ரஜினி... கமல்... யார் மனிதன்.
9 டிசம்பர், 2010
வழக்கம் போல் மற்றுமொரு சர்ச்சையில் கமலஹாசன். இம்மாதிரியான சர்ச்சைகள், தனக்கான விளம்பரம் என்று நினைக்கிறாரோ.. என்னவோ. அது பற்றிய விபரம்...
"மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. "... என்கிற ரீதியில் உள்ளது அந்த செய்தி.
இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தால் தள்ளுபடியாக கூடிய வாய்ப்பே உள்ளது. கமலுக்கு பேச்சு சுதந்திரம் உள்ளதாக கமல் ஜால்ராக்கள் சொல்வார்கள். கமல் இல்லாததையா சொல்லி விட்டார். இந்து மதத்தில் இல்லாத ஆபாசங்களா என்று சில அறிவுஜிவிகள் கேட்பார்கள். காமம் தாண்டிய சிந்தனை கமலுக்கு இல்லை என்பது புரிகிறது.சரி இதற்கு என்ன தீர்வு. யாராக இருந்தாலும் ஒன்றை பேசுவதற்கு முன், எழுதுவதற்கு முன் - நாம் பேசுகிற பேச்சால், எழுதுகிற பேச்சால் ஏதேனும் அனர்த்தங்கள் நிகழ வாய்ப்புள்ளதா என்று யோசிக்க வேண்டும். யாரேனும் மனம் புண்பட்டு விடுமோ என்று அறிவுடன் யோசிக்க வேண்டும்.
தொடர்ந்து கமல் சர்ச்சைக்குரிய விஷயங்களில் அடிபடுவதால் அந்த யோசிக்கும் திறன் அவருக்கு இல்லை என்பது புலனாகிறது. அப்படிப்பட்ட நபரின் கருத்துகளை எடுத்து கொண்டு ஓயாமல் நீதிமன்றத்துக்கு செல்ல முடியுமா. நீதிமன்றங்களுக்கு வேறு வேலை இல்லையா. நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை தீர்க்கவே பல வருஷங்கள் ஆகும் எனும் போது, வழக்கு, நீதிமன்றம் எதற்கு. அவர் உங்களை விமர்சித்தால், நீங்கள் அவரை விமரிசிப்பது தானே ஆரோக்கியமான முறை.
அதானே இந்திய அரசியல் நமக்கு கற்று கொடுத்தது. ஒருவர் மீது ஊழல் குற்றம் சாட்டினால், பதிலுக்கு "நீயென்ன யோக்கியனா. நீ ஊழல் பண்ணலயா" என்று கேட்பது தானே முறை. அவருக்குள்ள கருத்து சுதந்திரம் உங்களுக்கும் உள்ளது தானே. அவர் அறிவுபூர்வமாக விமர்சித்தால், நீங்கள் அறிவுப்பூர்வமாக விமரிசியுங்கள். அறிவுகெட்டத்தனமாக விமர்சித்தால், நீங்களும் அறிவு கெட்டத்தனமாக விமரிசியுங்கள். கமலை போன்ற நிர்வாணிகள் வாழுகிற ஊரில் ஆடை கட்டியவன் முட்டாள் தானே.
ஆணும் பெண்ணும் சமம் எனும் போது, "நா சுவத்துல ஒண்ணுக்கு அடிப்பேன். உன்னால அடிக்க முடியுமா... வியர்த்தா நா சட்டைய கழட்டுவேன். உன்னால் கழட்ட முடியுமா" என்று அதிரடியாக அறிவுப்பூர்வமாக பேசுவார். விமர்சிக்கவே முடியாத அளவுக்கு, அவர் அப்பழுக்கற்றவரா. உத்தம புருஷரா... மகானா... எதுவும் கிடையாது. சராசரி மனிதன். கௌதமியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாகரீக நாயகன். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால் தானே நாகரீகங்கள் குறித்த அறிவை நாம் பெற முடியும்.
இரண்டு திருமணம் செய்த பிற்பாடு, "திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை" என்ற தத்துவத்தை உதிர்த்தவர். "உன் குழந்தையும், என் குழந்தையும்,
நம் குழந்தையும்" விளையாடுகின்றன என்பார்கள் மேல்நாடுகளில். கமல் புண்ணியத்தில் பாரத தேசத்தில் நாம் அதை காணும் பேறு பெறலாம்.
திரையுலகில், அவரது போட்டியாளராக கருதப்படுகிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு தந்தையாக இருந்து தம் பெண் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை அமைத்து, ஒரு இந்திய தந்தைக்குரிய கடமை என்ன என்பதை காட்டி இருக்கிறார். ரஜினியின் வளர்ச்சிக்கு என்ன காரணம். யாரையும் புண் படுத்தி பேசாத பாங்கு, அவரை வெற்றியாளனாகவே வைத்துள்ளது - இந்த வயதிலும். எம்.ஜி.ஆர் இருந்தவரை கலைஞரால் வெல்ல முடிந்ததா.
ரஜினி... கமல்... யார் மனிதன். ரஜினி மனிதன் மட்டுமல்ல -மாணிக்கம்.தவறு இல்லாத மனிதர்களும் இல்லை... தவறு இல்லாத மதங்களும் இல்லை... அதனால் இந்த கருத்து போர் முடியப்போவதில்லை.

Source - Osai