திருக்குறள்

ஐ.ஐ.எம். பாடத் திட்டத்தில் 'எந்திரன்'!

இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த ரஜினிகாந்தின் 'எந்திரன்' திரைப்படம், நிர்வாகப் படிப்பு மாணவர்களின் பாடத் திட்டத்தில் இடம்பெறவுள்ளது.

அகமதாபாத்தின் 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்'டின் பயிலும் முதுகலைப் படிப்பு மாணவர்களே ரோபோட் (எந்திரன்) படத்தைப் படிக்கப் போகிறவர்கள்!

முதுகலை மாணவர்களுக்கு எலெக்டிவ் கோர்ஸாக "Contemporary film industry: A business perspective" என்ற பாடம் அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் உள்ளது.

இதில், சமகால இந்திய திரைப்படங்களின் வர்த்தகம் தொடர்பாக விஷயங்கள் இருக்கும்.

2010 ஆம் ஆண்டில் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த எந்திரன் திரைப்படம், இந்தப் பாடப்பிரிவில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

அதேபோல், இந்தப் பாடப்பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு படம், ரஜினிகாந்தின் 'முத்து'.

'முத்து' படம், 'முத்து ஒடிரு மகாராஜா' மற்றும் 'முத்து: தி டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் ஜப்பான் மொழியில் தலைப்பிடப்பட்டு, அந்நாட்டில் வசூலை வாரிக் குவித்ததே, தற்போது இந்தப் பாடத்தில் இடம்பெற்றிருப்பதற்கான காரணம்.

எந்திரன் - தி டீச்சர்!
Source - vikatan

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற