திருக்குறள்

கு

  1. குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  2. குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  3. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  4. குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  5. குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  6. குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  7. குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
  8. குணத்தை மாற்றக் குருவில்லை.
  9. குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  10. குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  11. குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  12. குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  13. குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  14. குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  15. குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  16. குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  17. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  18. குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  19. குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  20. குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  21. குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  22. குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  23. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
  24. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
  25. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  26. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  27. கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  28. குரங்கின் கைப் பூமாலை.
  29. குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  30. குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற