திருக்குறள்

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?


சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?


மானமிகு கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து 
பிராண்டுகிறார்? 

மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?


ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்? 

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?


ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்? 

ராமன்தான் பெரியவன் - மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்? 

சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்? 

ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா? 

இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்? 

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியதில்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.


மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? 
இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் 
இவ்வளவுப் பெரிய தடபுடல்! 

ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் 
பெரிய விளம்பரம்.


அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் 
என்பதைப் புரிந்துகொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான
காரணம் சாங் கோபாங்கோமாக பஷ்டமாக பளிச்சென்று 
புரிந்து விடும். 

இதோ ஓர் எடுத்துக்காட்டு: 

கேள்வி: எனக்கு முன்னாள் இருந்த அமைச்சர்கள் என்ன ஃபார்முலாவைக் 
கடைப்பிடித் தார்களோ, அதையேதான் நான் கடைப்பிடித்தேன். நான் 
குற்றமற்றவன் என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?

சு.சாமி: ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் என்ன 
செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு 
செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன். 

--------------(குமுதம் ரிப்போட்டர் 5.12.2010 பக்கம் 43) 

இராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க., அமைச்சர்கள் என்ன செய்தார்கள்
 என்பது அவருக்குத் தேவையில்லையாம், ஏன் தேவையில்லை? 
விளக்கம் அளித்தாரா? 

விவாதம் புரிந்தாரா? 

அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது. 

பா.ஜ.க. அமைச்சர் தவறு செய்தால் அதைப்பற்றி அவருக்குக் 
கவலையில்லையாம்!


இராசா தவறு செய்தாராம், அதைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம். 

பா.ஜ.க. வைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் 
அவர்களைப் பற்றிப் பேசுவார்களா? 

பாரதீய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனீயத்தைப் பதியம் போட்டு 
வளர்க்கும் கட்சியாயிற்றே. அதன்மீது தூசு விழலாமா? அப்படி 
விழுந்தால் அதனைப்பொறுத்துக்கொள்ளத்தான் இவர்களால் 
முடியுமா? 

அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ். காரர் இவர் என்று எழுதுவது 
ஏனோ தானோ என்ற முறையில் அல்ல. அவரே வாக்கு மூலம் 
கொடுத்திருக்கிறார். அதுவும் எந்த இதழில்? அவாளின் 
ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதத்தில்
 (ஏப்ரல் 14, 2006) 

ஈரோட்டில் நடந்த வி.இ.பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே 
அரசியல்வாதி நீங்கள்? 

அரசியல்வாதியாக நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. 
ஒரு இந்து என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் 
கலந்துகொண் டேன். நான் வி.இ.பரிஷத் மேடைகளில் பேசுவது 
புதிது அல்ல. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு கடந்த 
2ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான வி.இ.பரிஷத் மேடைகளில் 
நான் பேசியிருக்கின்றேன். 

ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்கள் அபிப்ராயம்? 

நான் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக 
இருந்திருக்கிறேன். ஆர்கனைசர் வார இதழில் பல கட்டுரைகளை 
எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். 
இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னால் நன்கு அறிந்துகொள்ள 
முடிந்தது. நாட்டில் இந்து மனப்பான்மையை ஏற்படுத்துவதில் 
ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது.

-------------------------(விஜயபாரதம், 14.4.2006) 

இந்தப் பேட்டி பற்றி விளக்கவா வேண்டும்-விளக்கம் தேவையா 
இந்த பேட்டிக்கு? 

பெயர் - ஜனதா கட்சியின் தலைவர்- ஆனால் அவர் அடிப்படை 
உணர்வு என்பதோ ஆர்.எஸ்.எஸ். விசுவ ஹிந்து பரிசத் உள்ளிட்ட 
சங்பரிவார் பக்கம். 

இப்படிப்பட்டவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்து கொள்வார்? 
அப்படியே பேசுகிறார்- 
அப்படியே நடந்து கொள்கிறார். 

காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு அவர் மீது ஆர்வம் 
பீறிட்டுக் கிளம்பிவிட்டதாம். 2 ஆண்டுகளில் 20 விசுவஹிந்து 
பரிஷத் கூட்டங்களில் கலந்துகொண்டு முழங்கி இருக்கிறார். 

ஜெயேந்திரர் கைதுக்குக் காரணம் சோனியாவாம்-ஜெயலலிதா 
இல்லையாம். சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக ஜெயேந்திரரைக் 
கைது செய்தாராம் ஜெயலலிதா (ஜெயலலிதாவுக்கே உபயம்!). 

சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக எதற்காக ஜெயேந்திரரைக் 
கைது செய்ய வேண்டுமாம்? அப்படி எல்லாம் அவரைப் பார்த்துக் 
கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால் நான் யார் தெரியுமா, ஹார்வேடு 
பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துபவன் என்று தலைக்கனத்துடன் 
பேசுவார். 

அமர்த்தியா சென்னுக்கும் நோபல் பரிசு கிடைத்ததே, கிறிஸ்துவ 
சதி என்று சொன்ன கூட்டம் அல்லவா. அதே ஆர்.எஸ்.எஸ். பாணியில் 
ஜெயேந்திரரைக் கைது செய்ததற்கும் காரணம் சோனியா காந்தியாம். 

அப்படி யென்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் 
கொலையேசெய்யப்பட வில்லை - கொலை செய்யப்பட்டதாக சொல்வது 
எல்லாம் சோனியாவின்பிரச்சாரத் தந்திரம் என்று சொல்லுவதற்குக் கூட 
கூச்சப்படாத ஜென்மம் இது! இவ்வளவுக்கும் காஞ்சி சங்கராச்சாரி 
ஜெயேந்திர சரஸ்வதி மீதான குற்றம் சாதாரணமானதா? 

இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, 
பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-
இவையெல்லாம் குற்றம் இல்லையாம்! 

இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து 
வாங்குவாராம்;
20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் 
ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் 
பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது! 

கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் 
சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் 
தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு 
முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், 
பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து 
கிடைத்தன என்னும் விவரங்கள் 
விவரமாகவே தெரியும். 

முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது.


----------------மின்சாரம் "10-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற