திருக்குறள்

செ, சே, சை

செ
  1. செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  2. செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  3. செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  4. செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  5. செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  6. செயவன திருந்தச் செய்.
  7. செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  8. செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  9. செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  10. சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

 சே
  1. சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  2. சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  3. சேற்றிலே செந்தாமரை போல.
சை
  1. சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற