திருக்குறள்

ஐ.பி.எல் பார்க்கிற தமிழா கொஞ்சம் இவங்களையும் பாரு..

ஒரு வார இதழில் வெளிவந்த கட்டுரை..

உலகத்தின் கண்கள் பார்த்திருக்க, உப்புக்காற்று மெள்ள மெள்ள உயிர் குடிக்க, நடுக்கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள் இன்னமும் கரை சேரவில்லை. ஆறு மதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் 260க்கும் அதிகமான தமிழர்கள் 'எங்களை அகதிகளாக என்றுக் கொள்ளுங்கள் ' என அனைத்துலகம் நோக்கி கையேந்தி நிற்கின்றனர். ஆஸ்திரேலியா மறுக்கிறது. இந்தோனேசியா எதிர்கிறது. என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் தத்தளித்து நிற்கின்றனர் ஈழத்தமிழர்கள்.


01 .10 .2009 இல் இலங்கையில் தொடங்கிய பயணம் இது. ஆஸ்திரேலியாவுக்கு சென்று அகதிகளாக தஞ்சம் கோருவது அவர்களின் நோக்கம். இடையில் இந்தோனேசியா கடற்படை மடக்க, 'நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றது ஆஸ்திரேலியா. 'பாதுகாப்பை'க் காரணம் காட்டி இன்னமும் மறுத்துக்கொண்டே இருக்கிறது. ஆறு மதங்கள் முடிந்துவிட்டன. இலங்கையில் யுத்தமும் முடிந்துவிட்டது. இன்னமும் இவர்களின் கடல் வாழ்கை முடியவில்லை. படகில் மிக குறைந்த இடத்தில 260 பேர் நெருக்கி அடித்து வாழ்வதால், நோய்கள் பெருகிக்கிடக்கின்றன. மருத்துவ வசதிகள் இன்றி ஒருவர் இறந்தும் விட்டார். உண்ணா விரதமும் இருந்து பார்த்தார்கள். ஒன்றும் நடக்க வில்லை. உலகமே பார்த்திருக்க 260 பேரை கடல் சிறை வைத்து கொலை செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இதை ஒரு செய்தியாக கூட உலகம் பேசவில்லை. தீபாவளிக்கு பட்டாசும், பொங்கலுக்கு கரும்பும் விற்கும் 'சீசன் பிசினஸ்'போல இலங்கையில் யுத்தம் நடந்த போது மட்டும் அதை பேசி மறந்து போனோம்.

கப்பலில் இருக்கும் சொந்தங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை தொலை பேசுகின்றனர். 'எதாவது செய்யுங்கள் அண்ணா'என்று கதறுகின்றனர். ஓங்கி அழுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்னால்?. அழுதால் கூட இறையாண்மைக்கு கேடு வந்துவிடும் என்கிறார்கள். மனிதர்கள் சாவதைப்பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. இறையாண்மைக்கு மட்டும் கெட்டு விடக்கூடாது. புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து கொன்றொழித்தது. எங்கள் இனத்தை கதறடிக்கவும் சிதறடிக்கவும் தானா?.. வெடிக்கும் கோபத்துடன் சீறுகிறார் நான் தமிழர் இயக்கத்தின் சீமான்.

தமிழர்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்டுள்ள இந்திய பேரரசு ..எதை எதையோ உளவு பார்க்கிற இந்திய பேரரசுஇந்தோனேசிய கடற்கரையில் மட்டும் தத்தளிக்கும் தமிழர்களை மட்டும் அறிந்திருக்கவில்லையா. கர்பிணிப்பெண்கள், சின்னக்குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என வாழ வழியற்றவர்கள் தான் அந்த படகில் உள்ளனர். வேறு கதியற்ற அவர்களை அன்போடு அரவணைத்து எங்கள் நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நீங்களும் வாழுங்கள் என அழைத்து வருவதில் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை?. 25 ஆண்டுகால யுத்தத்தில் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கனோர் புலம் பெயர்ந்து தமிழகத்தில் வாழ்கின்றனர். அவைகளோடு சேர்த்து இந்த 260 பெரும் வாழ்வதில் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

இதற்கு முதலில் தமிழக அரசு அவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மத்திய அரசிடம் முறையிட வேண்டும். அதான் பிறகு அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு, இந்தியா அரசு தலையிட்டு அவர்களை அழைத்து வார வேண்டும். ஆனால் தமிழக அரசு, 'இலங்கையில் ஓர் இனப்படுகொலை நடந்திருக்கிறது' என்று ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. தமிழர்களை நடுக்கடலில் சாக விட்டு புதிய சட்டமன்ற வளாகமும் உலக செம்மொழி மாநாடும் யாருக்காக?. இதை தமிழக அரசு என்றோ தமிழனுக்கான அரசு என்றோ நாங்கள் எப்படி நம்புவது?. எல்லா தேசங்களுக்கும் ஒரு இறையாண்மை இருப்பது போல் தமிழன் என்ற தேசிய இனத்துக்கு என ஒரு தனித்த இறையாண்மை இருக்கிறது. அதை என் மறந்தீர்கள்?.தலையை பறிகொடுத்துவிட்டு அப்புறம் எங்கே தமிழனென்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்பது.?

இந்தியா கடல் எல்லையில் கிட்டத்தட்ட 500 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்கள். அதனால் சுட்டோம். என இலங்கை அரசு காரணம் சொல்லியது. ஆனால் என் நாட்டு மீனவன் ஆயுதம் கடத்தினான் என்று சுட்டுக்கொன்றாயே .. அவன் கடத்திய ஆயுதம் எங்கே..? என ஒருமுறை கூட இந்தியா கேட்டது இல்லை. இலங்கையும் கொடுத்தது இல்லை. உலகத்தின் வலிமை மிக்க ராணுவம் கடல் எல்லையில் தான் நாட்டு மீனவனுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் 500 பேர் சுடப்பட்ட போது ஒரே ஒரு தடவையேனும் இந்தியா கடற்படை நம் மீனவர்களை காப்பாற்ற முயற்சித்தது இல்லை. அல்லது சிங்கள கடற்படையை திருப்பி தாக்கியதாக ஒரு செய்தி கூட இல்லை. அப்படியானால் நீங்கள் செய்வது பாதுகாப்பு பணியா?. இல்லை உல்லாசப் பயணமா?..அன்று புலிகள் இருந்தார்கள் சரி..இன்று தான் யாரும் இல்லையே..இப்போதும் தமிழக மீனவனை சிங்கள ராணுவம் சுடுகிறது. அடிக்கிறது. வழக்கம் போல இந்திய ராணுவம் வேடிக்கை பார்கிறது.

இத்தனை கோடி மக்கள் வேடிக்கை பார்த்திருக்க இந்த நவீன யுகத்தில் பட்டினியிலும் பிணியிலும் அம்மக்களை தவிக்க விடுவது பெரும் பாவம். இல்லை எனில் கடலில் கதறி துடிக்கும் ஒவ்வொரு தமிழனின் குரலும் இந்த இனத்தின் நிங்காச் சாபமாக மாறும். இத்தனை கோடி மனிதர்கள் வாழும் உலகில் தங்களுக்கு ஓர் ஆதரவு இல்லையே என்று ஏங்கி ஏங்கி எம் தமிழ் மக்கள் உதிர்க்கும் ஏக்க வெப்பம் ஒட்டுமொத மனித குலத்துக்கும் நிரந்தர சாபமாகும்..!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற