திருக்குறள்

ஜெ -- அம்மா---

''பிறந்தது முதலே நான் என் அம்மாவுக்குச் செல்லம்தான்! சிறு வயதில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் என் அம்மா மிகவும் கடுமையாக இருந்தார். அது நான் பரத நாட்டியம் கற் றுக்கொள்ளவேண்டும் என்பது தான். ஆரம்ப காலத்தில் நான், நடன ஆசிரியரை வாசலில் பார்த்ததுமே, அம்மாவிடம் ஓடிச் சென்று, ''அம்மா, எனக்கு வயிறு வலிக்கிறது, தலை வலிக் கிறது'' என்று எதையாவது சாக்குச் சொல்லி வாத்தியாரைத் திருப்பி அனுப்பிவிடுவேன். சில நாட்களுக்குப் பிறகு, நான் ஏமாற்றுகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டார். நடன ஆசிரியர் வந்ததும், நான் அவரது அறைக்குச் சென்றால், ''உடம்புக்கு என்னவானாலும் சரி, நீ கற்றுக் கொள். பிறகு டாக்டரிடம் அழைத்துச் செல்கிறேன்'' என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னை நடனப் பயிற்சிக்கு அனுப்பி விடுவார். என் ஒவ்வொரு நடன நிகழ்ச்சியின்போதும் முன் வரிசையில் உட்கார்ந்துகொண்டு நட னத்தை உன்னிப்பாகக் கவனிப் பார். அன்று அவர் அவ்வளவு கண்டிப்புடன் எனக்குப் பரத நாட்டியம் கற்றுக்கொடுத்தது, இன்று என் திரையுலக வாழ்க் கைக்கு எவ்வளவு தூரம் பயன் படுகிறது தெரியுமா?''


சொன்னவர்:ஜெ.ஜெயலலிதா
(19.12.71-ல் ஜெயலலிதா எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ஒரு துளி)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற