திருக்குறள்

ஞானிக்கு அடையாளம் தான் என்ன?

மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்களின் அடிப்படையான இரண்டு உணர்ச்சிகள்
பசி, காமம்.

மனித உடல் வளர்ச்சியில் பருவ வயது என ஒன்று இருப்பதும், அதை அடைந்ததும் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதும், ஆண் எனில் விந்து உற்பத்தி நிகழ்வதும் இயற்கையானது. தவிர்க்க முடியாததும் கூட.

‘நான் யார்?, மரனத்துக்கு பிறகான உலகம் நிஜமா?, இந்த பிரபஞ்ச‌த்தை இயக்குகிற ச‌க்தி எது?’ போன்ற கேள்விகளை விஞ்ஞான வழியில் இல்லாமல், மெய்ஞான வழியில் தேடிச் செல்வோரின் தொடக்கம் தான் துறவு மேற்கொள்ளுதல்.

மெய்ஞான வழியில் பயணம் மேற்கொண்டோர் வினாக்களுக்கு தேடிய விடைகளை அறிவாரானால், அவரை ‘ஞானி’ என அழைக்கிறார்கள். அவரது மறைவை ‘முக்தி அடைந்தார்’ என கூறுகிறார்கள். ஆன்மீக மொழியில் முக்தி அடைந்தவர் எனில்… அதுநாள் வரை அவர் உடலில் இயங்கு ச‌க்தியாக இருந்த உயிர்,(ஆன்மீக மொழியில் ஆன்மா) அவ்வுடலை விட்டு வெளியேறியதோடு பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் மீண்டும் சிக்காமல் பிரபஞ்ச சக்தியோடு இணைந்து விட்டது,(ஆன்மீக மொழியில் ஜீவாத்துமாவோடு) எனப் பொருள். இந்த ஒரு கிளைமாக்ஸை சொல்வதற்குதான் ஆண்டு தோறும் தோன்றும் சாமியார்கள், புதுப்புது திரைக்கதை வச‌னம் எழுதி மக்களை வசீகரித்து வருகிறார்கள்.

இப்படியான ஞானநிலையை அடைவதற்கு துறவு நிலை கட்டாயமா? என்றால் … மாறுபட்ட கருத்துகள் மார்க்கங்களுக்கிடையே உண்டு. குறிப்பாக, இஸ்லாம் மார்க்கம் பிர்மச்சாரியம் கூடாது’ எனக் கண்டிப்பாக கூறுகிறது. ‘ஒவ்வொரு ஆணும் இல்லற வாழ்க்கையைச் ச‌ந்தித்த பிறகே மரணத்தை தழுவ வேண்டும்’ என வலியுறுத்துகிறது. இந்து, கத்தோலிக்க கிருத்துவ மார்க்கங்களில் முழுமையான இறைப்பணியில் ஈடுபடுவோரை பிர்மச்சாரியம் மேற்கொள்ள வைக்கிறது. பிர்மச்சாரியம் கடைப்பிடிப்பதை விட, துறவு நிலை மேலும் கடினமானது. இயற்கையாக எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுத்தும், பெண் சுகத்தை துறக்க முன்வருதல் துறவரத்தின் முதல் நிலை தான்.

அதுமட்டுமே ஒரு துறவி, ஞானி ஆவதற்கு போதுமான தகுதி அல்ல. அந்தத் துறவி பெண் சுகம் மட்டுமல்லாது, எதன் மீதும் விருப்பமோ, ஆசையோ வைத்தல் கூடாது. ஞானநிலையை அடைய வேண்டும் என்னும் ஒரு பற்றைத் தவிர, இதர பற்றுகள் எதுவுமே, கூடவே கூடாது.

ஒரு துறவி, ஞானியாவதற்கான பயணத்தில் எப்படி இருப்பார்?

ஞானி என்பவர், ‘சாப்பிட பயன்படுமே’ எனக் கருதி ஒரு சிறிய கொட்டாங்குச்சியைக் (காய்ந்த தேங்காய் மூடி) கூட சொந்தமாக‌ வைத்திருக்க கூடாது. ‘சொந்தம்’ என சொல்லிக்கொள்ள உணவோ, இருப்பிடமோ, உடையோ, பொருளோ, நண்பர்களோ, பக்தர்களோ, செல்ல பிராணிகளோ, இருக்கக் கூடாது. உயர்ந்தவையோ, தாழ்ந்தவையோ, அமைச்ச‌ர், அதிகாரி, பணக்காரன், ஏழை கீழ்சாதி, மேல்சாதி என்ற வேறுபாட்டை உணரக்கூடாது. ஆயிரம் ரூபாய் தாளை யாராவது வழங்கினால், வாங்கிச் சுருட்டி வாயில் வைத்து பீடி போல் புகைக்கவோ, காதுகுடைய பயன்படுத்தவோ கூடும். இன்னும் ச‌ரியாக சொன்னால் புறத் தோற்றத்தால் மனநோயாளியும், ஞானியும் பல நேரங்களில் ஒன்று போல் தோற்றமளிக்ககூடியவர்கள் தான்.

இவர்களுக்கும் அவர்களது உடலில் சேரும் உணவின் ஊட்ட ச‌த்துக்களுக்கு ஏற்ப விந்து உற்பத்தி நிகழவே செய்யும். அது அவர்களது வயது, ஆரோக்கியம் பொருத்தே உற்பத்தி அளவு அமையும். உற்பத்தியான அவை எப்போதாவது வெளியேறவும் செய்யும். என்ன வேறுபாடு எனில், அதை வெளியேற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். இயற்கையாக வெளியேறுவதை அவர்கள் அறியவோ, அனுபவிக்கும் உணர்வோ அற்றே இருப்பர். இது தான் ஒரு நல்ல துறவி ஞானியாக பழுத்து வருவதற்கான அடையாளங்கள்.

நாட்டில் ஆசிரமம் வைத்து நடத்தும், யாரும் இந்த லெட்ச‌னங்களைக் கொண்டிருக்கிறார்களா? என்பதை பக்தர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

- யாணன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற