திருக்குறள்

மொட்டுக்கள் மலர்வதற்காக


-அனுகிரஹா

வாசமற்றுக் காத்திருக்கிறது
தோட்டம்;
வண்ணங்களற்று வெறித்திருக்கின்றன
விழிகள்;
விளையாட களமற்று
திரிகின்றன பட்டாம் பூச்சிகள்;
அலங்காரமற்று வழிபாட்டினில்
தெய்வங்கள்;
உவமைகளற்ற வறட்சியில்
கவிஞர்கள்;
இன்னும் தியானத்தில்மலர
மறுக்கும் மொட்டு;
அது விரிந்து மலர்ந்ததும்
வாடி உதிரலாம்
மலரும் நொடிகளின்
வாசத்தில் இல்லாது
மூடிய மொட்டின்
அமைதியில் இல்லை
அமரத்துவம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற