திருக்குறள்

ஷார்ஜா: மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேருக்கு சட்ட உதவி-இந்தியா

துபாய்: ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களையும் காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.


பாகிஸ்தானியர் ஒருவரைக் குத்திக் கொன்ற சம்பவம் தொடர்பாககைது செய்யப்பட்ட 17 இந்தியர்களுக்கு சமீபத்தில் ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 பேரும் தங்களுக்கு எதிரான தண்டனையை எதிர்த்து 15 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம். இல்லாவிட்டால் தண்டனையை ஏற்றுக் கொண்டதாகி விடுமாம்.

இதையடுத்து 17 பேரையும் காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், இதுதொடர்பான அறிக்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் இந்திய தூதரக அலுவலகத்திடம் கேட்டுள்ளோம். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய உதவும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிவிரைவான நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதை தொடர்ந்து இந்திய தூதரகம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தீர்ப்பு நகலை கேட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

- Thanks
Thatstamil

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற