அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று, அடியோடு இடித்தார் பாபர் மசூதி, அன்று! வருங்காலத் தமிழகத்தின் வளம் பெருகாமல் தடுத்திட வரலாற்றைத் திரித்து சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார் இன்று! என்று கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.அவர் இன்று எழுதியுள்ள கவிதை வருமாறு:
சாதிக்கப் போவது யாரு?
சாதிக்கு அப்பாலே யாரோ, அவரு!
மதச் சார்பில்லா ஆட்சிக்குத் தான்
மனித நேய ஆட்சி என்று பேரு!
மத நல்லிணக்கம் காண்பதே நமக்கினி வேதம்
மற்றவை யெல்லாம் நம்மிடை விளைக்கும் பேதம்!
மதம் சார்ந்த கட்சிகள் வாழ்வதற்கு உரிமை உண்டு. அவை
மனிதர்களை இருட் சிறையில் பூட்டுவதற்கு உரிமை
உண்டோ?
அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று
அடியோடு இடித்தார் பாபர் மசூதி, அன்று!
வருங்காலத் தமிழகத்தின் வளம் பெருகாமல் தடுத்திட
வரலாற்றைத் திரித்து சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார்
இன்று!
இதையெல்லாம் எண்ணிப் பார்த்து,
இயல்பான பகுத்தறிவுக்கு மாறாக இயற்றிய சாத்திரங்களை
புயல் வேகம், புது வேகம் கொண்டுபுதைத்திடுவோம்,
ஆயிரம் அடி ஆழத்திலே!