திருக்குறள்

சீமான் – சீரியசா? காமெடியா?


சீமான் – சீரியசா? காமெடியா?

சீமானின் தமிழுணர்வையோ, அவரது ஈழ ஆதரவையோ குறை சொல்வதல்ல என் நோக்கம்..
ஆனால் அவர் செய்வது சொல்வது எல்லாம் அவரை ஒரு சுயநலவாதியாகவே காட்டுகிறது.. சினிமாவில் ஓய்வு பெற்றவர்களும், வெற்றி பெற முடியாதவர்களும் அரசியலை நோக்கிப் பார்வையைத் திருப்புவது இயல்பு.. சீமானும் அதே பாணியில், கலைஞரைத் தாக்கிப் பேசினால் மக்கள் நம்மைத் திரும்பிப்பார்ப்பார்கள், அப்படியாவது 2011ல் இல்லாவிட்டாலும் 2016ல் ஆவது நம் கட்சியை ஒரு சக்தியாக மாற்றிவிடலாம் என நினைக்கிறார்..
கலைஞரைக் குறை சொல்லும் அவர் ஈழத்திற்காகக் கலைஞர் செய்த தியாகங்களை மறைத்துவிட்டு ஏதோ தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என்பதைப் போல் பேசுகிறார்….சீமான் அவர்கள் சினிமாவில் முயன்று கொண்டிருக்கும்போதெல்லாம் ஈழம் பற்றி ஏன் பேசவில்லை… சீமான் ஈழம் பற்றி முதல் அறிக்கை விட்ட நாளன்றுதான் ஈழப் பிரச்சனை உருவானதா?
ஈழம், புலிகள், தமிழ் தேசியம் என மக்கள் முன் வீர வசனம் பேசிவிட்டு, இந்த மூன்றுக்குமே எதிரியான ஜெயலலிதாவை ஆதரிப்பேன் எனக் கூறுவது அரசியல் பித்தலாட்டமா? அல்லது அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டும் தெரிந்த ரகசியங்கள் எதுவும் உள்ளதா?
அப்பாவித் தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறிக் கொண்டே, தமிழகத்தில் சிங்களவன் எங்கே படித்துக் கொண்டிருக்கிறான், எங்கிருக்கிறான் என்று தெரியும், பட்டியல் இருக்கிறது என்றாரே…இது தான் வீரமா? அந்த சிங்கள மாணவர்கள் அப்பாவிகள் இல்லையா? ராஜீவ் படுகொலைக்காக அப்பாவித் தமிழர்களைக் கொல்கிறார்களே எனச் சொல்லிக் கொண்டு, ராஜபக்க்ஷேவின் தவறுக்காக அப்பாவி சிங்கள மாணவர்கள் மீது வன்முறையைத் தூண்டுவது தவறில்லையா?
சாதி அடையாளம் பூசிக் கொள்ளத் தயாரான உங்களை எப்படித் தமிழர்கள் பொதுவானவராக ஏற்றுக் கொள்ள முடியும்…
அரசியலில் ஈடுபடாமல் மக்கள் இயக்கமாக, ஈழ மக்களுக்கு ஆதரவு திரட்டும் அமைப்பாக இயங்கியிருந்தால் உங்கள் பின்னால் மக்கள் அணிதிரண்டிருப்பார்கள்….
அரசியல் ஆதாயம் தேடி, ஈழத்தை வைத்து இங்கு அரசியல் நடத்துபவர்கள் எல்லாம் ஒரு வகையில் சுயநலவாதிகளே…
Source
- தமிழ்குரல்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற