திருக்குறள்

'ஆன்-லைனை' கலக்கும் 'ஹைடெக்' மோசடி

நீங்கள் அதிர்ஷ்டசாலி. எங்கள் நிறுவனம் நடத்திய குலுக்கலில் ஆறுதல் பரிசுவிழுந்து உள்ளது. கமிஷனோ, டெபாசிட்டோ, பங்குத் தொகையோ எதுவும் வேண்டாம்.பணம் பரிமாற்ற தொகை 430 பவுண்ட் செலுத்தினால், பரிசுத்தொகையாக 18.50லட்சம் பவுண்ட்( இந்திய மதிப்பு ரூ.16 கோடி) கிடைக்கும்' என்று இமெயிலில்ஆசைக் காட்டி மோசடி செய்யும் வேலை நடக்கிறது.

மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் இமெயில் முகவரிக்குசெப்.,9ல் கடிதம் வந்தது. அதில், யாகூ/எம்.எஸ்.என் நிறுவனமும்,அமெரிக்காவின் லாட்டோ லாட்டரி நிறுவனமும் போட்டி ஒன்றை நடத்தியதாகவும்,ஒவ்வொரு இமெயில் முகவரிக்கும் ஒரு லாட்டரி எண் கொடுக்கப்பட்டதில்,வசந்தகுமார் இமெயிலுக்கு ஆறுதல் பரிசு விழுந்திருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டது. இது மோசடி வேலை என்று அறிந்த அவர், நமது சூப்பர்ரிப்போர்ட்டருக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து இந்த மோசடிகுறித்த தகவல்களை திரட்ட ஆரம்பித்தனர். செப்.,10ல் வசந்தகுமார்இமெயிலுக்கு மீண்டும் கடிதம் வந்தது. "உங்கள் வங்கி கணக்கு எண்,பாஸ்போர்ட் நகல், இன்டர்நேஷனல் வங்கி எண் ஆகியவற்றை உடனே அனுப்புங்கள்'என்றனர். வசந்தகுமார் அனுப்பினார். செப்.,11ல் "நீங்கள் அனுப்பிய விபரம்திருப்தி தருகிறது. உங்கள் பரிசுத்தொகை 16 கோடி ரூபாய் "அலைடு ஐரீஷ்வங்கி'யில் டெபாசிட் செய்ததோடு, இன்சூரன்ஸூம் செய்துள்ளோம்' என்றுஅதற்குரிய போலி சான்றுகள் அனுப்பினர்.

செப்.,11 இமெயிலில் "நீங்கள் பணம் பெறுவதற்குரிய பரிவர்த்தனை எண்ணை,அலைடு வங்கி அதிகாரியிடம் தெரிவிக்கவும்' என்று தெரிவிக்கப்பட்டு,அதிகாரியின் இமெயில் முகவரி தரப்பட்டது. அந்த அதிகாரியையும் வசந்தகுமார்தொடர்பு கொண்டார். "நீங்கள் எந்த பணமும் செலுத்த வேண்டாம். பணம்பரிவர்த்தனைக்காக 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும். 12 மணிநேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் பரிசுத்தொகை விழும்' என்று அவர்தெரிவித்தார். "அவ்வளவு பணம் செலுத்தும் அளவிற்கு வசதி வாய்ப்பற்றவன்.வேண்டுமானால் எனக்காக நீங்கள் பணம் கட்டுங்கள். பரிசுத்தொகை கிடைத்தவுடன்திருப்பி தந்துவிடுகிறேன்' என்று வசந்தகுமார் எச்சரிக்கையாக பதில்அளித்தார். டென்ஷனான அந்த நபர், "நீங்கள் அசால்ட்டாக இருக்க வேண்டாம்.காலதாமதம் செய்தால் பரிசுத்தொகை குறையும்' என எச்சரிக்கை செய்தார்.

செப்.,12ல், "30 ஆயிரம் ரூபாய் செலுத்த தயாராக இருக்கிறேன். 10 ஆயிரம்ரூபாய் நீங்கள் செலுத்த முடியுமா' என்று வசந்தகுமார் கேட்டார்."பரவாயில்லை. அந்த பணத்தை செலுத்தி விடுகிறோம். முதலில் பணத்தைகட்டுங்கள்' என்றுகூற, சில நிமிடங்களில் ஒருவர் முதன்முறையாக இமெயில் களைவிட்டு போனில் தொடர்புக்கொண்டார். மொபைல் போன் டிஸ்ப்ளேயில் எந்தநம்பரிலிருந்து பேசுகிறார் என்பது தெரியாமல் இருக்க"நோ நம்பர்' எனஇருந்தது. அவர் எங்கிருந்து பேசுகிறார் என்று புலனாய்வு செய்ததில்,நைஜீரியாவிலிருந்து பேசியது தெரியவந்தது. அந்த நபர் அமெரிக்காவில் ஒருவங்கியில் பணம் செலுத்தும்படி, கணக்கு எண்ணை கொடுத்தார். வசந்தகுமார்பணம் செலுத்தவில்லை. தற்போது "ஐ.எஸ்.டி.' போன் கால் செலவானாலும்பரவாயில்லை என்று, பரிசுத்தொகையை வாங்க பணம் செலுத்தும்படி, தொடர்ந்துஅந்த நபர் வசந்தகுமாரை வற்புறுத்துகிறார்.

இதுமட்டுமல்ல, "பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு ஆயிரக்கணக்கான கோடிசொத்து இருப்பதாகவும், அதை உங்கள் வங்கி கணக்கில் பாதுகாத்தால், 30சதவீதம் கமிஷன் தருகிறோம், அதற்கு பணம் செலுத்த வேண்டும்' என்றும்ஜாக்சன் செயலாளர் ஜான் பிராங்கா பெயரிலும் போலி இமெயில் உலா வருகிறது.இது போன்ற மோசடி இமெயில்களால் பணத்திற்கு சபலபட்டு ஏமாந்தவர்கள்எண்ணிக்கை பல நூறை தொடும். வெளியே தெரிந்தால் அவமானம் என்று எல்லாம்தொலைத்து விட்டு கம்ப்யூட்டர் முன் முடங்கி கிடக்கின்றனர்.

இதுபோன்ற "ஆன்-லைன்' மோசடிகளை தடுக்க முடியாதா என்று சைபர் கிரைம்போலீசாரிடம் சூப்பர் ரிப்போர்ட்டர் கேட்டபோது, "நேர்மையாக போட்டி நடத்திபரிசுத்தொகை அறிவிப்பவர்கள் தங்களது நிறுவன இமெயிலில்தான் தெரிவிப்பதுவழக்கம். பொதுவாக இருக்கும் யாகூ இமெயிலை பயன்படுத்துவதில்லை. அப்படிபயன்படுத்துபவர்களை மோசடி பேர்வழிகள் என தெரிந்து கொள்ளலாம். முழுமுகவரியும் தருவதில்லை. சிலர் "நெட்வொர்க்' அமைத்து இந்த மோசடிகளில்ஈடுபடுகின்றனர். சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதுபோன்றகுற்றங்களை தடுக்க முடியும். பேராசைப்பட்டு இந்த வலையில் விழாமல்இருப்பது அவரவர் சாமர்த்தியம்' என்றனர்.

- தமிழ் உலகம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற