- தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
- தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
- தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
- தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
- தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
- தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
- தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
- தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
- தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
- தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
- தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
- தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
- தருமம் தலைகாக்கும்.
- தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
- தலை இருக்க வால் ஆடலாமா ?
- தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
- தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
- தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
- தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
- தவளை தன் வாயாற் கெடும்.
- தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற