிடித்தது..


சொந்த வீட்டு அகதி


ஒரு ஆத்மார்த்த தீண்டலுக்காய்

வருடக் கணக்கில் தவம்

கலைக்கப்பட்டதேயில்லை அது

என்றுமேயாராலும்..

அறை நிரப்பும் வெப்பக்காற்றை

அவளோடு சேர்ந்து சுவாசித்தறியும்கட்டில் கம்பிகள்

ஜன்னலின் வழியே அவ்வப்போது

தெரியும்சின்னஞ்சிறு உலகம்

கனவில் மட்டுமே கரம் தொடும் மகன்

ஒளிந்து நின்று எட்டிப் பார்க்கும்

பேரக் குழந்தைகள்

தனியறை, தனிப்பொருள்கள்

துணையாய் தனிமை

இப்படியாய்ஒட்டாமல் தான் இருக்கிறது

அவள் பாத்திரம் வீட்டினுள்

மனதிலும் தான்..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற