திருக்குறள்

'இலக்கணப் பிழை' யாகும் நித்யானந்தன்-ரஞ்சிதாவின் லீலை

சைக்கிள் கேப்பில் லாரியே ஓட்டும் சினிமாக்காரர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை கிடைத்தால் விடுவார்களா...


நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரத்தை சுறுசுறுப்பாக சுட்டு சூடான சினிமாவாகத் தர முடிவு செய்துவிட்டது ஒரு குழு. அதுதான் 'இலக்கணப் பிழை' என்ற பெயரில் படமாகிறது!.

சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் பிழையால் அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது என்பதுதான் இலக்கணப்பிழை படத்தின் கதை.

யுவா எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் திரைக்கு வரத் தயாராகயிருக்கும் இலக்கணப் பிழை படத்தில் ஆட்டோகாரனான கதாநாயகன் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் படுக்கையறைக் காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கிறது.

சமீபத்தில் ஊடகங்களில் வெளியான சாமியார் நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி தொடந்து பேசப்பட்டு வருவதால், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள படுக்கறைக் காட்சியை நீக்கிவிட்டு, கொஞ்சமும் மாற்றமில்லாமல், சாமியாரின் படுக்கையறைக் காட்சிகள் போல அதே கோணத்தில் படமாக்கவுள்ளாராம் இயக்குநர் ஜோ.

இதில் கதாநாயகன் காலை கள்ளக் காதலி அமுக்கி விடுவது, உணவு அளிப்பது, மாத்திரை வழங்குவது, தண்ணீர் கொடுப்பது உள்பட, தமிழர்களுக்கு 'நன்கு பரிச்சயமான' அத்தனை காட்சிககளும் இந்தப் படத்தில் உண்டாம்.

இந்தப் படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி புதுமுகம்.

இலக்கணப் பிழை படத்தின் சில காட்சிகளை எடிட்டிங்கில் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர், பெரிய தொகை கொடுத்து தெலுங்கு உரிமையை வாங்கிக் கொண்டார் என்றார் இயக்குநர்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறதாம் இலக்கணப் பிழை!

- தட்ஸ்தமிழ்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற