அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவரிடம் இருந்த பை யை பரிசோதித்தனர். அதில் ரூ.1.25 லட்சம் இருந்தது. 8 விலை உயர்ந்த வாட்சுகள், 10 வெள்ளி மோதிரங்கள், மதபிரசங்க சி.டி.கள் மற்றும் பல வங்கி பாஸ் புத்தகங்கள் இருந்தன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
விசாரணையில், அவரது பெயர் அப்துல்கனி(70) என்றும், சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்ததால், அவர் திருடனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், முதியவர் அதை மறுத்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.