திருக்குறள்

2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம் என்ன?

டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மவுனமாகவே இருந்து, ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர் தமிழக மக்கள்.

எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.

ஒரு ரூபாய் அரிசி, 
50 ரூபாய் மளிகைப் பொருட்கள், 
பொங்கல் பை, 
இரண்டு ஏக்கர் நிலம், 
மகளிர் சுய உதவிக் குழுக்கள், 
இலவச கான்கீரிட் வீடு, 
அவசர சிகிச்சைக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை, 
வாரத்திற்கு ஐந்து முட்டைகள், 
இலவச "டிவி' 

போன்ற எதுவுமே, ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சியை கரை சேர்க்கவில்லை.


விலைவாசி உயர்வும், நிரந்தர மின்வெட்டும், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும், விவசாயிகளின் கண்ணீரும், தேர்தல் என்ற ஒரே சுனாமியில், ஆளும் கட்சி சுழற்றி வீசப்பட்டு விட்டது.

அந்த சுனாமியில், கூட்டணியும், ஜாதி ஆதிக்கமும், பணப்பட்டுவாடாவும், அதிகார துஷ்பிரயோகங்களும், உடன்பிறப்புகளின் அராஜகங்களும், இலவச லேப் டாப்புகளும் கூட காணாமல் போனதென்பது தான் உண்மை.

பணத்தைக் கொட்டி, காலேஜ் சீட்டோ, அரசு வேலையோ வேண்டுமானால் வாங்கிவிடலாம்; ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமையை வாங்கி விட முடியாது என்பதை, அரசியல் கட்சிகள் இனிமேலாவது உணர்ந்து செயல்பட்டால், அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.



- Source.Vedanthngal

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற