திருக்குறள்

முடிக்காத கோலங்கள்

கனவு என்னும் கப்பலேறி
கற்பனைக் கடலினிலே
காததூரம் வந்து விட்டேன்
கேளீரே என் நண்பரே

நினைவு எனும் புயலடித்து
நீந்த முடியா ஆழத்தினில்
நிர்க்கதியாய் தவிக்க விட்டு
கனவுக் கப்பல் கவிழ்ந்ததம்மா

சொற்பநேர நிம்மதியும் என்
சொந்தமில்லை என்றேதான்
சொல்லாமல் சொல்லிற்று
சுயநலமிக்க காலக்கணிதம்

மூழ்குகின்ற பொழுதிலும்
முட்டி நிற்கும் ஆசைகள்
மூடனிவன் நெஞ்சினில்
முடிக்காத கோலங்கள்

நீர்க்குமிழி வாழ்வினிலே
நிலையென்று நம்பி மனிதன்
நிஜமுணரா வேளைகள்
நிகழ்கின்ற வேதங்கள்

-சக்திதாசன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற