திருக்குறள்

கமல் தமிழ் இனத் துரோகியா?

இலங்கையில் ஜூன் மாதம் நடக்க விருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவிற்கு எதிரான கிளர்ச்சிகள் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டை முற்றுகையிட்டு "அமிதாப்பச்சனே...... ஈழத் தமிழினத்தை கொன்று குவித்த ராஜபக்சே அரசு நடத்தும் இந்த விழாவில் கலந்து கொள்ளக் கூடாது' என்று ஆர்ப்பரித்துள்ளனர் மும்பை யில் உள்ள "நாம் தமிழர்' இயக் கத்தினர். அப்போது வீட்டில் இருந்த அமிதாப், தனக்கு எதிராக போராட்டம் நடத்திய "நாம் தமிழர்' இயக்கத்தின் நிர்வாகிகளை அழைத்து அவர்களின் உணர்வுகளை கேட்டறிந்ததுடன் இது பற்றி என் நிலையை விரைவில் தெரிவிக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.


இதே விழாவில் தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் களும் தொழில்நுட்பவியலாளர்களும் கலந்துகொள்ள தீர்மானித்திருப்பதால் அவர்களுக்கு எதிரான போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் தமிழகத்தில் நடத்த, நாம் தமிழர் இயக்கம், இந்து மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணனிடம் கேட்டபோது, ""இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டமைப்பின் கீழ் ஐ.ஐ.எஃப்.ஏ. என்கிற சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. முதன் முதலில் 2000-த்தில் துவக்கப்பட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு வருஷமும் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. உலக நாடுகளில் இந்திய திரைப்படத்தின் தொழில் வணிகத்தை பெருக்கவும் ஹிந்தி திரைப்படங்களை வெளிநாடுகளில் முதன்மைப் படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கம். இந்திய திரைப்பட விருதுகள் என்றாலும் இதுவரை ஒரு தமிழ்த் திரைப்படத் திற்கும் விருது வழங்கப்பட்டதில்லை.

இதற்கு முன்பு லண்டன், துபாய், நெதர்லாந்த் உள்ளிட்ட பல நாடுகள் இந்த விழாவை நடத்தியிருக்கிறது. அப்போது அந்த நாடுகளின் சுற்றுலா பொருளாதாரம் பன்மடங்கு அதி கரித்தது. இதனாலேயே இந்த விழாவை நடத்த பல நாடுகள் போட்டி போடுகின்றன. இந்த விழாவை இந்த வருஷம் தங்கள் நாட்டில் நடத்த கனடா, அயர்லாந்த், தென்கொரியா ஆகிய 3 நாடுகள் போட்டி போட்டது. இறுதியாக தென்கொரியாவில் நடத்துவ தென்று முடிவெடுக்கப்பட்டது. பிப்ரவரி 27 வரை இதான் முடிவு.

திடீரென்று இலங்கையின் சுற்றுலா அமைச்சர் அச்சலாஜகோடா, "சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை இலங்கை நடத்துகிறது' என்று அறிவித்தார். இது பற்றி நாங்கள் விசாரித்த போது, போர் நடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங் கையை காப்பாற்றிக்கொண்டிருந்தது ஐரோப்பிய நாடுகள் வழங்கி வந்த வர்த்தகத்திற்கான வரிச்சலுகைகள்தான். யுத்தத்திற்குப் பிறகு ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்காக இந்த வரிச்சலுகையை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தன ஐரோப்பிய நாடுகள். இதனால் இன்றளவும் பொருளாதார வீழ்ச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறது ராஜபக்சே அரசு. இதனை சரிக்கட்டத்தான் இந்திய அரசின் உதவியுடன் விழாவை இலங்கைக்கு கடத்தியிருக்கிறார் ராஜபக்சே. இந்த விழாவை நடத்துவதன் மூலம் உலக நாடுகளில் உள்ள தொழில் நிறு வனங்களும் சுற்றுலா பயணிகளும் எவ்வித பயமுமின்றி இலங்கைக்குள் வருவார்கள். அதன் மூலம் இலங்கை யின் பொருளாதாரம் மேம்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

அதனால் இந்த விழாவை பிரமாண்டப்படுத்த ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், இவரது மனைவி ஜெயாபச்சன், கரன் ஜோகர், மன்மோகர் ஷெட்டி, பகலஜ் நிஸ்லாணி, ரமேஷ்ஷிப்பி, ஷான் சிராப், வினோத்கண்ணா உள்ளிட்ட பிரபலங்களை விழாவின் தூதராக நியமித்துள்ளது இலங்கை. தவிர அமிதாப், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஹிந்தி பிரபலங்களின் ஆட்டம் பாட்டம் என கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் இந்தியாவி லிருந்து அனைத்து மொழிகளையும் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கேமராமேன்கள், டெக்னிஷியன்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களை தவிர இந்தியா உள்பட சர்வதேச நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்களும் கலந்துகொள்கிறது.

இந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, மாதவன், விஜய், அஜீத், டைரக்டர் மணிரத்னம் உள்ளிட்டோரை கூட்டமைப்பின் வாயிலாக அழைத்திருக்கிறது இலங்கை அரசு.

ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே அரசின் அழைப்பை ரஜினிகாந்த் மட்டும் நிராகரித்து விட்டார். கமலஹாசனும் மணிரத்னமும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களின் நிலை என்ன வென்று தெரியவில்லை.

கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டி சீனாவில் நடந்தது. ஒலிம்பிக் ஜோதியை இந்தியா வுக்கு எடுத்து வந்தபோது, திபெத்தியர்களை சீனா அடி மைப்படுத்தி வைத்துள்ளதை சுட்டிக்காட்டி ஜோதியை வாங்க மறுத்தவர் இந்திய கால்பந்து டீமின் கேப்டன் பாய்சுங் பூட்டியா. அவரது உணர்வுகளில் 1 சதவீதமாவது நமது ஹிந்தி திரைப்படத் துறையினருக்கும் தமிழகத் திரைப்படத் துறையினருக்கும் இருக்கவேண்டாமா? இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழக திரைத்துறையினர் யார் சென்றாலும் அவர்களுக்கு எதிரான போராட்டம் தீவிர மடையும்'' என்று விரிவாகவும் ஆவேசமாகவும் பேசினார் கண்ணன்.

அமிதாப்பிற்கு எதிரான போராட் டங்களை முன்னெடுத்துள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானிடம் பேசிய போது,

""மும்பையில் மட்டுமல்ல தமிழகத்திலும் இந்த போராட்டங்களை முன்னெடுக்க விருக்கிறோம். இலங்கைக்கு செல்வதை பரிசீலிப்பதாக அமிதாப் சொல்லியிருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளையும் ஈழத்தில் ராஜபக்சே நடத்திய கொடூரங்களையும் திரைப்படத்துறையினர் உணர வேண்டும். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இவ்விழாவில் யார் கலந்துகொண்டாலும் அவர்கள் தமிழினத் துரோகிகள். அந்த துரோகிகளை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிரான எங்களின் கிளர்ச்சிகள் வீரியமாக எழும்'' என்கிறார் கோபமாக.

-இளையசெல்வன்
நக்கீரன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற