ஆஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில் தற்போது அங்கு 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் மூளை முற்றிலும் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக, குடிப்பதால் மூளை வளர்ச்சி பாதிக்கப் பட்வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அர்பையாஸ் அமைப்பின் தலைவரும், லா டுரோஃப்ஸ் மனோத்தத்துவ சிகிச்சை மையத்தின் இயக்குநருமான மார்ட்டின் ஜேக்ஸன் கூறியுள்ளார்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவ முகாம்களை நடத்த அரசு அதிக நிதி ஒதுக்குவதுடன், உற்சாக பானங்களின் விளம்பரங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் மூளை பாதிப்பின் ஆரம்ப நிலைகள், வேலைப்பளு காரணமாக ஏற்படும் எரிச்சல், கோபம் ஆகியவையாகும்.
நாளொன்றுக்கு 6 சுமால் உற்சாக பானம் (!) அருந்துபவராக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் நினைவாற்றலை சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை குடிப்பதை நீங்கள் நிறுத்திவிட்டால் இந்த ஆபத்திலிருந்து நீங்கள் குணமடைவது எளிமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆல்கஹால் நமது உடலில் நேரிடையாக தீங்கை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது. எப்படியென்றால் மூளையில் உள்ள வெள்ளை அணுக்களை எரித்துவிடுகிறது
அண்மைக் காலமாக நம்நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறுத் துறைகளின் வளர்ச்சி காரணமாக பணப்புழக்கம் ஒரு சில மட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனால் கலாச்சார சீர்கேடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இளம் வயதிலேயே அதிக வருவாய் ஈட்டுபவர்கள் எளிதில் புகை பிடித்தல், உற்சாகபானம் அருந்துதல், போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. இதில் ஆண், பெண் அன்ற பாகுபாடு இல்லாத நிலை நிலவுகிறது.
சமூக அந்தஸ்த்துக்காக குடிக்கிறேன் என்று கூறிக் கொண்டு வருபவர்கள் எச்சரிக்கையாக நடக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் வாழவேண்டிய வயதில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தனிமரமாக வாழ வேண்டிய நிலை உருவாகும். சிந்தித்து செயல்படு இளைய சமுதாயமே என்கிறது மருத்துவ ஆய்வு முடிவுகள்.
- நன்றி
வெப்துனியா