- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
- உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
- உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
- உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
- உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
- உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
- உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
- உரம் ஏற்றி உழவு செய்
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- உலோபிக்கு இரட்டை செலவு.
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
- உள்ளது போகாது இல்லது வாராது.
- உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
- உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற